Jailer Collection - ஜெயிலர் வசூல் ரிப்போர்ட்லாம் டுபாக்கூர் ரிப்போர்ட்.. அலப்பறை கிளப்பும் ப்ளூ சட்டை மாறன்
சென்னை: Jailer Collection (ஜெயிலர் வசூல்) ஜெயிலர் படத்தின் வசூல் ரிப்போர்ட்டுகள் எல்லாம் டுபாக்கூர் ரிப்போர்ட் என்று ப்ளூ சட்டை மாறன் தெரிவித்திருக்கிறார்.
நெல்சன் திலீப்குமார் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான ஜெயிலர் படம் கடந்த 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இரண்டு வருடங்களுக்கு பிறகு ரஜினிகாந்த் நடித்த படம் வெளியானதால் இதனை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் திரையரங்குகளுக்கு சென்றனர். அதுமட்டுமின்றி இந்தப் படத்தின் ஹிட் அவருக்கு ரொம்பவே முக்கியம் எனவும் தங்களுடைய மனதுக்குள் நினைத்துக்கொண்டிருந்தனர்.

மாஸ் காட்டிய ஜெயிலர்: படத்தை பார்த்த ரசிகர்களுக்கு படம் ரொம்பவே திருப்தியை தந்திருக்கிறது. ஜெயிலர் மூலம் தான் மட்டும்தான் ஒரே சூப்பர் ஸ்டார் என்பதை ரஜினி நிரூபித்து கம்பேக் கொடுத்திருக்கிறார் என்றும்; நெல்சன் திலீப்குமாரும் பீஸ்ட்டில் வாங்கிய அடிக்கு ஜெயிலரை வைத்து மருந்து தடவிக்கொண்டார். இனி தமிழ் சினிமாவில் நெல்சன் மேக்கிங்கிற்கு என்று புது ரசிகர்கள் உருவாவர்கள் என்றும் ரசிகர்கள் கூறுகிறார்கள்.
மாஸ் ப்ளஸ் க்ளாஸ்: படத்தின் ஹைலைட்டாக இருப்பது ரஜினிகாந்த்தான். 72 வயதிலும் அவரது எனர்ஜி குறையாமல் ஒவ்வொரு சீனிலும் தோன்றியிருந்தார். முக்கியமாக ஓய்வு பெற்ற ஒரு ஜெயிலரின் பக்குவமும், மகனுக்கு பிரச்னை என்று வந்தவுடன் சீறுவதும், மகனே துரோகியாக இருக்கிறான் என்பதை தெரிந்துகொண்டபோது அதிர்ச்சியாகி பின் தீர்க்கமாக முடிவு எடுப்பதும் என தனது நடிப்பை மிகச்சிறப்பாகவே வெளிப்படுத்தியிருக்கிறார். பல இடங்களில் விண்டேஜ் ரஜினி ஞாபகத்துக்கு வந்தார் என்றும் கமெண்ட்ஸ் எல்லாம் பறந்தன.
வசூலில் மிரட்டும் ஜெயிலர்: ஜெயிலர் படம் வெளியான முதல் நாளில் இந்திய அளவில் 49 கோடி ரூபாயை வசூலித்தது. உலக அளவில் 70 கோடி ரூபாய்வரை வசூலித்தது. படத்துக்கு அடுத்தடுத்த நாட்களிலும் பாஸிட்டிவ் விமர்சனங்கள் வந்ததாலும், தொடர் விடுமுறை நாட்கள் என்பதாலும் ரசிகர்கள் ஜெயிலரை பார்க்க திரையரங்குகளுக்கு சென்றனர். இந்தச் சூழலில் படம் வெளியாகி 6 நாட்கள் நிறைவடைந்திருக்கும் நிலையில் இதுவரை 400 கோடி ரூபாயை வசூலித்துவிட்டதாக கூறப்படுகிறது.
விக்ரம் சாதனை முறியடிப்பு: படம் வெளியாகி ஆறே நாட்களில் 400 கோடி ரூபாய் வசூல் என கூறப்படுவதால் இன்னும் சில நாட்களில் கண்டிப்பாக 500 கோடி ரூபாயை தொட்டுவிடும். எனவே கமல் ஹாசன் நடித்த விக்ரம் படத்தின் வசூல் சாதனையை ஜெயிலர் படம் முறியடிப்பது கண்டிப்பாக நடக்கும் என்று ரஜினியின் ரசிகர்கள் இப்போதே கணிப்பை தெரிவித்துவருகின்றனர்.
ப்ளூ சட்டை மாறன் ட்வீட்: ஜெயிலர் வசூல் இப்படி எக்கச்சக்க தகவல்கள் வெளியாக ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில், "இன்னைக்கி 500 கோடியை தாண்டி பொன்னியின் செல்வனை காலி பண்ணப்போறோம். இதையெல்லாம் பாத்தா ஒனக்கு வயிறு எரியல?'
'எனக்கு ஏம்ப்பா எரிய போகுது? நீங்க சொல்லுறது எல்லாம் டுபாக்கூர் ரிப்போர்ட்ன்னு எல்லாருக்கும் தெரிஞ்சி போனதால ரொம்ப சந்தோசமா இருக்கேன். நான் உங்ககிட்ட திரும்பவும் ஏதாவது கேள்வி கேட்டா... 700 கோடின்னு வசூலை ஏத்தி விடுவீங்க" என குறிப்பிட்டு கவுண்டமணி, செந்தில் வீடியோ பகிர்ந்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











