Blue Sattai Maran - பாட்டுல இல்லை ஆனா போஸ்டர்ல இருக்காரு.. ரஜினியை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்

சென்னை: Blue Sattai Maran (ப்ளூ சட்டை மாறன்) காவாலா பாட்டு சீனில் ரஜினிகாந்த் இல்லை ஆனால் 100 மில்லியன் வீயூஸ் போஸ்டரில் இருக்கிறார் என்று ப்ளூ சட்டை மாறன் தெரிவித்திருக்கிறார்.

Blue Sattai Maran Trolled Rajinikanth for Jailer Kaavaalaa Poster

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் வெளியாகி மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. கடந்த சில வருடங்களாக வெற்றிக்காக தடுமாறிக்கொண்டிருந்த ரஜினிக்கு நெல்சன் திலீப்குமாரும், பீஸ்ட்டில் விழுந்த நெல்சன் திலீப்குமாரை ரஜினிகாந்த்தும் கைகொடுத்து தூக்கியிருக்கிறார்கள் என்று ரசிகர்கள் மகிழ்ச்சியோடு கூறினார்கள்

மெகா வசூல்: படத்தின் ரிலீஸ் நாளிலிருந்தே ஜெயிலர் படம் வசூலை அள்ளி வந்ததாகவே பல தகவல்கள் ஓடின.ஒரு வாரத்தின் முடிவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி ஒரு வார முடிவில் 375 கோடி ரூபாயை தாண்டிவிட்டதாக சன் பிக்சர்ஸ் தெரிவித்தது. மேலும் உலகம் முழுவதும் மொத்தம் 700 கோடி ரூபாயை தாண்டி வசூலித்தது.

கலாநிதி மாறன் பரிசு: இந்தச் சூழலில் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகிவிட்டதால் கலாநிதி மாறன் பரிசுகளை அள்ளி கொடுத்தார். அதன்படி ரஜினி வீட்டுக்கு சென்ற அவர் செக்கை கொடுத்து இரண்டு பிஎம்டபிள்யூ கார்களை காட்டி எது வேண்டுமோ எடுத்துக்கொள்ள சொன்னார். அதேபோல் நெல்சனிடமும், அனிருத்திடமும் சில கார்களை கலாநிதி காட்ட அவர்கள் போர்ஷே கார்களை பரிசாக பெற்றுக்கொண்டனர். ரஜினிக்கு கொடுத்தது போல் அவர்களுக்கும் செக் ஒன்றை பரிசாக கொடுத்தார்.

காவாலா தமன்னா: இதற்கிடையே ஜெயிலர் படத்தின் முதல் சிங்கிளாக காவாலா பாடல் வெளியானது. அது வெளியானதிலிருந்தே ஜெயிலர் பீவர் பற்றிக்கொண்டது. அனிருத்தின் இசை பயங்கரமாக இருந்தாலும் அதைத் தாண்டி ரசிகர்களை கவர்ந்தது தமன்னாவின் நடனம். அந்த நடனத்தை பார்த்த பலரும் அதேபோல் ரீல்ஸ் செய்து வீடியோக்களை போட ஆரம்பித்தனர்.

100 மில்லியன் வியூஸ்: இந்த சூழலில் காவாலா பாடல் யூட்யூபில் 100 மில்லியன் (10 கோடி) பார்வைகளை கடந்திருக்கிறது. அதுதொடர்பான போஸ்டரும் வெளியாகியிருக்கிறது. அந்தப் போஸ்டரில் ரஜினிகாந்த்தும் தமன்னாவும் இடம்பெற்றிருக்கின்றனர். இந்நிலையில் இதுகுறித்து ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்த பாட்டு ஹிட்டானதுக்கு காரணம் தமன்னா. காவாலா பாட்டு சீன்ல தலீவர் இல்ல. ஆனா 100M வியூஸ் போஸ்டர்ல மட்டும் இருப்பாராம்.

Blue Sattai Maran Trolled Rajinikanth for Jailer Kaavaalaa Poster

ஜெயிலர் படத்துக்கு முதல் வைரல் ரீச் தந்தது இந்த பாட்டுதான். ஆனா ட்ரைலர்ல தமன்னா இல்ல. அவங்களுக்கு பரிசா கார் தரல.இதைவிட ஒரு சுயநலம் இருக்க முடியுமா" என குறிப்பிட்டிருக்கிறார். அவரது இந்த ட்வீட் தற்போது ட்விட்டரில் ட்ரெண்டாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X