Blue Sattai Maran: "மொத்தம் எத்தனை படத்தோட கதை... நீ கில்லி தலைவா.." அட்லீயை சம்பவம் செய்த ப்ளூ சட்டை
சென்னை: ஷாருக்கான் - அட்லீ கூட்டணியில் உருவான ஜவான் இரு தினங்களுக்கு முன்னர் வெளியானது. பான் இந்தியா படமாக வெளியான ஜவானுக்கு, ஆல் ஏரியாவிலும் நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது.
இதனால், இந்தப் படம் இரண்டே நாட்களில் 200 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஜவான் படத்தின் கதை குறித்து, இயக்குநர் அட்லீயை ட்ரோல் செய்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

அட்லீயை சம்பவம் செய்த ப்ளூ சட்டை மாறன்: பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கிய திரைப்படம் ஜவான். இந்தியில் உருவான இந்தப் படம் தமிழ், தெலுங்கு மொழிகளிலும் வெளியாகியுள்ளது. ஷாருக்கானுடன் விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன், ப்ரியாமணி உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். ஜவான் படம் மூலம் ஷாருக்கான் - அட்லீ கூட்டணி முதன்முறையாக இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்னர் வெளியான ஜவான், பாக்ஸ் ஆபிஸில் இதுவரை 200 கோடி வரை வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. நேற்று வெளியான அபிஸியல் அப்டேட்டின் படி, முதல் நாளில் 130 கோடி ரூபாய் வசூலித்திருந்தது ஜவான். அப்பா, மகன் என இரட்டை வேடங்களில் நடித்துள்ள ஷாருக்கான், ஆக்ஷனில் தாறுமாறாக மிரட்டியுள்ளார்.
ஒட்டுமொத்தமாக அட்லீயின் ஃபேன்பாய் சம்பவமாக உருவாகியுள்ள ஜவான், ஷாருக்கான் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமைந்துள்ளது. இதனிடைய வழக்கம் போல ஜவான் படத்தின் கதையும் காப்பி பேஸ்ட் தான் என அட்லீயை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வந்தனர். ரமணா, சர்கார் என பல படங்களில் இருந்தும், அட்லீயின் முந்தைய படங்களின் கதையை பட்டி டிங்கரிங் செய்தும் ஜவான் உருவாகியுள்ளது என ட்ரோல் செய்யப்பட்டது.
இன்னொருபக்கம் சத்யராஜ்ஜின் 'தாய்நாடு' படத்தின் அட்லீ வெர்ஷன் தான் ஜவான் எனவும் ரசிகர்கள் கூறி வந்தனர். இதனையடுத்து தற்போது ப்ளூ சட்டை மாறனும் அட்லீயை பொளந்துகட்டி வருகிறார். இதுபற்றி ட்வீட் செய்துள்ள ப்ளூ சட்டை மாறன், "இட்லி கதைகள்: மத்த படமெல்லாம் நல்ல கதை இருக்கான்னு பாக்குற ரசிகர்கள் எல்லாரும்... உன் படத்துல மொத்த எத்தனை படத்தோட கதை இருக்குனு கவனிக்க வைக்குறதுல நீ கில்லி தலைவா" என குறிப்பிட்டுள்ளார்.

அதாவது, பல படங்களின் கதையை திருடி, ஜவானை அட்லீ இயக்கியுள்ளதாக அவர் ட்ரோல் செய்துள்ளார். முன்னதாக இதுமாதிரியான விமர்சனங்களுக்கு அட்லீ விளக்கம் கொடுத்திருந்தார். அதில், ஏற்கனவே பார்த்த கதைகளை படமாக எடுக்கிறேன் என்பது மட்டும் தான் என் மீது வைக்கப்படும் விமர்சனம். கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ், பா ரஞ்சித் போன்ற நண்பர்கள், ஆக்ஷன், சமூக பிரச்சினை என வெவ்வேறு விஷயங்களை மையமாக வைத்து படங்கள் எடுக்கின்றனர். நடிகர்களை மையப்படுத்தும் மாஸ் கமர்சியல் திரைக்கதை மீது, நான் ஒருவன் மட்டும் தான் நம்பிக்கை வைத்துள்ளேன். எனவே என் மீது விமர்சனம் வரத்தான் செய்யும் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











