Jailer Trailer - ஜெயிலர் ட்ரெய்லரில் ரஜினி சொன்ன வீச்சு முட்டை பரோட்டா வீச்சா?.. ப்ளூ சட்டை மாறன்

சென்னை: Jailer Trailer (ஜெயிலர் ட்ரெய்லர்) ஜெயிலர் ட்ரெய்லரை வைத்து ரஜினிகாந்த்தை மீண்டும் நக்கலடித்து ட்வீட் செய்திருக்கிரார் ப்ளூ சட்டை மாறன்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் ரஜினிகாந்த். பான் இந்தியா படமாக உருவாகியிருக்கும் ஜெயிலரில் மோகன் லால், சுனில், சிவராஜ்குமா, ஜாக்கி ஷெராஃப், ரம்யாகிருஷ்ணன், யோகிபாபு, தமன்னா, வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார். ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இரண்டு படங்கள் தோல்வியடைந்துவிட்டதால் இந்தப் படத்தின் மூலம் ரஜினி கம்பேக் கொடுப்பார் என அவரது ரசிகர்கள் நம்பிக்கையில் இருக்கின்றனர்.

Blue Sattai Maran Trolled Jailer Trailer And Rajinikanth

ஆடியோ வெளியீட்டு விழா: படத்தின் ஆடியோ வெளியீட்டு கடந்த வாரம் சென்னையில் நடந்தது. அதில் ரஜினியின் பேச்சை அடுத்து சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து அடுத்தக்கட்டத்துக்கு நகர்ந்திருக்கிறது. அவரது பேச்சுக்கு ஒருபக்கம் ஆதரவும்; மூத்த நடிகராக இருந்துகொண்டு அவர் இப்படி பேசலாமா என மறுபக்கம் விமர்சனமும் ஒருசேர எழுந்தது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி லியோ ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் என்ன பேசப்போகிறாரோ என்ற ஆவலும் பலரிடம் எழுந்திருக்கிறது.

ஜெயிலர் ட்ரெய்லர்: இந்தச் சூழலில் ஜெயிலர் படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது. ட்ரெய்லரை பார்க்கும்போது படம் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாகவும்,நெல்சன் திலீப்குமாரின் டார்க் காமெட்ஜி ஜானரிலும் உருவாகியிருப்பது உறுதியாகியுள்ளது. அதுமட்டுமின்றி ரஜினிக்கு தேவையான அத்தனை மாஸ் காட்சிகளையும் இடம்பெற செய்திருக்கிறார் நெல்சன் திலீப்குமார்

ட்ரோல் செய்யப்பட்ட ட்ரெய்லர்: ஜெயிலர் ட்ரெய்லர் தங்களை திருப்திப்படுத்திவிட்டதாக ரஜினி ரசிகர்கள் கூறினாலும்; மற்றவர்கள் இது திருப்திப்படுத்தவில்லை. பீஸ்ட் மாதிரியும், பாட்ஷா மாதிரியும் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் விக்ரம் படத்தின் சாயலும் அடிக்கிறது. எனவே ஜெயிலர் படம் தப்பிப்பது கொஞ்சம் ரிஸ்க்தான் என கூறிவருகின்றனர்.

ப்ளூ சட்டை மாறன்: இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் ஜெயிலர் ட்ரெய்லரை வைத்து ரஜினியை நக்கலடித்து ட்வீட் செய்திருக்கிறார். ட்ரெய்லரில் ரஜினிகாந்த், ஒரு அளவுக்குத்தான் நமட்ட பேச்சு அதுக்கப்புறம் வீச்சுதான் என சொல்வார். அதனை கிண்டலடிக்கும் விதமாக பரோட்டா புகைப்படத்தை பதிவிட்டு முட்டை பரோட்டா வீச்சு என குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் ட்ரெய்லரில், இந்த நோய் வந்தவர்கள் பார்ப்பதற்கு பூனை போல் இருப்பார்கள் திடீரென புலியாக மாறிவிடுவார்கள் என வசனம் வரும். அதனை கிண்டலடித்திருக்கும் ப்ளூ சட்டை மாறன், யார் அந்த புலி?' 'சண்டைக்காட்சில டூப் போடறவர்' 'அப்ப பூனை?' 'Self Troll' என குறிப்பிட்டிருக்கிறார். சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து ஆரம்பித்ததிலிருந்தே ரஜினியை சகட்டுமேனிக்கு மாறன் கலாய்த்துவருகிறார். தற்போது ட்ரெய்லரை வைத்தும் அவர் கலாய்க்க தொடங்கியிருக்கிறார். அவரது ட்வீட்டுகளை பார்த்த ரசிகர்கள் அவருக்கு பதிலடியும் கொடுத்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X