வாரிசு 300 கோடி வசூல்... உலக மகா உருட்டு... ஒரே ட்வீட்டில் போட்டுத் தாக்கிய ப்ளு சட்டை மாறன்!
சென்னை: பொங்கல் ஸ்பெஷலாக கடந்த மாதம் 11ம் தேதி வெளியான விஜய்யின் வாரிசு திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
வம்ஷி பைடிபள்ளி இயக்கத்தில் ஃபேமிலி சென்டிமெண்ட் திரைப்படமாக உருவான வாரிசு, தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியானது.
இந்நிலையில், நான்கு வாரங்களில் வாரிசு திரைப்படம் உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதனையடுத்து வாரிசு பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து டிவீட் செய்துள்ள ப்ளு சட்டை மாறனின் பதிவு வைரலாகி வருகிறது.

வாரிசு பாக்ஸ் ஆபிஸ்
விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் கடந்த மாதம் 11ம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக வெளியானது. அதேநாளில் அஜித்தின் துணிவு திரைப்படமும் வெளியானதால் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு காணப்பட்டது. இந்த இரண்டு படங்களுக்குமே கலவையான விமர்சனங்கள் கிடைத்த போதும், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் 25 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் வாரிசு திரைப்படம் 300 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

வெளியானது அபிஸியல் அப்டேட்
வம்ஷி பைடிப்பள்ளி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான இப்படத்தை தில் ராஜூ தயாரித்திருந்தார். இந்நிலையில், உலகம் முழுவதும் வெளியான வாரிசு 300 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை சமூக வலைத்தளங்களில் விஜய் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். பக்கா கமர்சியல் ஜானரில் வெளியான இந்தப் படம் விரைவில் அமேசான் ஓடிடியிலும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ப்ளு சட்டை மாறன் ட்ரோல்
விஜய்யின் வாரிசு திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 140 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல் இந்தியா முழுவதும் 250 கோடி வரை கலெக்ஷன் செய்துள்ளதாம். இவையெல்லாம் சேர்த்தே உலகம் முழுவதும் மொத்தம் 300 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில், வாரிசு பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்டை ப்ளு சட்டை மாறன் ட்ரோல் செய்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், "300 கோடி. உலக மகா உருட்டு" என பதிவிட்டுள்ளார்.

வைரலாகும் டிவிட்டர் பதிவு
ப்ளு சட்டை மாறனின் இந்த டிவிட்டர் பதிவை அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். வாரிசு படத்துக்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்திருந்தாலும், 300 கோடி வசூல் செய்திருக்க வாய்ப்பில்லை என்பதையே ப்ளு சட்டை மாறன் உலக மகா உருட்டு என ட்ரோல் செய்துள்ளார். அவர் சொல்வதே உண்மை என்பதுபோல நெட்டிசன்களும் 300 கோடி வசூல் எல்லாம் உலக மகா உருட்டு என்பதாக ட்ரோல் செய்து வருகின்றனர். இதனிடையே விஜய் தனது லியோ படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்து வருகிறார்.

விரைவில் ஓடிடி ரிலீஸ்
விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்த வாரிசு படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். திரையரங்குகளில் 300 கோடி வரை வசூலித்துவிட்ட வாரிசு, விரைவில் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை கிடைத்த தகவலின் படி, இந்தப் படம் வரும் 22ம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இதனால் ஓடிடி ரசிகர்களும் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











