கள்ளச்சாராய மரணத்திற்கு பொங்கிய சூர்யா.. மறுபக்கம் இப்படியா? சூர்யாவை வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, சூர்யா 44 படத்தின் புதிய கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு நேற்றிரவு 12மணிக்கு வெளியிட்டு இருந்தது. இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் டிரெண்டான நிலையில், ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் தள பக்கத்தில், சூர்யா வாயில் சிகரெட்டுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்து கிண்டலடித்துள்ளார்.

சூர்யாவின் 44வது படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வருகிறார். இந்தப் படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. இதில் கருணாகரன், ஜோஜு ஜார்ஜ், பூஜா ஹெக்டே, ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு அந்தமானில் நடைபெற்று வருகிறது.

Suriya Karthik Subbaraj Blue Sattai Maran

சூர்யா 44: இந்த நிலையில், இன்று சூர்யாவின் 49வது பிறந்தநாளை முன்னிட்டு, சூர்யா 44' படத்தின் புதிய கிளிம்ப்ஸ் வீடியோவை ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. கடலுக்கு அருகில் ராயல் எஸ்டேட் என்ற பழைய கட்டிடத்தின் வெளியே ஆட்கள் சிலர் வரிசையாக நின்றிருக்க, திரையில் ஒரு காதல், ஒரு சிரிப்பு, ஒரு யுத்தம் என்ற வரிகள் வருகின்றன. தொடர்ந்து கருப்பு நிற உடையில், 80களின் வில்லன் போல பெரிய மீசையும், ஃபங்க் ஹேர்ஸ்டைலும் மாஸாக சூர்யா நடந்து வருகிறார். ரத்தம் தோய்ந்த முகத்துடன் கட்டிடத்திற்குள் இருந்து வெளியே வரும் சூர்யா, வாயில் சிகரெட் உடன் நடந்து வந்து துப்பாக்கியை எடுத்து லோட் செய்து திரையை நோக்கி சுடுகிறார்.

ப்ளூ சட்டை மாறன்: இத்திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு ஆக்‌ஷன் கேங்க்ஸ்டர் திரைப்படமாக இருக்கும் என்பதை இந்த கிளிம்ப்ஸ் உறுதி செய்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு வெளியான இந்த வீடியோவை சூர்யாவின் ரசிகர்கள் டிரெண்டாக்கி வரும் நிலையில், சூர்யா வாயில் சிகரெட் வைத்துக்கொண்டு நடந்து வந்ததை ஸ்கிரீன் ஷார்ட் எடுத்து தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள ப்ளூ சட்டை மாறன், போதைப்பொருள் ஒழிப்பு, கள்ளச்சாராய அழிப்பு என ஒருபக்கம் இளைஞர்களுக்கு உபதேசம். மறுபக்கம் அப்படியான பழக்கங்களை ஊக்குவித்து இளைய சமூகத்தை நாசம் செய்ய முயல்வது. அடுத்த போஸ்டரில் சாராய பாட்டிலுடன் நிற்பார் போல என பங்கமாக கிண்டலடித்துள்ளார்.

பொங்கிய சூர்யா: அதுமட்டுமில்லாமல், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் திமுக அரசின் அலட்சியம் என பொங்கிய சூர்யா, சிகரெட்டுடன் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இளைஞர்களை தவறாக வழிநடத்துவதை தவிர்க்க வேண்டுமென பாமக கடும் எதிர்ப்பு தெரிவித்தது முதல், சிகரெட் பிடிக்கும் காட்சிகளில் நடிக்காமல் தவிர்த்தவர் ரஜினி. இது யாருடைய அலட்சியம்? பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவுக்கு சூர்யாவின் ரசிகர்கள் கடும் எதிர்ப்பை பதிவிட்டு வருகின்றனர்,.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X