சிவகார்த்திகேயன் படங்களுக்கு அரசியல் கட்சிகள் ஆதரவு.. 2031 சி.எம்.. எஸ்கேவை தாக்கும் ப்ளூ சட்டை மாறன்

சென்னை: சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் பராசக்தி அவருக்கு 25ஆவது படமாகும். சுதா கொங்கரா இயக்கியிருக்கும் அப்படம் ஜனநாயகனைவிடவும் அதிக எதிர்பார்ப்பை பெற்றிருக்கிறது. ஜனநாயகன் பகவந்த் கேசரியின் ரீமேக் என்பதால் அதற்கான ஹைப் கொஞ்சம் குறைவாகவே இருக்கிறது. நேற்று வெளியான பராசக்தி ட்ரெய்லரும் எதிர்பார்ப்பு தீயை மேலும் பரவ செய்திருக்கிறது. இந்நிலையில் ப்ளூ சட்டை மாறனின் ட்வீட் ட்ரெண்டாகியுள்ளது.

அமரன் படத்தின் மெகா ப்ளாக் பஸ்டர் சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டை உச்சத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது. அந்தப் படம் உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய்வரை வசூலித்தது குறிப்பிடத்தக்கது. இனி அவருக்கு அமரன் மாதிரி ஒரு படம் அமையாது என்றே பலரும் சொன்னார்கள். ஆனால் அதையும் தாண்டிய படமாக அவரது 25ஆவது படமான பராசக்தி அமையும் என்ற நம்பிக்கை அவரது ரசிகர்களிடம் எழுந்திருப்பது கவனிக்கத்தக்கது.

என்ன காரணம்?: அதற்கு ஒரே காரணம் படத்தின் கதைதான். ஹிந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் நடந்த போராட்டம்தான் படத்துடைய அவுட் லைன். அந்த லைனுக்குள் சகோதர பாசம் உள்ளிட்டவைகளை சேர்த்து ஆர்ட் ஃபார்மாகவும், கமர்ஷியல் வேல்யூக்களுடனும் இப்படம் உருவாகியிருக்கிறது. வெகு சில நடிகர்க்ளுக்கே 25ஆவது படம் சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. அந்த லிஸ்ட்டில் சிவாவும் இணைந்துவிடுவார் என கண்டிப்பாக நம்பலாம்.

Blue Sattai Maran Targets Sivakarthikeyan After Parasakthi Trailer Buzz
Photo Credit:

பட்டையை கிளப்பிய ட்ரெய்லர்: சில நாட்களுக்கு முன்பு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்த சூழலில்; நேற்று பராசக்தி ட்ரெய்லர் வெளியானது. ட்ரெய்லரை பார்த்த ரசிகர்களோ, 'இது கண்டிப்பாக மெகா ப்ளாக் பஸ்டர் ஆகிவிடும். இப்போதே கொண்டாட்டத்தை ஆரம்பித்துவிடலாம்' என குதூகலிக்கிறார்கள் எஸ்கே ரசிகர்கள். ட்ரெய்லரில் ஒவ்வொரு ஷாட்டும் அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்துவதாக இருக்கிறது. சுதா தரமான செய்கையை இந்தப் படத்தில் செய்திருப்பார் போல.

ஜனநாயகன் Vs பராசக்தி: இதற்கிடையே படமானது ஜனவரி 14ஆம் தேதி ரிலீஸிலிருந்து ஜனவரி பத்தாம் தேதிக்கு வந்திருக்கிறது. இதனால் விஜய்க்கும், சிவகார்த்திகேயனுக்கும் இந்தப் பொங்கலில் போட்டி உருவாகியுள்ளது. ஆனால் இந்தப் போட்டியை விஜய் ரசிகர்கள் விரும்பவில்லை. பராசக்தியை வெளியிடுவது ரெட் ஜெயன்ட் மூவிஸ். அந்த நிறுவனத்தின் பின்னணியில் திமுக இருக்கிறது. அதன் ஆதரவோடுதான் சிவகார்த்திகேயன் ஜனநாயகனை எதிர்க்கிறார் என்றெல்லாம் பேச்சுக்கள் கிளம்பியிருக்கின்றன. ஆனால் இதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை ஆடியோ லான்ச்சில் தெளிவுப்படுத்திவிட்டார் சிகா.

ப்ளூ சட்டை மாறன் ட்வீட்: இந்நிலையில் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில், "அமரன் படத்துக்கு பாஜக ஆதரவு. பராசக்திக்கு திமுக ஆதரவு. நம்ம வண்டி நேக்கா ஓடுது.இனி நான்தான் தமிழ் சினிமாவோட விஜய். நான்தான் 2031 சி.எம். - திடீர் தளபதி" என்று குறிப்பிட்டிருக்கிறார். இதை பார்த்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள், ப்ளூ சட்டை மாறன் ஏன் இப்படி தொடர்ந்து சிவாவை எதிர்த்துவருகிறார் என்றே தெரியவில்லை. அபாண்டமாக பேசுகிறார். அவரது வளர்ச்சியை சுத்தமாக ப்ளூ சட்டையால் ஜீரணிக்க முடியவில்லை என்பதை ஒவ்வொரு நாளும் நிரூபித்துவருகிறார் என பதிலடி கொடுத்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X