Blue Sattai Maran: செல்வராகவனுக்கு முட்டுக் கொடுக்கும் Boomer Boys... வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: துள்ளுவதோ இளமை திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் செல்வராகவன்.
காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் என தரமான படங்களை இயக்கியுள்ளார்.
தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வரும் செல்வராகவன், ட்விட்டரில் அடிக்கடி தத்துவம் கூறி கவனம் இழுத்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது செல்வராகவன் சொன்ன ட்விட்டர் தத்துவத்தை ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்து வருகிறார்.

செல்வராகவனை ட்ரோல் செய்த ப்ளூ சட்டை மாறன்: தனுஷின் ஆரம்பகால கேரியரில் மிகப் பெரிய சப்போர்ட்டாக இருந்தவர் இயக்குநர் செல்வராகவன். துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை போன்ற படங்களில் தனுஷை வெரைட்டியான கேரக்டரில் நடிக்க வைத்து வளர்த்துவிட்டார். அதேபோல், 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, NGK போன்ற படங்களையும் இயக்கியுள்ளார்.
கடந்த சில மாதங்களாக நடிப்பில் கவனம் செலுத்தி வரும் செல்வராகவன், பீஸ்ட், சாணி காயிதம், நானே வருவேன், பகாசூரன், ஃபர்ஹானா போன்ற படங்களில் நடித்துள்ளார். அதேநேரம் சமூக வலைத்தளங்களிலும் அடிக்கடி செல்வராகவனின் வாய்ஸை கேட்க முடிகிறது. சக இயக்குநர்கள், நடிகர்கள், நல்ல திரைப்படங்களை பாராட்டி டிவிட்டரில் தனது கருத்தை ஷேர் செய்து வருகிறார்.
அதுமட்டும் இல்லாமல் செல்வராகவன் அடிக்கடி கருத்து சொல்வதும் தத்துவம் பேசுவதும் டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. அப்படி அவர் தற்போது ட்வீட் செய்த ஒரு தத்துவத்தை ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்துள்ளார். "எதை சொல்ல வந்தாலும் இதை சொல்லலாமா என சில நொடிகள் யோசித்து விட்டு சொல்லுங்கள். 90 சதவீதம் பிரச்சனைகள் அதிலேயே ஓய்ந்து விடும்!" என ட்வீட் செய்துள்ளார் செல்வராகவன்.

இதனை சூப்பரான தத்துவம் என செல்வராகவனின் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வந்தனர். இதனால் கடுப்பான ப்ளூ சட்டை மாறன், "அடேய் Boomer Boys.. என்னை மாதிரி ஆளுங்களை மட்டும்தான்டா பூமர்னு சொல்லி சுளுவா அடிச்சிப்புடறீங்க. இவர மாதிரி செலப்ரிட்டிங்க போடுற 'அரிய' தத்துவங்களுக்கு மட்டும் சூப்பர் சார், அருமை தோழின்னு கமண்ட் போட வேண்டியது. நீங்கதான்டா ஒண்ணா நம்பர் Cringe group and Boomer Boys" என கலாய்த்துள்ளார்.

இதனைப் பார்த்த செல்வராகவன் ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். அதாவது செல்வராகவன் எடுத்தது ஆயிரத்தில் ஒருவன், ஆண்டி இண்டியன் இல்லை என கமெண்ட்ஸ் செய்துள்ளனர். அதற்கு பதில் கூறியுள்ள ப்ளூ சட்டை, "ஆயிரத்தில் ஒருவனை ஃப்ளாப் ஆக்கிட்டு.. இப்ப வந்து முட்டு குடு" என வச்சி செய்துள்ளார். செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன், ரிலீஸான போது கவனிக்கப்படாமல் இப்போது கொண்டாடப்படுவதை தான் ப்ளூ சட்டை மாறன் குறிப்பிட்டு கலாய்த்துள்ளார்.


Click it and Unblock the Notifications











