புலி, சுறா, குருவி படங்கள் பிளாப்… கோட் எப்படி இருக்குமோ? விஜய்யை வம்புக்கு இழுத்த ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: நடிகர் விஜய் நடித்துள்ள கோட் படத்திலிருந்து மூன்றாவது பாடல் வெளியான நிலையில், நெட்டிசன்கள் அதை கிண்டலடித்து வரும் நிலையில், ப்ளூ சட்டை மாறன் தன் பங்குக்கு விஜய் ரசிகர்களை வம்புக்கு இழுக்கும் வகையில் புலி, சுறா, குருவி படங்கள் பிளாப்... அடுத்து வரவிருக்கும் கோட் எப்படி இருக்குமோ? என்று பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த விஜய் ரசிகர்கள் அவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.
சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன், எந்த படம் வெளியானாலும், அதை முதல் ஆளாக பார்த்துவிட்டு கருத்து சொல்லியே பிரபலமாகி விட்டார். அலட்டிக்கொள்ளாமல் நிறுத்தி நிதானமாக பேசும் இவரின் பேச்சு பலருக்கு பிடித்துப்போனதால், அவருக்கு என்று தனி ரசிகர்களும் இருக்கிறார்கள். பெரிய நடிகர், சின்ன நடிகர் என எந்தவிதமான பாரபட்சமும் பார்க்காமல் படத்தை பிரித்து மேய்ந்துவிடுவார்.

இதே வேலையா போச்சு: தற்போது இவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், Hits: சிங்கம், சிறுத்தை, கருடன், கும்கி, மைனா, நான் ஈ,சண்டக்கோழி, காக்கா முட்டை போன்ற படங்கள் வெற்றி பெற்றன. Flops: புலி, சுறா, குருவி,பீஸ்ட், பைரவா, வேங்கை,யானை, காளை, எலி, குட்டிப்புலி, ஈ, சேவல், கோப்ரா, பாம்பு சட்டை படத்தின் பெயரை பதிவிட்டு பிளாப் என பதிவிட்டது மட்டுமில்லாமல், Upcoming: Goat என கேட்டு விஜய் ரசிகர்களை வம்புக்கு இழுத்துள்ளார். இதைப்பார்த்த, நெட்டிசன்கள் ஏன்யா இப்ப விஜய் மேல வன்மத்த கக்கிட்டு இருக்க என்றும், ஒரே குழப்பமா இருக்கே என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்: விஜய்யின் நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட், வாரிசு, லியோ ஆகிய மூன்று படங்களுமே சரியாக போகவில்லை. வசூல் ரீதியாக அவை சக்கைப்போடு போட்டதாக சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனங்கள் சொன்னாலும் விமர்சன ரீதியாக இந்த படங்களை ரசிகர்கள் ட்ரோல் செய்தனர். அதுவும் பீஸ்ட் படத்தை ரசிகர்கள் வச்சு செய்துவிட்டனர். தற்போது அரசியல் கட்சி தொடங்கி இருக்கும் விஜய், கோட் படத்தைத் தொடர்ந்து தளபதி 96 படத்தை முடித்துவிட்டு ஒட்டுமொத்தமாக சினிமாவிற்கு முழுக்கு போட இருப்பதால், அவரின் அனைத்து ரசிகர்களும் கோட் படத்தின மீது மிகப்பெரிய நம்பிக்கையை வைத்து இருக்கின்றனர். இப்படம் அடுத்த மாதம் செப்டம்பர் 5ந் தேதி வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











