நெல்சனுக்கே நாமம்.. ப்ளடி பெக்கர் இந்த ஹாலிவுட் படத்தின் காப்பியா?.. ப்ளூ சட்டை மாறன் போட்ட ட்வீட்!
சென்னை: ஏற்கனவே சந்தானம் நடித்த டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் ஒரு பிரபல ஹாலிவுட் படத்தின் காப்பி எனக் கூறப்பட்ட நிலையில், அதே படத்தின் காப்பி தான் கவின் நடித்துள்ள ப்ளடி பெக்கர் படம் என ப்ளூ சட்டை மாறன் தற்போது ட்வீட் போட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளார்.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து ரீமேக் படங்களும் ஹாலிவுட் படங்களின் காப்பி படங்களும் அடிக்கடி வந்து இதுபோன்ற பிரச்சனைகளில் சிக்கிக் கொள்கின்றன. ஹாலிவுட் அளவுக்கு சிவபாலன் படம் எடுக்கப் போவதாக சொல்லிவிட்டு கடைசியில் ஹாலிவுட் படத்தையே காப்பியடித்து நெல்சனுக்கு நாமம் போட்டு விட்டாரா என நெட்டிசன்கள் நக்கல் அடித்து வருகின்றனர்.

ப்ளடி பெக்கர் படத்துக்கும் ப்ளூ சட்டை மாறன் நெகட்டிவ் விமர்சனத்தை மட்டுமே கொடுத்துள்ள நிலையில், இந்த தீபாவளிக்கு சிவகார்த்திகேயன் படத்தை விட கவின் படத்தை வச்சு செய்து வருகிறார்.
ப்ளூ சட்டை மாறன் ப்ளடி பெக்கர் விமர்சனம்: நெல்சன் தயாரிப்பில் சிவபாலன் முத்துகுமார் இயக்கத்தில் கவின், ரெடின் கிங்ஸ்லி நடித்த ப்ளடி பெக்கர் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று வெளியானது. இந்த படத்தை இயக்கியவர் சரியான பைத்தியம் இல்லை என்றும் சரியாகாத பைத்தியம் என விமர்சனத்தில் இயக்குநரை டோட்டல் டேமேஜ் செய்துள்ளார். கவினின் நடிப்பு மட்டுமே படத்தில் ஆறுதல் என்றாலும் கதை மற்றும் திரைக்கதை எல்லாம் பிச்சைக்காரன் வாந்தியெடுத்தது போலவே உள்ளது என கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஹாலிவுட் பட காப்பி: மேலும், இந்த படம் "Ready or Not. 2019 English Film. ப்ளடி பெக்கர்..டேய்." என ட்வீட் போட்டு கவினின் ப்ளடி பெக்கர் படத்தின் சோலியை மொத்தமாக முடித்து விட்டுள்ளார். டார்க் காமெடி படமாக இருக்கும் என எதிர்பார்த்து தியேட்டருக்குச் சென்று படத்தை பார்த்தால் எல்லாமே மொக்கை காமெடியாக இருந்து நம்ம உயிரை வாங்குகிறது என ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் படத்தை கழுவி ஊற்றியுள்ளார்.
கவின் சுதாரிக்க வேண்டும்: கவின் நடித்துள்ள ப்ளடி பெக்கர் திரைப்படம் ஆரம்பத்தில் சொதப்பினாலும் அதன் பின்னர் ரசிகர்களை கவர்வதாக பலரும் இந்த படம் சுத்தமாக செட்டே ஆகவில்லை. கவின் தொடர்ந்து தவறான இயக்குநர்களையும் கதைகளையும் தேர்வு செய்து வருவது அவரது வளர்ச்சியை கடுமையாக பாதிக்கும் என்றும் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











