Blue Sattai Maran - ரஜினிக்கு பில்டிங்கும் வீக்கு.. பேஸ்மெண்ட் ரொம்ப வீக்கு.. ப்ளூ சட்டை மாறன் ட்வீட்

சென்னை: Blue Sattai Maran (ப்ளூ சட்டை மாறன்) ரஜினிக்கு பில்டிங்கும் வீக்கு, பேஸ்மெண்ட்டும் வீக்கு என ப்ளூ சட்டை மாறன் தெரிவித்திருக்கிறார்.

ரஜினிக்கு வரிசையாக இரண்டு படங்கள் தோல்வி அடைந்ததன் காரணமாகவும், விஜய்யின் படங்கள் வரிசையாக நூறு கோடி ரூபாயை வசூலிப்பதாக கூறப்படுவதாலும் விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பேச்சு இண்டஸ்ட்ரியில் எழுந்தது. இதனை விரும்பாத ரஜினி ரசிகர்கள் விஜய் ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்துவந்தனர். ஆனால் ரஜினிகாந்த் எந்த ரியாக்ட்டும் செய்யாமல் அமைதியாக இருந்தார்.

Blue Sattai Maran Trolled Rajinikanth In Vijay fans Poster Issue

பாடல் வரிகளும், பேச்சு: சூழல் இப்படி இருக்க ஜெயிலரிலிருந்து வெளியான ஹுக்கும் பாடல் வரிகளும், களவாணி கண்ணைய்யா பாடல் வரிகளும் விஜய்க்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் இருப்பதாக ரஜினி ரசிகர்கள் கூறினர். குறிப்பாக ஹுக்கும் பாடலில் தலைவர் களத்துல சூப்பர் ஸ்டாருடா என்ற வரி அதனை உறுதிப்படுத்தும் விதமாகவே அமைந்திருப்பதாக கருத்து எழுந்தது.

காக்கா,கழுகு கதை: பாடல் வரிகள்தானே என்று விஜய் ரசிகர்கள் அமைதியாக இருக்க ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினி கூறிய காக்கா, கழுகு கதை விஜய் ரசிகர்களுக்கு உஷ்ணத்தை கூட்டியது. ரஜினிக்கு மட்டும் குட்டி ஸ்டோரி சொல்ல தெரியும் என நினைக்க வேண்டாம்; விஜய்யும் அதில் கில்லிதான். எனவே லியோ ஆடியோ லான்ச்சில் தளபதியின் பேச்சில் அனல் பறக்கும் என விஜய் ரசிகர்கள் முஷ்டி முறுக்க ஆரம்பித்திருக்கின்றனர்.

போஸ்டர்: இந்தச் சூழலில் சமூக வலைதளங்களில் நடந்துவந்த பஞ்சாயத்து இப்போது சுவற்றுக்கு வந்திருக்கிறது. ஆம் அதனை மதுரை மாவட்ட விஜய் ரசிகர்கள் ஆரம்பித்துவைத்திருக்கின்றனர். அந்தப் போஸ்டரில் விஜய் ரஜினியை பார்த்து, 'என்னுடைய உச்சம் உனக்கு ஏன் அச்சம்' என கேட்பது போல் வாசகங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இது இந்த விவகாரத்தில் மேலும் சூட்டை கிளப்பியுள்ளது. இந்த போஸ்டர்களுக்கு ரஜினி ரசிகர்களும் போஸ்டர் மூலம் பதிலடி கொடுப்பார்களா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

Blue Sattai Maran Trolled Rajinikanth In Vijay fans Poster Issue

ப்ளூ சட்டை மாறன் ட்வீட்: இந்நிலையில் எரிந்துகொண்டிருக்கும் போஸ்டர் விவகாரத்தில் எண்ணெய்யை ஊற்றுவதுபோல் ப்ளூ சட்டை மாறன் ஒரு ட்வீட் செய்திருக்கிறார். அந்தப் போஸ்டர் படத்தை பகிர்ந்து, ஹலோ.. என்னாது..அச்சமா? பில்டிங் வீக்கு. பேஸ்மன்ட் ரொம்ப வீக்கு. மத்தபடி எந்த பயமும் இல்ல என குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த ட்வீட்டை விஜய் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்துவருகின்றனர்.

பருந்து ரஜினி: ஜெயிலர் பாடல் வெளியானது மற்றும் ரஜினி ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசியதிலிருந்தே ரஜினியை கடுமையாக ட்ரோல் செய்துவருகிறார் மாறன். குறிப்பாக ரஜினிகாந்த்தை அவர் பருந்து என்றே குறிப்பிட்டு வருகிறார். இதற்கு ரஜினி ரசிகர்கள் பதிலடி கொடுத்துவந்தாலும் ப்ளூ சட்டை ரஜினிகாந்த்தை விமர்சிப்பதை நிறுத்துவதாக தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X