Blue Sattai Maran - இதெல்லாம் செல்லாது மக்களுக்கு உண்மை தெரியும் சீனு ராமசாமி.. ப்ளூ சட்டை மாறன் கலாய் ட்வீட்

சென்னை: Blue Sattai Maran (ப்ளூ சட்டை மாறன்) மனிஷா யாதவ் விவகாரத்தில் இயக்குநர் சீனு ராமசாமியை கலாய்த்து ப்ளூ சட்டை மாறன் ட்வீட் செய்திருக்கிறார்.

திரிஷா குறித்து மன்சூர் அலிகான் ஆபாசமாக பேசிய விவகாரம் ஓடிக்கொண்டிருந்தபோதே பத்திரிகையாளர் பிஸ்மி தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "இடம் பொருள் ஏவல் படத்தில் நடித்தபோது மனிஷா யாதவுக்கு சீனு ராமசாமி அவ்வளவு பாலியல் தொல்லைகள் கொடுத்தார். தொடர்பான அத்தனை ஆதாரங்களும் என்னிடம் இருக்கின்றன. அவரால் அந்தப் படத்திலிருந்து ஒரு வாரத்திலேயே மனிஷா விலகிவிட்டார்" என குறிப்பிட்டிருந்தார்.

சீனு ராமசாமி விளக்கம்: பிஸ்மியின் இந்தக் குற்றச்சாட்டு மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. அதற்கு பதிலளித்த சீனு ராமசாமி, ஒரு குப்பை கதை படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் மனிஷா யாதவ் தனக்கு நன்றி சொல்லும் வீடியோவை பகிர்ந்திருந்தார். ஆனால் அதற்கு பதிலளித்த மனிஷா, 'அந்த மேடையில் எல்லோருக்கும் சொல்வதுபோல்தான் அவருக்கும் நன்றி சொன்னேன். அதனால் எதுவும் மாறிவிடாது. 9 வருடங்களுக்கு முன்னர் நான் சொன்னதுதான் உண்மை' என கூறியிருந்தார்.

Blue Sattai Maran Trolled Seenu Ramasamy in Manisha Yadav Controversy

பேட்டி நீக்கம்: விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில் சம்பந்தப்பட்ட யூட்யூப் சேனல் பிஸ்மியின் பேட்டியை நீக்கியது. அவ்வாறு பேட்டி நீக்கப்பட்டதற்கு சீனு ராமசாமியின் அழுத்தம்தான் காரணம் என்ற கூற்றும் எழுந்திருக்கிறது. மேலும் பிஸ்மி வெளியிட்ட இன்னொரு வீடியோவில், மனிஷா யாதவுக்கு ஃபோன் செய்து தன்னுடைய படத்தி நடிக்கும்படி சீனு ராமசாமி கேட்டதாகவும் தெரிவித்தார்.

மனிஷா பேட்டி: இந்த சூழலில் மனிஷா கடைசியாக அளித்த பேட்டியில், சீனு ராமசாமி மனித பண்பே இல்லாதவர் என்று அதிரடியாக தெரிவித்தார். இதற்கிடையே சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "சில கேள்விகள் flash back இடம் பொருள் ஏவல் படப்பிடிப்பிற்கு வந்த முதல் நாள் ஏன் முதல் ஷாட்டில் 28 டேக் வாங்கினார் மணிஷா.

படப்பிடிப்பு தளத்தில் உதவிட வந்த மூத்த நடிகையர் வடிவுக்கரசி அவர்களிடம் கோபித்து கடுஞ்சொல் வீசினாரே ஏன்? விஷ்ணு விஷால் ஜோடியாக நடியுங்கள் என நானும் அண்ணாமலை பீலிம்ஸ் கணேஷ் அவர்களும் கேட்ட பொழுது ஏன் மறுத்தார் ? என் சம்பளத்தில் ஒரு லட்சம் நஷ்ட ஈடாக பெற்றாரே ஏன்..? மூன்று நாட்கள் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தந்த ஹோட்டலில் தன் தயாருடன் தங்கிருந்த மனிஷா அவர்களை கடைசி ஒரு நாள் காலையில் படப்பிடிப்பில் சந்தித்தேன். அந்த 28 டேக் மேக்கிங் வீடியோவுக்கு காத்திருக்கிறேன். தெய்வம் அருளனும் இருப்பினும் உங்களோடு திரும்ப பணி புரிய விரும்பினேன் என கூறி பிஸ்மி குறித்தும் குறிப்பிட்டிருந்தார்.

ப்ளூ சட்டை ட்வீட்: இந்நிலையில் திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் சீனு ராமசாமியின் கேள்விகளை பகிர்ந்து செல்லாது, செல்லாது. மக்களுக்கு உண்மை தெரியும் என குறிப்பிட்டுள்ளார். தற்போது பருத்திவீரன் பஞ்சாயத்து கோடம்பாக்கம் முழுக்க எதிரொலித்துக்கொண்டிருப்பதால் சீனு ராமசாமி தொடர்பான பஞ்சாயத்து அமுங்கிவிட்டதாக ரசிகர்களில் ஒருதரப்பினர் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X