லியோ ரிலீஸ் நேரத்துல தும்மணும்... பனையூரில் ரசிகர்களை சந்தித்த விஜய்... வம்பிழுத்த ப்ளு சட்டை மாறன்
சென்னை: விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தின் காஷ்மீர் ஷெட்யூல் முடிந்த நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை.
இதனால், சென்னை பனையூரில் உள்ள தனது இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார் விஜய்.
இந்நிலையில், மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்த விஜய்யை, ப்ளு சட்டை மாறன் வம்பிழுத்துள்ளது வைரலாகி வருகிறது.

விஜய்யிடம் வம்பிழுத்த ப்ளு சட்டை மாறன்:விஜய் தற்போது லியோ படப்பிடிப்பில் பிஸியாக காணப்படுகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மே முதல் வாரத்தில் சென்னையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என சொல்லப்படுகிறது. ஆயுத பூஜை ஸ்பெஷலாக லியோ திரைப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், விஜய் தற்போது சென்னை பனையூர் இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார். இதனிடையே பனையூரில் உள்ள அலுவலகத்தில், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளையும் அவர் நேரில் சந்தித்தார். ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், ரசிகர்களுடன் ஒரு சந்திப்பு நடைபெற்றது. அப்போது அவர்களுக்கு பிரியாணி விருந்தும் கொடுத்திருந்தார் விஜய்.

அப்போது வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியானதால், அதற்காகவே ரசிகர்களை விஜய் சந்தித்தார் என சொல்லப்பட்டது. இந்நிலையில், நேற்று விஜய் ரசிகர்களை சந்தித்ததற்கு பின்னணியில் அரசியல் காரணங்கள் இருக்கும் என சொல்லப்படுகிறது. அதாவது விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவிருப்பதால், அரசியலில் களமிறங்கும் முடிவில் தான் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திப்பதாக செய்திகள் வெளியாகின.
கடந்த சில மாதங்களாகவே விஜய் அரசியலில் என்ட்ரி கொடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதனால் தான் அடுத்தடுத்து ரசிகர்களையும் மக்கள் இயக்க நிர்வாகிகளையும் அவர் சந்திப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், விஜய் இன்ஸ்டாவில் அறிமுகமானது, அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை விஜய் ரசிகர்கள் கொண்டாடியது போன்றவை அரங்கேறியதாக சொல்லப்பட்டது.

ஆனால், இன்னொரு பக்கம் விஜய் அரசியலுக்கு வரமாட்டார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், நேற்று மக்கள் இயக்க நிர்வாகிகளை விஜய் சந்தித்ததை ப்ளு சட்டை மாறன் ட்ரோல் செய்துள்ளார். "லியோ ரிலீஸ் நேரத்துல தும்முனாத்தான் சரியா இருக்கும்" என கேப்ஷன் கொடுத்துள்ளார் ப்ளு சட்டை மாறன். அதாவது இது எல்லாமே லியோ படத்திற்கான ப்ரோமோஷன் தான் என மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார். மேலும், லியோ ரிலீஸ் நேரத்தில் இப்படி நடந்தால், அது படத்துக்கு பாசிட்டிவாக அமையும் எனவும் மறைமுகமாக கூறியுள்ளார்.
சும்மாவே விஜய்யை அடிக்கடி வம்பிழுக்கும் ப்ளு சட்டை மாறன், இப்போது அவரது அரசியல் யூகங்களையும் கிண்டல் அடித்து வருகிறார். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு விஜய்யின் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக உருமாறும் என செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால், அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்பதாக ப்ளு சட்டை மாறன் ட்வீட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











