Rajini - பட்டத்தை பறிக்கிறான்னு ஒப்பாரி வெச்ச.. இப்ப பட்டத்தை கொடுக்குற.. ரஜினியை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்
சென்னை: Blue Sattai Maran (ப்ளூ சட்டை மாறன்) நடிகர் ரஜினிகாந்த்தை ப்ளூ சட்டை மாறன் ஒருமையில் கலாய்த்திருப்பது ரஜினி ரசிகர்களை கொந்தளிக்க செய்திருக்கிறது.
வாலி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான எஸ்.ஜே.சூர்யா குஷி, நியூ, அன்பே ஆருயிரே, இசை ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். மிகச்சிறந்த இயக்குநர்களில் ஒருவராக இருந்த அவருக்கு நடிகராக வேண்டும் என்பதுதான் அடிப்படை ஆசை. நியூ படத்தின் மூலம் அந்த ஆசையையும் அவர் நிறைவேற்றிக்கொண்டார்.

தொடர்ந்து நடிப்பு: நடிப்பில் கவனம் செலுத்திவந்த சூர்யாவுக்கு இறைவி படம் பெயர் சொல்லும்படி அமைந்தது. அந்தப் படத்துக்கு பிறகு அவர் முழுநேர நடிகராக மாறினார். அந்த வகையில் நடிப்பு கரியரில் அவரை கொண்டு போய் டாப்பில் நிறுத்திய இன்னொரு படம் என்றால் அது மாநாடு. அப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு ரகளையாக இருந்ததாக ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்: அதேபோல் அடுத்தடுத்து அவர் நடித்த படங்களில் சூர்யாவின் நடிப்பு பேசப்பட்டது. இந்த சூழலில் அவர் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் கடந்த 10ஆம் தேதி வெளியானது. படத்துக்கு ரசிகர்கள் செம ரெஸ்பான்ஸை கொடுத்து வருகின்றனர். எஸ்.ஜே.சூர்யாவும் தனது நடிப்பில் வழக்கம் போல் ஸ்கோர் செய்துவிட்டார் என்றும் சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ்கள் அதிகம் தென்படுகின்றன.
ரஜினி பாராட்டு: ஜிகர்தண்டா 2 படத்தை பார்த்த ரஜினிகாந்த் படத்தையும் அதில் பணியாற்றியவர்களையும் பாராட்டி நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் எஸ்.ஜே.சூர்யாவை பாராட்டும்போது, "எஸ்.ஜே.சூர்யா இந்நாளின் திரையுலக நடிகவேள்" என்று புகழ்ந்திருந்தார். இந்நிலையில் அவர் அவ்வாறு சொன்னதை வைத்து ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் கலாய்த்திருக்கிறார்.
ஒப்பாரி: அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் எம்.ஆர்.ராதாவின் புகைப்படத்தை பகிர்ந்து, "எஸ்.ஜே.சூர்யா இந்நாளின் நடிகவேள் - தலீவர் பாராட்டு. 'ஏன்டா டேய்.. நான்தான் ஒரே சூப்பர் ஸ்டார். போட்டிக்கு ஒருத்தன் வர்றான். பட்டத்தை பறிக்க போறான்னு ஒப்பாரி வச்சியே... இப்ப... நடிகவேள் பட்டத்தை மட்டும் இன்னொருத்தருக்கு தூக்கி தருவியா? இங்க ஒரே ஒரு நடிகவேள். அது நான் மட்டும்தான். வேணும்னா நடிகதேள், நடிகவாள்னு வேற பட்டத்தை குடு. இல்லன்னா மூடிட்டு இரு' என ரஜினியிடம் எம்.ஆர்.ராதா பேசுவது போன்று பதிவிட்டிருக்கிறார்.
இந்தப் பதிவு ரஜினி ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறார். அவர் எப்படி தங்கள் தலைவரை ஒருமையில் பேசலாம் என கேட்டு பதிலடி கொடுத்துவருகின்றனர்.முன்னதாக, அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான் என்ற பஞ்சாயத்து எழுந்தபோது ஜெயிலர் படத்தின் ஹுக்கும் பாடலில், பட்டத்தை பறிக்க நூறு பேரு என்று ஒரு வரி இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











