பப்ளிசிட்டி புடிக்காது.. 365 நாளும் போட்டோ வரணும்..அஜித்தை பங்கமாக கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: நடிகர் அஜித் நடித்து வரும் 'விடாமுயற்சி' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற இருப்பதாகவும் இதற்காக அஜித் உட்பட படக்குழுவினர் அனைவரும் அஜர்பைஜான் சென்றதாக கூறப்பட்ட நிலையில், அஜித் கார் ரேஸில் கலந்து கொண்ட வீடியோ மற்றும் போட்டோக்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ப்ளூ சட்டை மாறன் அஜித்தை பங்கமாக கிண்டலடித்துள்ளார்.
நடிகர் அஜித், துணிவு படத்துக்குப் பிறகு நடித்து வரும் படம் விடாமுயற்சி. மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உட்பட பலர் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு அஜர்பைஜானில் தொடங்கியது. இந்த படத்தின் படப்பிடிப்பு 70 முதல் 80 சதவீதம் மட்டுமே முடிவடைந்து இருப்பதாகவும் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

குட் பேட் அக்லி: விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருக்கும் போதே, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் 'குட் பேட் அக்லி' படத்தில் கமிட்டாகி நடித்தார். இந்த படப்பிடிப்பின் போது அஜித்தும், ஆரவ்வும் விபத்தில் சிக்கி உயிர்பிழைத்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விடாமுயற்சி படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக அஜித் அஜர்பைஜான் சென்றார். ஒரு மாதம் வரை அங்கு படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. இடையில் படப்பிடிப்பு இல்லாத சில நாட்களில் அஜித் சென்னை வந்துவிட்டு, மீண்டும் அங்கு செல்வார் என கூறப்பட்டது.

இதுக்குத்தான் போனாரா: அஜர்பைஜான் சென்றதும் அஜித் விடாமுயற்சி படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்த்த நிலையில், அஜித் கார் ஓட்டும் வீடியோ மற்றும் போட்டோக்கள் இணையத்தில் வெளியானது. அதை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று 'கோட்' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளதை அடுத்து அஜித் தனது ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காக இந்த வீடியோவை வெளியிட்டாரா? என்றும் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

பப்ளிசிட்டி புடிக்காது: இந்நிலையில், ப்ளூ சட்டை மாறன் அஜித்தை கிண்டலடிக்கும் வகையில் ஒரு பதிவினை போட்டுள்ளார். அதில், எனக்கு பப்ளிசிட்டி எல்லாம் புடிக்காது. அதான் ஆடியோ லாஞ்ச், அவார்ட் ஃபங்ஷனுக்கு எல்லாம் போறது இல்ல. ஆனா வருசத்துக்கு 365 ஃபோட்டோ மட்டும் சோஷியல் மீடியால வரனும். குறிப்பா விஜய் படத்தோட ட்ரைலர் வர்றப்ப, ஆடியோ லாஞ்ச், ரிலீஸ் தேதி, பர்த் டே டைம்ல.. என் ஃபோட்டோ வந்தாகனும். இன்னைக்கி என்ன போட்ருக்க?''போன ட்வீட்டை பாருங்க தல' என்று பகிர்ந்து அஜித் கார் ரேஸ் சென்ற போட்டோவை ஷேர் செய்துள்ளார். , ப்ளூ சட்டை மாறனின் பதிவு இணையத்தில் மிகப்பெரிய அளவில் டிரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











