லியோ டிக்கெட் ரேட்.. எங்களுக்கு அட்வைஸ் வேண்டாம்..லோகேஷ் கனகராஜுக்கு ப்ளூ சட்டை மாறன் அட்வைஸ்
சென்னை: Leo Ticket Rate (லியோ டிக்கெட் விலை) தியேட்டரில் விதிக்கப்படும் கட்டணங்கள் தொடர்பாக ப்ளூ சட்டை மாறன் லோகேஷ் கனகராஜுக்கு அறிவுரை கூறியிருக்கிறார்.
லியோ படம் நாளை ரிலீஸ் ஆகவிருக்கிறது. படத்தின் சிறப்பு காட்சிக்கான அனுமதியை தமிழ்நாடு அரசு வழங்கினாலும் அந்தக் காட்சியை காலை 9 மணிக்குத்தான் திரையிட வேண்டும் என கூறியது.

நீதிமன்றம் அறிவுறுத்தல்: ஆனால் அதிகாலை காட்சிதான் தங்களுக்கு வேண்டும் என்பதில் படக்குழு பிடிவாதமாக இருந்தது. அதன் காரணமாக பட தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்திற்கும் சென்றது. ஆனால் நீதிமன்றமோ அதிகாலை காட்சிக்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்றும் காலை 7 மணிக்கு சிறப்பு காட்சி வேண்டுமென்றால் தமிழ்நாடு அரசிடம் பேச்சுவார்த்தை நடத்திக்கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தியது.
பேச்சுவார்த்தை நடத்திய படக்குழு: அதனையடுத்து படக்குழுவின் தயாரிப்பு தரப்பு வழக்கறிஞர் குழு நேற்று தமிழ்நாடு தலைமை செயலாளரை சந்தித்து காலை 7 மணி காட்சிக்கு அனுமதி கோரி மனு அளித்தது. ஆனால் தமிழ்நாடு அரசோ 7 மணி காட்சிக்கு அனுமதி இல்லவே இல்லை என கேட்டை சாத்தியது. இதனால் லியோ படத்தின் முதல் காட்சி 9 மணிக்கு திரையிடப்படவிருக்கிறது.
டிக்கெட் ஓவர் ரேட்: இதற்கிடையே லியோ டிக்கெட் புக்கிங் ஓபன் ஆனதிலிருந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் புக் செய்துவந்தனர். ஆனாலும் டிக்கெட் ரேட் தமிழ்நாட்டிலும், பெங்களூரிலும் 2000 ரூபாய்க்கு மேல் இருப்பதாக ரசிகர்கள் புலம்ப ஆரம்பித்தனர். இப்படிப்பட்ட சூழலில் இன்று மாலை லோகேஷ் கனகராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அறிவுறுத்திய லோகேஷ்: அப்போது டிக்கெட் ரேட் குறித்து பேசிய அவர், "எனக்கே டிக்கெட் கிடைக்கவில்லை. அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்க வேண்டாம். பொறுத்திருந்து அடுத்தடுத்த காட்சிகளில் பார்க்கலாம்" என தெரிவித்திருந்தார். இந்த சூழலில் லோகேஷின் டிக்கெட் குறித்த கருத்தை ப்ளூ சட்டை மேற்கோள்காட்டி விமர்சித்து அறிவுறுத்தியிருக்கிறார்.
ப்ளூ சட்டை ட்வீட்: அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பலமடங்கு விலையில் விற்கப்படும் தின்பண்டங்கள், காம்போ எனும் பெயரில் டிக்கட்டுடன் ஸ்னாக்ஸை தலையில் கட்டுதல், அநியாய பார்க்கிங் கட்டணம், ப்ளாக் டிக்கட் விற்பனை. இதப்பத்தி இவர் பேசுறதே இல்லை. இப்படியான தியேட்டர்களை கண்டிக்கறதும் இல்லை. நமக்கு மட்டும் அறிவுரையாம்" என குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











