ஒருவேளை பீஸ்ட் ஹிட்டாகி இருந்தால்..நெல்சனை பங்கமாக கலாய்த்த ப்ளு சட்டை மாறன் !

சென்னை : விக்ரம் திரைப்படம் அமோக வெற்றி பெற்றதை அடுத்து படக்குழுவினருக்கு அடுத்தடுத்து பரிசுகளைக் கொடுத்து வருகிறார் கமல்ஹாசன்.

4 ஆண்டுகளுக்கு பிறகு கமல் படம் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். இப்படம் வெளியான 3 நாளில் 150 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.

விஜய் நடித்த பீஸ்ட் பாடம் ஏப்ரல் மாதம் வெளியானி பல நெகடீவ் விமர்சனங்களை, இதை கிண்டலடிக்கும் வகையில் ப்ளு சட்டை மாறன் ஒரு மீம்சை பதிவிட்டுள்ளார்.

அன்பு பரிசு

அன்பு பரிசு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் திரைப்படம் ஜூன் 3ந் தேதி வெளியாகி பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறிது. விக்ரம் படத்தின் வெற்றியால் தயாரிப்பாளர் & நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு 'லெக்ஸஸ்' ரக காரை பரிசாக அளித்துள்ளார். இந்த லெகஸஸ் செடான் வகை காரின் விலை 60 லட்ச ரூபாய் முதல் 70 லட்சம் வரை சென்னையில் விற்கப்படுகிறது.

13 உதவி இயக்குநர்களுக்கும் பரிசு

13 உதவி இயக்குநர்களுக்கும் பரிசு

மேலும், விக்ரம் படத்தில் பணியாற்றிய சுமார் 13 உதவி இயக்குனர்களுக்கு TVS apache RTR 160 ரக பைக்குகளை கமல்ஹாசன் பரிசாக அளித்துள்ளார். அடுத்தடுத்து படக்குழுவினருக்கு பரிசுகளை கமல் அளித்து வருவது இணையத்தில் பரவலாக பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

ஒரு வேளை பீஸ்ட் ஹிட்டாகி இருந்தால்

ஒரு வேளை பீஸ்ட் ஹிட்டாகி இருந்தால்

விக்ரம் திரைப்படம்வெற்றி பெற்றதற்கு கமல் பரிசு கொடுத்து வரும் நிலையில், ப்ளு சட்டை மாறன் பீஸ்ட் திரைப்படத்தை கிண்டலடிக்கும் வகையில், ஒரு வேளை பீஸ்ட் ஹிட்டாகி இருந்தால் என பதிவிட்டு, விஜய் ,நெல்சனுக்கு ஜெட் விமானத்தை பரிசு அளிப்பது போல ஒரு மீம்ஸ்சை பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்து கடுப்பான விஜய் ரசிகர் ப்ளு சட்டை மாறனை திட்டி தீர்த்து வருகின்றனர்.

எல்லாம் உன்னாலதான்

எல்லாம் உன்னாலதான்

எல்லாம் உன்னாலதான்.. இவனுங்க எல்லாம் கலாய்க்குற அளவுக்கு படத்தை எடுத்துவெச்சி இருக்கே என்று ஒரு நெட்டிசன்ஸ் மீம்ஸ் ஒன்றை பதிவிட்டு நெல்சனை திட்டிஉள்ளர்.

திட்டிதீர்க்கும் நெட்டிசன்ஸ்

திட்டிதீர்க்கும் நெட்டிசன்ஸ்

ப்ளு சட்டை மாறனின் பதிவால் கடுப்பான ரசிகர்கள், இவன் ஐடிய அஜித், விஜய், சூர்யா ரசிகர்கள் சேர்ந்து ரிப்போர்ட் அடிச்சு தூக்கிடலாம் வாங்க, தமிழ் சினிமாவுக்கு இவன் கேடு என கடுமையாக ப்ளு சட்டை மாறனை திட்டி தீர்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X