லியோவுக்கு 9 மணி காட்சிக்கே அனுமதி கொடுக்காதீங்க.. திடீரென பூகம்பத்தை கிளப்பிய ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: லியோ படத்துக்கு அதிகாலை 4:00 மணி காட்சிக்கும், 7:00 மணி காட்சிக்கும் எப்படியாவது அனுமதி வாங்கி விட வேண்டும் என்கிற முடிவில் லியோ படக்குழு இருந்து வரும் நிலையில், காலை 9:00 மணி காட்சிக்கு அனுமதி கொடுக்காதீங்க என்னை ப்ளூ சட்டை மாறன் தற்போது போட்டுள்ள ட்வீட் பூகம்பத்தை கிளப்பியுள்ளது.

Blue Sattai Maran told dont give 9 o clock special show also to Vijays Leo

லியோ படம் தொடர்பாக தொடர்ந்து ஏகப்பட்ட பதிவுகளை ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது, 9:00 மணி காட்சிக்கும் வேட்டு வைக்கும் வகையில் அவர் பதிவிட்டுள்ள ட்வீட் ரசிகர்களை கடுப்பாக்கிய உள்ளது.

9 மணிக்கே கொடுக்காதீங்க: "லியோ ரிலீஸாகும் அக்டோபர் 19 வியாழன் விடுமுறை தினம் அல்ல. வேலை நாள். காலை 8 முதல் 10 வரை பீக் ஹவர் என்பதால்.‌. பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்வோர் போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்படலாம்.

Blue Sattai Maran told dont give 9 o clock special show also to Vijays Leo

ஆகவே வார இறுதி மற்றும் ஆயுதபூஜை விடுமுறை நாட்களில் மட்டுமே காலை 9 மணி சிறப்புக்காட்சியை அனுமதிக்க வேண்டும். அக்டோபர் 19 ஆம் தேதி காலை சிறப்புக்காட்சிக்கு அனுமதி தரக்கூடாது. இப்படிக்கு, ப்ளூ சட்டை." என பதிவிட்டுள்ளார்.

கமாண்டர் விஜய்: மேலும், 'கவர்மண்ட் கிட்ட எதுக்கு கெஞ்சனும்? ஸ்பெஷல் ஷோவுக்கு கோர்ட்ல அனுமதி கேளுங்க. நான்தான் அடுத்த சி.எம். எதுவா இருந்தாலும் நான் பாத்துக்கறேன்' என்று தயாரிப்பாளரை உசுப்பி விட்டதே கமாண்டர்தான் என்று கூறப்படுகிறது. மாஸ் காட்டிய கமாண்டர். அதிர்ந்த அரசாங்கம்!!" என இன்னொரு ட்வீட்டையும் போட்டு விஜய் ரசிகர்களை வெறுப்பேற்றி வருகிறார்.

Blue Sattai Maran told dont give 9 o clock special show also to Vijays Leo

அஞ்சா சிங்கம் லலித்: இதுமட்டுமின்றி "கோடம்பாக்கத்தின் 'அஞ்சா சிங்கம்' (Fearless Leo) லலித்.. வாழ்க." என தொடர்ந்து பல விதமான ட்வீட்களை போட்டு லியோ படக்குழுவினரை பங்கமாக கலாய்த்து வருகிறார் ப்ளூ சட்டை மாறன். எப்படியாவது ஜெயிலர் படத்தின் வசூலை முந்த வேண்டும் என்றும் முதல் நாளே வசூலை அள்ளினால் தான் உண்டு என்பதால் தான் இந்த அவசரமா என்றும் கேள்விகள் கிளம்பி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X