Blue Sattai Maran - உங்களை மாதிரி அமீர் பிட்டு படமா எடுத்தாரு?.. ஞானவேல் ராஜாவை விளாசிய ப்ளூ சட்டை மாறன்
சென்னை: Blue Sattai Maran (ப்ளூ சட்டை மாறன்) தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெறித்தனமாக கலாய்த்திருக்கிறார்.
கோலிவுட்டில் கடந்த சில நாட்களாக பற்றி எரிந்துகொண்டிருக்கும் விவகாரம் என்றால் அது பருத்திவீரன் தொடர்பான விஷயம்தான். தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அளித்த பேட்டி ஒன்றில் அமீர் தன்னை ஏமாற்றிவிட்டார் என்றும் அவர் ஒரு திருடன் என்றும் பல்வேறு விஷயங்களை பேசினார். அது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

படைப்பாளிக்கு அவமரியாதை: அவரது பேட்டியை பார்த்த ரசிகர்கள் ஞானவேல் ராஜாவை கடுமையாக விமர்சிக்க தொடங்கினார். மேலும் எந்த ஹீரோவுக்கும் கிடைக்காத மாதிரி ஒரு அறிமுக படத்தை கொடுத்த அமீர் என்ற படைப்பாளியை ஞானவேல் இப்படி பேசியிருக்கக்கூடாது. வழக்கு நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கும்போது இவர் ஏன் சம்பந்தமே இல்லாமல் இப்போது பேசுகிறார் என சகட்டுமேனிக்கு விளாசினர்.
பெருகும் ஆதரவு: இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து அமீரும் தக்க பதிலடி கொடுத்தார். அவரைத் தொடர்ந்து சசிகுமார், சமுத்திரகனி, பொன்வண்ணன், சினேகன், கரு.பழனியப்பன் உள்ளிட்டோ அமீருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேசமயம் ஞானவேல் ராஜாவுக்கு சூர்யா மற்றும் கார்த்தி தரப்பிலிருந்து இதுவரை ஆதரவு குரலே எழ வில்லை.
பாரதிராஜாவா இவரு: குறிப்பாக அந்தப் பேட்டியில் பேசிய ஞானவேல் ராஜா பருத்திவீரன் பஞ்சாயத்தை பேசியதோடு மட்டுமில்லாமல் அமீர் ஒன்றும் பெரிய பாரதிராஜா கிடையாது என்று அவரை மட்டம் தட்டும்படியும் பேசினார். இதனை பார்த்த நெட்டிசன்கள் அவர் பாரதிராஜா கிடையாதுதான் ஆனால் மிகச்சிறந்த படைப்பாளி என்பதை நிரூபித்திருக்கிறார் என்றும் கமெண்ட்ஸ் செய்ய ஆரம்பித்தனர்.

ப்ளூ சட்டை மாறன் விளாசல்: இந்நிலையில் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் இந்த விவகாரம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "அமீர் என்ன பாரதிராஜாவா? அந்தளவுக்கு எல்லாம் அவருக்கு சீன் இல்லை - ஞான ஈட்டி பேட்டி. அதுசரி. ஹரஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டுக்குத்து, பல்லு படாம பாத்துக்க மாதிரி பிட்டு சீன் படங்கள் எடுக்காம.. ராம், மௌனம் பேசியதே, பருத்திவீரன் போன்ற படங்களைத்தான எடுத்தாரு.. சீன் இல்லதான்" என குறிப்பிட்டிருக்கிறார். அவரது இந்த ட்வீட் இணையத்தில் ட்ரெண்டாகியிருக்கிறது.
பொன்வண்ணன்: முன்னதாக பொன்வண்ணன் அமீருக்காக போட்டிருந்த ஆதரவு பதிவில், பருத்திவீரன் எனன் இருட்டறையில் முரட்டு குத்துனு நினைச்சீங்களா என ஞானவேல் ராஜாவை கடுமையாக விளாசியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











