கமல்ஹாசனின் தக் லைஃப்.. மாமனாரின் இன்ப வெறிதான் படம்.. கிழித்து தொங்கவிட்ட ப்ளூ சட்டை மாறன்

சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்திருக்கும் தக் லைஃப் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. திரிஷா, சிம்பு என பெரிய நட்சத்திர பட்டாளமே களமிறங்கியிருந்த அந்தப் படம் படுதோல்வியைத்தான் சந்தித்திருக்கிறது. தோல்வி என்பதை தாண்டி இந்தியன் 2 எப்படி பலரால் ட்ரோல் செய்யப்பட்டதோ அதே நிலைமைக்கு தக் லைஃப்பும் சென்றிருக்கிறது. இந்தச் சூழலில் ப்ளூ சட்டை மாறனும் தனது பங்குக்கு விளாசியிருக்கிறார்.

கமல்ஹாசனும், மணிரத்னமும் நாயகன் படத்துக்கு பிறகு இணைந்த படம் தக் லைஃப். இதில் கமலுடன் சிம்பு, திரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி, அசோக் செல்வன், நாசர், ஜோஜு ஜார்ஜ் என பலர் நடித்திருக்கிறார்கள். ஏற்கனவே இரண்டு பேரும் சேர்ந்து ஒரு கல்ட் க்ளாசிக் படத்தை கொடுத்திருப்பதால் இப்படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. அதே எதிர்பார்ப்புடன் நேற்று தியேட்டருக்கு சென்றார்கள் ரசிகர்கள்.

வெறுத்துப்போன ரசிகர்கள்: ஆனால் அவர்கள் வைத்திருந்த எதிர்பார்ப்புக்கு படம் கொஞ்சம்கூட நியாயம் செய்யவில்லை. அறிவிப்பு வீடியோவில் வந்த வசனத்தை பார்த்து இந்தப் படம் தரமான கேங்ஸ்டர் படமாக இருக்கும் என்று நினைத்திருந்தார்கள். ஆனால் அந்த வீடியோவில் வந்த லைனுக்கும், படத்தின் கதைக்கும் துளிகூட சம்மந்தம் இல்லாமல் இருந்தது பெருத்த ஏமாற்றத்தை உண்டு பண்ணியது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கதை ரீதியாகவும் படம் ட்ரோலை சந்தித்தது.

Blue Sattai Maran Thug Life Review He Trolls Story And Kamal Haasan
Photo Credit:

சிந்து சமவெளி: அதாவது கமலும் அவரது வளர்ப்பு மகனுமான சிம்புவும் திரிஷாவை அடைவதற்கு போட்டி போடுகிறார்கள். இதுதான் படத்தின் ஒன்லைன் என படம் பார்த்தவர்கள் கூறுகிறார்கள். முக்கியமாக இந்தப் படத்தின் ஒன் லைனும் சாமி இயக்கி அமலா பால் நடித்த சிந்து சமவெளி படத்தின் லைனும் ஒன்றுதான். இதற்கு தக் லைஃப் என்று பெயர் வைத்ததற்கு பதிலாக சிந்து சமவெளி 2 என்று வைத்திருக்கலாம் என ட்ரோல் செய்து கிழித்துவருகின்றனர்.

ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: இந்நிலையில் படம் குறித்து பிரபல திரை விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தை முன்வைத்திருக்கிறார். அவர் தனது யூடியூப் பக்கத்தில், "முதலில் இந்தப் படத்துக்கு தக் லைஃப் என்று பெயர் வைத்தார்கள் என்பதை பார்த்தவுடன், தக்கீஸ் பற்றிதான் படம் இருக்கும்; வடநாட்டில் இருக்கும் ஒரு கொள்ளை கும்பலை அடிப்படையாக வைத்துதான் படம் உருவாக்கியிருக்கிறார்கள் என்று சமூக வலைதளங்களில் பேசினார்கள்.

அதெல்லாம் இல்லை: ஆனால் அதெல்லாம் படத்தில் இல்லவே இல்லை. படத்தில் சிம்புவுக்காக சந்திரா என்ற பெண்ணை தேடிப்போகும் கமல்; சந்திரா கிடைக்கவில்லை இந்திரா (திரிஷா) கிடைத்துவிட்டார் என்று சொல்லி இந்திராவை அழைத்து வந்துவிட்டார். ஆனால் தனக்காகத்தானே இந்திராவை அழைத்து வந்தீர்கள். பிறகு என்னிடம்தானே விட்டிருக்க வேண்டும் என்று சிம்பு கோபப்படுகிறார். படம் கேங்ஸ்டர் படம் என்று சொல்கிறார்கள்.

மாமனாரின் இன்ப வெறிதான்: ஆனால் கேங்ஸ்டர்களுக்கான எந்த சீனும் படத்தில் இல்லை. மாமனாரின் இன்ப வெறி, பிட்டு படம் போல்தான் எடுத்து வைத்திருக்கிறார்கள். ஜிங்குச்சா என்ற பாடலில் புத்திசாலித்தனமாக கதையை சொல்கிறேன் என்று அதையும் கெடுத்து வைத்திருக்கிறார்கள். படம் முடியும்போது விண்வெளி நாயகா என்று போடுகிறார்கள். விண்வெளிக்கும் கமலுக்கும் என்ன தொடர்பு. அவர் என்ன கல்பனா சாவ்லாவா இல்லை சுனிதா வில்லியம்ஸா?.. கர்நாடக பிரச்னையில் We Stand With Kamal என்று சொன்னார்கள். படத்தில் நியாயப்படி பார்த்தால் We Stand With Simbu என்றுதான் சொல்ல வேண்டும்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X