Blue Sattai Maran - ஜெயிலர் வசூல்.. அவதார் ரெக்கார்ட் அவுட்.. ப்ளூ சட்டை மாறன் ட்வீட்

சென்னை:Blue Sattai Maran (ப்ளூ சட்டை மாறன்) பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் ஜெயிலர் வசூலை வைத்து மீண்டும் கிண்டல் செய்து ட்வீட் செய்துள்ளார்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன் லால், சுனில், ஜாக்கி ஷெராஃப், விநாயகன், வசந்த் ரவி, யோகிபாபு, ரம்யா கிருஷ்ணன், மிர்ணா மேனன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் ஜெயிலர் படம் கடந்த 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. அனிருத் இசையமைப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்தது.

Blue Sattai Maran Trolled Jailer Movie Collection And Rajini Supporters

தலைவர்னா மாஸ்: ரஜினிகாந்த் மற்றும் நெல்சன் திலீப்குமார் ஆகிய இரண்டு பேருக்குமே இந்தப் படத்தின் ஹிட் அவசியப்பட்டது. படத்தை பார்த்த ரசிகர்கள் படம் தங்களை ரொம்பவே திருப்திப்படுத்திவிட்டதாகவும்; இரண்டு பேருமே இந்தப் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துவிட்டதாகவும் முதல்நாள் முதல் காட்சி முடிந்ததுமே சமூக வலைதளங்களில் பாசிட்டிவ்வாக பேச ஆரம்பித்துவிட்டனர்.

குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி: குறிப்பாக பாசிட்டிவ் விமர்சனங்கள் வர ஆர்மபித்த பிறகு குடும்பம் குடும்பமாக திரையரங்குகளுக்கு ரசிகர்கள் படையெடுக்க ஆரம்பித்தனர். அதுமட்டுமின்றி வரிசையான விடுமுறை நாட்களை சரியாக குறி வைத்து அடித்ததால் தியேட்டருக்கு செல்லும் கூட்டம் குறையவில்லை. இதனால் விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் ஜெயிலர் ஜெயித்துக்கொண்டிருக்கிறது.

Blue Sattai Maran Trolled Jailer Movie Collection And Rajini Supporters

வசூல் நிலவரம்: படம் வெளியான முதல் நாளில் இந்தியாவில் மட்டும் 49 கோடி ரூபாயையும், தமிழ்நாட்டில் 29 கோடி ரூபாயையும் வசூலித்ததாக கூறப்பட்டது. இந்தச் சூழலில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஜெயிலர் படத்தின் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி படமானது உலகளவில் 375 கோடி ரூபாய்க்கும் அதிகம் வசூலித்திருப்பதாக தெரிவித்தது. இது ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

ப்ளூ சட்டை மாறன்: இந்நிலையில் ரஜினியையும் அவரது ஆதரவாளர்களையும் தொடரந்து கலாய்த்துவரும் ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியன், தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், பத்திரிகையாளர் செய்யாறு பாலு, இயக்குநர் பிரவீன் காந்தி உள்ளிட்டோரின் புகைப்படங்களை பகிர்ந்து, சொம்பு விஷயம் - சொல்லலைன்னாலும் அதான நிஜம்? தோ கிலோ மீட்டர், அவதார் ரெகார்ட் அவுட், . 500 கோடி, அரசியலுக்கு வருவாரா? அள்ளி விடப்பா. அள்ளி விடு" என குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த ட்வீட் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

Blue Sattai Maran Trolled Jailer Movie Collection And Rajini Supporters

ரஜினியுடன் சந்திப்பு: சில நாட்களுக்கு முன்பு ப்ளூ சட்டை மாறன் தானும் ரஜினியும் சந்தித்ததாகவும் அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை ட்விட்டரில் பகிர்வே என குறிப்பிட்டிருந்தார். அதனையடுத்து பலரும் ஆர்வத்துடன் அந்த வீடியோவை எதிர்பார்த்திருந்தனர். ஆனால் கடைசியில் வடிவேலுவின் வீடியோவை போட்டு காமெடி செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X