Blue Sattai Maran - 3,000 கோடி ப்பே.. பொன்னியின் செல்வன் 2வை கிண்டலடித்த ப்ளூ சட்டை மாறன்

சென்னை: Blue sattai Maran (ப்ளூ சட்டை மாறன்) பொன்னியின் செல்வன் 2 படம் 3000 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கிண்டல் செய்திருக்கிறார்.

மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவானது. இதன் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி டீசண்ட்டான வரவேற்பைப் பெற்றது. மேலும் 500 கோடி ரூபாயை உலகம் முழுவதும் வசூலித்தது. இதனையடுத்து பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்துக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருந்தது.

Blue Sattai Maran Trolled Ponniyin selvan 2 Movie Collection

பொன்னியின் செல்வன் 2 ரிலீஸ்: அருண்மொழி சோழனை நீரிலிருந்து ஊமை ராணி காப்பாற்றும்படி தொடங்கும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. முதல் பாகத்தில் இருந்த சின்ன சின்ன குறைகளை மணிரத்னம் நிச்சயம் இரண்டாம் பாகத்தில் தீர்த்திருப்பார். படம் பெரும் வசூல் வேட்டை நடத்தும் என்ற நம்பிக்கையுடன் ரசிகர்கள் திரையரங்குகளுக்கு படை எடுத்தனர்.

ஏமாற்றிய பொன்னியின் செல்வன் 2: ஆனால் தங்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய பொன்னியின் செல்வன் 2 தவறிவிட்டதாக ரசிகர்களில் பெரும்பாலானோர் கூறினர். குறிப்பாக பொன்னியின் செல்வன் நாவலில் ஆதித்த கரிகாலன் கொல்லப்படுவதாக கல்கி எழுதியிருப்பார். ஆனால் படத்திலோ ஆதித்த கரிகாலன் தற்கொலை செய்துகொள்வது போல் மணிரத்னம் காட்சிப்படுத்தியிருக்கிறார். தனது இஷ்டத்துக்கு வரலாறை மாற்றியிருக்கிறார் என்ற விமர்சனத்தை முன்வைத்தனர்.

Blue Sattai Maran Trolled Ponniyin selvan 2 Movie Collection

ராஜமௌலியிடம் க்ளாஸ் போங்க: அதுமட்டுமின்றி மேக்கிங் ரீதியாகவும் படம் சுமாராகத்தான் இருக்கிறது. பாகுபலியும் ஒரு சரித்திர கால கதைதான் அதை ராஜமௌலி எவ்வளவு பிரமாண்டமாக எடுத்திருக்கிறார். ஆனால், பொன்னியின் செல்வனோ அதன் பக்கத்தில்கூட செல்லவில்லை. எனவே ராஜமௌலியிடம் மணிரத்னம் சரித்திர படத்தை எப்படி எடுக்க வேண்டும் என கற்றூக்கொள்ளலாம் என ஒபனாகவே விமர்சித்தனர்.

காலை வாரிய வசூல்: இதற்கிடையே பொன்னியின் செல்வன் முதல் பாகம் 500 கோடி வசூலித்தது எனவே இரண்டாம் பாகம் அதை நிச்சயம் தாண்டும் என்று படக்குழு நம்பியிருந்தது. ஆனால் உலக அளவில் படம் வெளியாகி பத்து நாட்களில் பொன்னியின் செல்வன் 2 வசூல் டல்லடித்ததாகவே கூறப்பட்டது. சூழல் இப்படி இருக்க படத்தை தயாரித்த லைகா நிறுவனம், பொன்னியின் செல்வன் 2 உலக அளவில் 300 கோடி ரூபாய் வசூலை தாண்டியிருப்பதாக நேற்று அறிவித்தது.

Blue Sattai Maran Trolled Ponniyin selvan 2 Movie Collection

3,000 கோடி வசூல்: 1000 கோடி ரூபாய் வசூலிக்கும் என பொன்னியின் செல்வன் ரசிகர்கள் எதிர்பார்த்திருக்க, 300 கோடியை தாண்டுவதற்கே 10 நாட்கள் தேவைப்பட்டிருப்பதால் 1000 கோடிக்கு வாய்ப்பே இல்லை என கருதப்படுகிறது. இந்நிலையில் பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில், "பொன்னியின் செல்வன் 2 உலக அளவில் 3000 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது. பேன் வேர்ல்ட் ரெக்கார்ட் பிரேக்" என கிண்டலாக பதிவிட்டிருக்கிறார். அவரது இந்தப் பதிவு ட்விட்டரில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X