Blue Sattai Tiger 3 Review: “LCU மாதிரி ஏமாத்த பாக்குறாங்க..” டைகர் 3 ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்!
சென்னை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் நடித்துள்ள டைகர் 3 திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நேற்று ரிலீஸானது.
யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை மணீஷ் ஷர்மா இயக்கியுள்ளார்.
ஸ்பை த்ரில்லர் சீரிஸில் உருவாகியுள்ள டைகர் 3 படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.
இந்நிலையில், தமிழில் லோகேஷின் LCU மாதிரி, பாலிவுட்டில் டைகர் 3 ஒரு ஏமாற்றுவேலை என ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்துள்ளார்.

டைகர் 3 ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: இந்தியில் இந்தாண்டு தீபாவளி ஸ்பெஷலாக டைகர் 3 திரைப்படம் வெளியாகியுள்ளது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தை மனீஷ் ஷர்மா இயக்கியுள்ளார். சல்மான் கான் ஜோடியாக கத்ரீனா கைஃப், வில்லனாக இம்ரான் ஹாஷ்மி ஆகியோர் நடித்துள்ளனர். முக்கியமாக ஷாருக்கானும் ஹிருத்திக் ரோஷனும் கேமியோவாக மாஸ் காட்டியுள்ளனர்.
யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள டைகர் 3, ஸ்பை த்ரில்லர் சீரிஸ் படமாக உருவாகியுள்ளது அனைவரும் அறிந்ததே. ஏற்கனவே டைகர் படத்தின் 2 பாகங்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், தமிழில் லோகேஷின் LCU மாதிரி பாலிவுட்டில் டைகர் 3 படத்தை ஸ்பை த்ரில்லர் சீரிஸ் என ஏமாற்றுவதாக விமர்சித்துள்ளார். டைகர் 3 படம் பற்றி ப்ளூ சட்டை மாறன் வெளியிட்டுள்ள விமர்சனம் வைரலாகி வருகிறது.
அதாவது, சல்மான் கான் நடித்துள்ள டைகர் 3, ஸ்பை த்ரில்லர் யூனிவர்ஸில் உருவாகியுள்ளது. தமிழில் LCU-ஐ ஒரு யூனிவர்ஸாக மாற்றுவதைப் போல, இந்தியில் டைகர் 3 ஸ்பை த்ரில்லர் சீரிஸில் உருவாகியுள்ளதாகக் கூறியுள்ளார். இந்தப் படத்தில் ஹீரோ சல்மான் கான் இந்தியாவின் ஸ்பையாகவும், ஹீரோயின் கத்ரின கைஃப் பாகிஸ்தான் நாட்டின் ஸ்பையாகவும் நடித்துள்ளனர்.
இவங்க ரெண்டு பேரும் லவ் பண்ணி மேரேஜ் பண்றாங்க, அதோடு பத்து வயசுல பையனும் இருக்கான். அப்ப ஹீரோவுக்கு ஆப்ரேஷன் டைம்-பாஸ் என ஒரு அசைமெண்ட் வருது, அதாவது ஆப்கானிஸ்தானில் இருக்கும் இந்திய நாட்டின் ஸ்பையை காப்பாற்றுவது தான் அந்த அசைமெண்ட். அந்த ஸ்பை-ய காப்பாத்தி கூட்டி வரும் போது, அவர் ஒரு ரகசியம் சொல்றார். அது என்னான்னா இந்தியாவுலயே ஒரு டபுள் ஏஜெண்ட் இருக்காங்க, அது உன்னோட மனைவி தான் என ஹீரோவிடம் சொல்கிறார்.
இதனால அதிர்ச்சியடையும் ஹீரோ, அதன்பின்னர் ஹீரோயினை ஃபாலோ பண்றார். இதனிடையே ஹீரோவின் பையனை கடத்தும் வில்லன் கும்பல், அவருக்கு தனியாக ஒரு அசைமெண்ட் கொடுக்கிறது. இதனால், ஹீரோ இந்தியாவுக்கு துரோகியா ஆகிடுறாரு. இந்த பிரச்சினையெல்லாத்தையும் ஹீரோ எப்படி சரி செய்றாருங்குறது தான் கதை. படத்தோட ஆரம்பம் ரொம்பவே நல்லா இருக்கு, சில காட்சிகளில் சுவாரஸ்யம் இருந்தாலும் இது ஹாலிவுட்டில் வெளியான Allied படத்தின் டச் இருப்பதாக ப்ளூ சட்டை மாறன் கூறியுள்ளார்.
ஹீரோயின் டபுள் ஏஜெண்டாக இருப்பதால் கதை இதுதான் நினைத்தால், அதன்பிறகு ரூட் மாறி எங்கெல்லாமோ செல்கிறது. வழக்கமா ஹீரோ ஒரு ஊரையோ நாட்டையோ காப்பாற்றுவாரு. ஆனா, இதுல ஹீரோ பாகிஸ்தான் பிரதமரை காப்பாற்றுவதும், அந்த சீனும் பார்த்தால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. ரொம்ப பழைய டெக்னிக்கலாக இந்தக் காட்சியை எடுத்துள்ளதாக ப்ளூ சட்டை மாறன் விமர்சித்துள்ளார்.

அதேபோல், கேமியோ ரோலில் நடித்துள்ள ஷாருக்கான் என்ட்ரி சூப்பராக இருந்தாலும், அவர் வந்த பிறகு படமே தர லோக்கலாக மாறிவிட்டது எனக் கூறியுள்ளார். மேலும் ஷாருக்கான், சல்மான் கான் இருவரும் சேர்ந்து நடித்துள்ள சண்டைக் காட்சியையும் பங்கமாக கலாய்த்துள்ளார். கமல் படங்களில் யாராவது ஒருவர் பேண்ட் கழட்டுவது மாதிரி சீன் இருக்கும், அப்படி சல்மான் கான் படங்களில் அவர் சட்டையை கழட்டுவார். ஆனால், டைகர் 3ல் அதெல்லாம் இல்லாமல் போனது ஆறுதல் எனக் கூறியுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
முக்கியமாக இந்தப் படத்தில் சல்மான் கான் நடித்ததை ரொம்பவே ரகசியமாக வைத்திருந்ததாகவும், அதனை நான் தான் வெளியே சொல்கிறேன் என்றும் ட்ரோல் செய்துள்ளார். அதேபோல் டைகர் 3ல் ஹிருத்திக் ரோஷன் நடித்துள்ளது பெரிய ரகசியம் எனவும், அந்த சீக்ரெட்டை படம் பார்க்கும் போது தெரிந்துகொள்ளுங்கள் என்றும் ப்ளூ சட்டை மாறன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. லைவ் லொக்கேஷனில் எடுத்துள்ள காட்சிகள் சூப்பராக இருப்பதாகவும், ஒருமுறை இந்தப் படத்தை பார்க்கலாம் எனவும் ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











