Blue Sattai Maran - ரெய்டுக்கு பயப்படுறார்.. ரஜினிக்கு எஜமான் மோடிதான்.. பங்கம் செய்த ப்ளூ சட்டை மாறன்

சென்னை: Blue Sattai Maran (ப்ளூ சட்டை மாறன்) யோகி ஆதித்யநாத்தை ரஜினிகாந்த் சந்தித்ததை அடுத்து ப்ளூ சட்டை மாறன் வழக்கம் போல் பங்கம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்.

ஜெயிலர் படத்தின் ரிலீஸுக்கு சில நாட்கள் முன்பு ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்றார். சுமார் நான்கு வருடங்களுக்கு பிறகு அவர் இமயமலை சென்றதாலும்; படத்தின் ரிலீஸுக்கு முன்னர் சென்றதாலும் அவரது இந்த பயணத்தை ரஜினி ரசிகர்கள் ரொம்பவே ஸ்பெஷலாக பார்த்தனர். குறிப்பாக அவர் இமயமலை சென்றதால் கண்டிப்பாக படம் ஹிட்டடிக்கும் என்ற நம்பிக்கையிலும் அவர்கள் இருந்தனர்.

 Blue Sattai Maran Trolled Rajinikanth Due To Yogi Adithyanath Meeting

படம் ஹிட்: அவர்கள் எதிர்பார்த்தபடியே ஜெயிலர் படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. படத்தில் சில பிரச்னைகள் இருந்தாலும் நெல்சன் - ரஜினிகாந்த் காம்போ நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. விமர்சன ரீதியாக பெரும்பாலும் பாசிட்டிவ் ரிவ்யூவே வந்தது. அதேபோல் வசூல் ரீதியாகவும் படத்துக்கு டீசண்ட் டாக்கே ஓடிக்கொண்டிருக்கிறது. படம் வெளியாகி ஒரு வாரத்தில் 375 கோடி ரூபாய்க்கும் அதிகம் வசூலித்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனமும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

இமயமலை பயணம்: இமயமலைக்கு சென்ற ரஜினிகாந்த் அங்கிருக்கும் ஆன்மீக தலங்களுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.அதனையடுத்து பாபா குகைக்கு சென்று தியானமும் செய்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டானது. இமயமலைக்கு சென்று வழிபாடு நடத்தியது மட்டுமில்லாமல் அங்கு வந்த ரசிகர் ஒருவருக்கு தங்கும் இடத்தை ஏற்பாடு செய்து பண உதவி செய்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

 Blue Sattai Maran Trolled Rajinikanth Due To Yogi Adithyanath Meeting

பயணத்தை முடித்த ரஜினிகாந்த்: இமயமலை பயணத்தை முடித்த ரஜினிகாந்த் நேராக தமிழ்நாடு வருவார் என்று எதிர்பார்த்தால் வட மாநிலங்களில் டூர் அடித்துக்கொண்டிருக்கிறார். அந்த டூர் இப்போது சர்ச்சையாகியுள்ளது. அதற்கு காரணம் அவரது டூர் அரசியல் சந்திப்புகளை அடிப்படையாக வைத்து நடந்துகொண்டிருப்பதுதான். முதலில் ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்த அவர் அடுத்ததாக உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்தி பென், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரை சந்தித்தார். மேலும் அம்மாநில துணை முதலமைச்சர் மௌரியாவுடன் ஜெயிலர் படத்தை கொஞ்ச நேரம் பார்க்கவும் செய்தார்.

காலில் விழுந்த ரஜினிகாந்த்: அரசியல் தலைவர்களை சந்திப்பது அவருடைய தனிப்பட்ட விருப்பம் என்று முதலில் எடுத்துக்கொள்ளப்பட்டாலும் யோகி ஆதித்யநாத்தின் காலில் அவர் விழுந்தது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கடவுள், அப்பா, அம்மா காலில் மட்டும் விழுங்கள் என சொன்ன ரஜினிகாந்த் யோகி காலில் ஏன் விழ வேண்டும். எனில் அவரை இவர் கடவுளாக பார்க்கிறாரா என ஒரு தரப்பினர் கேள்வி எழுப்ப;

ரஜினிகாந்த் காலில் விழுந்தது ஒரு ஆன்மீகவாதியிடம். அதை நாம் அப்படித்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என மறு தரப்பினர் எதிர்வாதம் வைக்கின்றனர். இருந்தாலும் யோகி காலில் ரஜினி விழுந்ததை அவரது ரசிகர்களில் பெரும்பாலானோரே ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் கள எதார்த்தம்.

ஏன் சந்திப்பு இல்லை: அதேபோல் ரஜினிகாந்த் சந்திப்பு நடத்திய அத்தனை பேரும் பாஜகவின் ஆதரவாளர்கள். தான் அனைவருக்கும் பொதுவானவர் என்றால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களையும் சந்திக்க வேண்டியதுதானே என கேள்வி எழுப்பி; எனக்கு காவி சாயம் பூச முயற்சிக்கிறார்கள் என்று சில வருடங்களுக்கு முன்னர் ரஜினிகாந்த் பேசியதையும் எடுத்துப்போட்டு ட்ரோல் செய்ய ஆரம்பித்திருக்கின்றனர்.

ரஜினிக்கு ரெய்டுதான்: இந்நிலையில் ரஜினிகாந்த்தை கடுமையாக விமர்சித்துவரும் ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில், "'தலீவரே.. நீங்க தொடர்ந்து பாஜக தலைவர்களை சந்திக்கறது தமிழ்நாட்ல சர்ச்சையாகுது. சீக்கிரம் டேமேஜ் கண்ட்ரோல் பண்ணுங்க' 'ஓஹோ அப்படியா விசயம்? அப்படின்னா அகிலேஷை சந்திச்சி ஒரு கட்டிப்பிடி வைத்தியம் போட்டுடறேன்' ' ஏன் சோனியா, ராகுலை எல்லாம் பாத்தா ஆகாதா?' 'சும்மா இருய்யா. என் எஜமான் கோச்சிப்பாரு‌. அப்பறம் ரெய்டு வரும்" என குறிப்பிட்டிருக்கிறார். அவரது இந்த ட்வீட் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X