காடுவெட்டி, அமிகோ காராஜ் வசூல் என்னாச்சு தெரியுமா? ஒரே மீம் போட்டு சோலியை முடித்த ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: "உன் குத்தமா என் குத்தமா.. யாரை நானும் குத்தம் சொல்ல" என தமிழ் சினிமாவின் நிலைமை இந்த ஆண்டு 3 மாதங்கள் ஆகியும் இன்னமும் எழுந்தபாடில்லை. கடந்த வாரம் வெளியான ஆர்.கே. சுரேஷின் 'காடுவெட்டி' மற்றும் மாஸ்டர் மகேந்திரன் அழுது புலம்பி 2 மணி நேரம் என் படத்தை வந்து பாருங்கன்னு கெஞ்சிய 'அமிகோ காராஜ்' என இரு படங்களும் படுதோல்வியை சந்தித்து இருப்பதாக ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு சில படங்களுக்கு வெற்றி விழாக்கள் வேறு கொண்டாடப்பட்டன. அதெல்லாம் ஃபேக் சக்சஸ் மீட் என கலாய்த்து வந்த ப்ளூ சட்டை மாறன் இதுவரை உருப்படியாய் ஒரு படம் கூட ஓடவில்லை என்று வெளுத்து வாங்கி உள்ளார்.

பைரி, லவ்வர், ப்ளூ ஸ்டார், ஜே பேபி படங்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றாலும் கல்லா கட்டவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை என சினிமா வட்டாரத்தில் பலரும் கூறி வருகின்றனர்.
காடுவெட்டி வசூல்: கடந்த வாரம் வெளியான ஆர்.கே. சுரேஷின் காடுவெட்டி படம் முதல் நாள் தியேட்டரில் பட்டாசு எல்லாம் வெடித்து அலப்பறையை கிளப்பிய காட்சிகள் எல்லாம் வெளியிட்டு படம் வெற்றிப் படம் என ஆர்.கே. சுரேஷ் வீடியோ ஒன்றையும் போட்டு நன்றி கூறினார். அந்த படம் இதுவரை முழுசா 30 லட்சம் கூட வசூல் செய்யவில்லை என்றும் முதல் நாள் வந்த கூட்டத்திற்கும் பாவம் அவர் தான் பணம் கொடுத்தார் என நெட்டிசன்கள் நக்கலடித்து வருகின்றனர்.
அழுது புலம்பியும் யாரும் வரல: மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில் வெளியான அமிகோ காராஜ் படமும் கடந்த வாரம் வெளியாகி படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்த ஆண்டு சுமாரான படங்களையே முதல் 4 மாதத்துக்கு வெளியிட தமிழ் சினிமா திட்டமிட்டு இருக்கிறதா? என்றும் தியேட்டரில் ரிலீஸ் ஆகவே பல படங்கள் போராடி வருவதாக கூறுகின்றனர். வெளியான படங்களே இப்படி பார்க்க முடியாமல் இருக்கிறது என்றால் வெளியாகாத படங்கள் இன்னும் பயங்கரமா இருக்குமா என்று ஏகப்பட்ட ட்ரோல்கள் குவிந்து வருகின்றன.

சோலியை முடித்த ப்ளூ சட்டை: இந்நிலையில், விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது கடந்த வாரம் வெளியான காடுவெட்டி மற்றும் அமிகோ காராஜ் பாக்ஸ் ஆபிஸில் படுத்தே விட்டது என்பதை குறிக்கும் வகையில் 'நட்புக்காக' படத்தின் கிளைமேக்ஸில் விஜயகுமார் மற்றும் சரத்குமார் இறந்துக் கிடக்கும் ஸ்டில்லை வெளியிட்டு இரண்டு படங்களின் சோலியும் முடிந்து விட்டது என அறிவித்துள்ளார்.
ரெபெல் என்னாகுமோ?: அடுத்து ஜி.வி. பிரகாஷ், மமிதா பைஜு நடிப்பில் உருவாகி உள்ள ரெபெல் படம் இந்த வாரம் சோலோவாக திரையரங்குகளில் வெளியாகிறது. பிரேமலு ஹீரோயின் மமிதா பைஜு நடித்துள்ள இந்த படம் ஜி.வி. பிரகாஷுக்கு கை கொடுக்குமா? அல்லது அவர் நடிப்பில் இதுவரை வெளியாகி பல்பு வாங்கிய படங்களை போல பேக் அடிக்குமா? என்பதை வெயிட் பண்ணித்தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











