Blue Sattai Maran - ஜிகர்தண்டா 2வை புகழ்ந்த ரஜினிகாந்த்.. நீங்க ஊதவே வேண்டாம்.. கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்

சென்னை: Blue Sattai Maran (ப்ளூ சட்டை மாறன்) ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை புகழ்ந்த ரஜினிகாந்த்தை ப்ளூ சட்டை மாறன் கலாய்த்திருக்கிறார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த பத்தாம் தேதி ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் வெளியானது. ஜிகர்தண்டா படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் இந்தப் படத்தின் மீதும் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. இதில் எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ், நிமிஷா சஜயன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

Blue Sattai Maran Trolled Rajinikanth due to Jigarthanda Double X Movie

பாசிட்டிவ் விமர்சனம்: படத்தை பார்த்த ரசிகர்கள் ஏகத்துக்கும் கொண்டாடிவருகின்றனர். கார்த்திக் சுப்புராஜின் மேக்கிங்கும் திரைக்கதையும் அவ்வளவு அழகாக இருப்பதாக கூறும் ரசிகர்கள்; படத்தில் யானையையும் பழங்குடியின மக்களையும் இயக்குநர் கனெக்ட் செய்த விதம் அப்ளாஸை அள்ளுகின்றது எனவும் சமூக வலைதளங்களில் கூறிவருகின்றனர். வசூலிலும் நல்ல ரெஸ்பான்ஸை பெற்று இதுவரை 20 கோடி ரூபாய்க்கும் மேல் படம் வசூலித்திருக்கிறது.

எஸ்.ஜே.சூர்யா, லாரன்ஸ்: படத்தின் இரண்டு தூண்களாக இருப்பவர்கள் எஸ்.ஜே.சூர்யாவும், லாரன்ஸும்தான். எஸ்.ஜே.சூர்யா சமீபமாக நடிக்கும் படங்களில் அசால்ட்டாக ஸ்கோர் செய்துவிடுகிறார். ஆனால் இந்தப் படத்தில் லாரன்ஸ் நடிப்பை பார்த்த ரசிகர்கள் அவருக்குள் இப்படியும் ஒரு நடிகர் இருக்கிறாரா என்று ஆச்சரியப்பட்டனர். இதுபோன்றே லாரன்ஸ் தொடர்ந்து நடிக்க வேண்டும் எனவும் ரசிகர்கள் பேச ஆரம்பித்திருக்கின்றனர்.

ரஜினியின் புகழ்ச்சி: இந்தப் படத்தை உருவாக்குவதற்கு ரஜினிகாந்த்தான் இன்ஸ்பிரேஷன் என்று கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்திருந்தார். இந்த சூழலில் படத்தை பார்த்த ரஜினி நேற்று தனது வாழ்த்தை தெரிவித்திருந்தார். அந்த வாழ்த்து செய்தியில், "ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் ஒரு குறிஞ்சி மலர். கார்த்திக் சுப்புராஜின் அற்புதமான படைப்பு. வித்தியாசமான கதை மற்றும் கதைக்களம். சினிமா ரசிகர்கள் இதுவரை பார்க்காத புதுமையான காட்சிகள்.

பிரமிப்பு: லாரன்ஸால் இப்படியும் அடிக்க முடியுமா என்ற பிரமிப்பை நமக்கு உண்டாக்குகிறது. எஸ்.ஜே.சூர்யா இந்நாளின் திரையுலக நடிகவேள். வில்லத்தனம், நகைச்சுவை, குணசித்திரம் என மூன்றையும் கலந்து அசத்தியிருக்கிறார். திருவின் கேமரா விளையாடியிருக்கிறது. கலை இயக்குநரின் உழைப்பு பாராட்டுக்குரியது. திலீப் சுப்புராயனின் சண்டை காட்சிகள் அபாரம்.

சந்தோஷ் நாராயணன் வித்தியாசமான படங்களுக்கு வித்தியாச இசை அமைப்பதில் மன்னர். இதில் தான் ஒரு தலைசிறந்த இசையமைப்பாளர் என்பதை நிரூபித்திருக்கிறார். பழங்குடிகள் நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறார்கள். நடிகர்களுடன் போட்டிப்போட்டு யானைகளும் நடித்திருக்கின்றன. கார்த்திக் சுப்புராஜை நினைத்து பெருமைப்படுகிறேன்" என குறிப்பிட்டிருந்தார்.

கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்: இந்நிலையில் ரஜினிகாந்த் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை புகழ்ந்ததை வைத்து ப்ளூ சட்டை மாறன் ரஜினிகாந்த்தை கலாய்த்திருக்கிறார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பஞ்சதந்திரம் பட சீனில் நாகேஷும், வாசுவும் பேசும் வசனத்தை வைத்து, ஜிகர்தண்டா 2 பிரமாதமான படம் - தலீவர். 'நீங்க ஊதவே வேணாம்” என்று குறிப்பிட்டு கலாய்த்திருக்கிறார். இதற்கு ரஜினி ரசிகர்களும் பதிலடி கொடுத்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X