Blue Sattai Maran: “ஒருமைல பேசுனா இப்படித்தான்”... ரஜினியை பஞ்சாயத்துக்கு இழுத்த ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் செகண்ட் சிங்கிள் கடந்த வாரம் 17ம் தேதி வெளியானது.

அனிருத் இசையில் சூப்பர் சுப்பு எழுதிய இந்தப் பாடல் ரஜினிக்கு செம்ம மாஸ் காட்டியிருந்தது.

பாடலின் ஒவ்வொரு வரிகளும் ரஜினியின் ரசிகர்களுக்காக எழுதியதை போல இருந்தது.

இந்நிலையில், இப்பாடலில் ஒருமையில் உள்ள சில வரிகளை குறிப்பிட்டு ரஜினியை பஞ்சாயத்துக்கு இழுத்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

 Blue Sattai Maran trolled Rajini for Jailer Second Single

ரஜினியை பஞ்சாயத்துக்கு இழுத்த ப்ளூ சட்டை:சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கியுள்ள இப்படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. முன்னதாக ஜெயிலர் இசை வெளியீட்டு விழா வரும் 28ம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் உட்பட ஏராளமான பிரபலங்கள் பங்கேற்கவுள்ளனர்.

இதனிடையே கடந்த வாரம் ஜெயிலர் இரண்டாவது பாடல் வெளியானது. அனிருத் இசையில் உருவான இப்பாடலை சூப்பர் சுப்பு என்பவர் எழுதியுள்ளார். "ஹ்ம்க்கும் டைகர் கா ஹ்ம்க்கும்" என்ற டைட்டிலில் உருவாகியுள்ள இப்பாடலை சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். முக்கியமாக இப்பாடலின் ஒவ்வொரு வரிகளையும் ரஜினிக்காக செதுக்கியுள்ளார் சூப்பர் சுப்பு.

அதேபோல், அனிருத்தின் இசையும் ரஜினி ரசிகர்களுக்கு செம்ம வைப் கொடுத்திருந்தது. இந்நிலையில் இப்பாடலின் வரிகளில் தனது ரசிகர்களை ஒருமையில் குறிப்பிட்டுள்ளார் ரஜினி. அதாவது "ஒன் அலும்ப பாத்தவன்... உங்கொப்பன் விசில்-அ கேட்டவன்... ஒன் மவனும் பேரனும்... ஆட்டம் போட வைப்பவன்" போன்ற வரிகள் இடம்பெற்றிருந்தன. இன்னொரு பக்கம் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்தும் சில வரிகள் இடம்பெற்றன.

 Blue Sattai Maran trolled Rajini for Jailer Second Single

இந்நிலையில் இந்த வரிகளை குறிப்பிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினியை ட்ரோல் செய்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். வடிவேலு மீம்ஸுடன் டிவீட் செய்துள்ள அவர், "இந்தாம்மா. உங்கப்பனை வெளிய வந்து இந்த குட்டி சுவத்தை எட்டிப்பாக்க சொல்லு. ஒரு சின்ன பஞ்சாயத்து இருக்கு" என்பதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்தை குறிப்பிட்டுள்ளார். அதற்கு அவர் பதிலளிப்பதாகவும் ப்ளூ சட்டை மாறன் ட்வீட் செய்துள்ளார்.

அதில், "அப்பன்னு டாடியை மரியாதை இல்லாம பேசாதீங்க. இதுக்குத்தான் கேட்டுக்கு உள்ள உங்களை விடறதே இல்ல. நான்சன்ஸ்" என கோபம் வருவதாக ஐஸ்வர்யா பதில் கொடுக்கிறாராம். அப்போதும் விடாத ப்ளூ சட்டை மாறன், "கோவம் வருதுல்ல. அதேமாதிரிதான் எங்களுக்கும். எங்க அப்பாக்களை உங்கப்பன்னு ஒருமைல பேசுனா இப்படித்தான். உங்களுக்கு வந்தா ரத்தம். எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா? சொல்லி வை... அவர்கிட்ட' என பங்கமாக கலாய்த்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X