தப்பித்தவறிக்கூட விவேகம் படத்தை காட்டிடாதீங்க.. காஜல் அகர்வாலை பங்கமாக கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்!
சென்னை : நடிகை காஜல் அகர்வாலை ப்ளூ சட்டை மாறன் பங்கமாக கலாய்த்து மீம்ஸ் ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் நடித்து வருகிறார்.
இப்படத்தில், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா ஆகியோர் நடித்து வருகின்றன.

இந்தியன் 2
இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் நடப்பிடிப்பு இன்னும் முடியாமல் உள்ளது. படப்பிடிப்புத் தளத்தில் கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு, லைகாவுடனான பிரச்சனையால் படப்பிடிப்பு நடக்காமலே நின்றுவிட்டது.

விறுவிறுப்பான படப்பிடிப்பு
கமல்ஹாசனின் விக்ரம் படம் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்ததை அடுத்து, உதயநிதி இவ்விவகாரத்தில் தலையிட்டு பிரச்சனையை முடித்துவைத்தார். இதையடுத்து இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில், காஜல் அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர், மேக்கப் அறையில் எடுத்த போட்டோவை ஹார்ட் எமோஜியாக மறைத்து வெளியிட்டு இருந்தார்.

துப்பாக்கி படத்தை காட்டுவேன்
இந்நிலையில் காஜல் அகர்வால் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், தனது மகனுக்கு எட்டு வயது ஆகும் வரை படங்களை பார்க்கவோ, செல்போனை பயன்படுத்தவோ அனுமதிக்கமாட்டேன். என் மகன் நீலுக்கு 8 வயது ஆனவுடன் முதல் படம் 'துப்பாக்கி' படத்தை காட்டுவேன். அந்த படம் எனக்கு பிடித்தமான படம் என்று கூறியிருந்தார்.

ரொம்ப குசும்புதான்
காஜல் அகர்வால் பகிர்ந்து கொண்ட செய்தி நேற்று, இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலானதை அடுத்து ப்ளூ சட்டை மாறன், தனது ட்விட்டர் பக்கத்தில், தப்பித்தவறிக்கூட விவேகம் படத்தை காட்டிடாதீங்க மேடம் என காஜல் அகர்வாலை பங்கமாக கலாய்த்து மீம்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த மீம்ஸை பார்த்த பல நெட்டிசன்ஸ், இருந்தாலும் உங்களுக்கு ரொம்ப குசும்புதான் என்று கிண்டலடித்து வருகின்றனர்.

காதல் திருமணம்
நடிகை காஜல் மும்பை தொழிலதிபர் கௌதம் கிச்சலு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கொரோனா லாக் டவுனில் இவர்களில் திருமணம் நடந்தால், நெருங்கிய மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னும் காஜல் அகர்வால் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்


Click it and Unblock the Notifications











