SK இரட்டை வேஷம் போடாதீங்க..சிவகார்த்திகேயனை வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: மாவீரன் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் மிஷ்கின் பேசியதை சுட்டிக்காட்டி ப்ளூ சட்டை மாறன் சிவகார்த்திகேயனை ட்விட்டரில் வம்பிழுத்துள்ளார்.
எந்த படம் வந்தாலும் விமர்சனம் சொல்கிறேன் என்று அந்த படத்தை அக்குவேர் ஆணிவேராக பிரித்து மேய்ந்துவிடுவார். இதனால், ஒவ்வொரு திரைப்படம் வெளியாகும் பொழுதும் இவருடைய திரை விமர்சனத்திற்காக பலர் காத்திருப்பார்கள்.

அதே சமயம் தங்களுக்கு பிடித்தமான நடிகர்களின் படத்தை இவர் கலாய்க்கும்பொழுது வெகுண்டு எழுந்து இவரை திட்டித் தீர்க்கும் ரசிகர்களும் இணையத்தில் அதிகம் உண்டு.
வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்: சர்ச்சைக்கு பெயர் போன ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் சிவகார்த்திகேயனை வம்பு இழுக்கும் வகையில் ஒரு பதிவினை போட்டுள்ளார். அதில், SK வின் இரட்டை வேடம் என பதிவிட்டு Mr.Local திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில், பத்திரிக்கையாளர்களை கைத்தட்ட சொன்னது தவறு என ரோபோவிற்கு SK அன்பு எச்சரிக்கை விடுத்தார். ஆனால் மாவீரன் செய்தியாளர்கள் சந்திப்பில் அவ்வாறு பேசிய மிஷ்கின் கண்டிக்காது ஏன் என்று கேட்டுள்ளார்.
மாவீரன்: அதாவது, மாவீரன் திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று முன் தினம் சென்னையில் நடைபெற்றது. அதில் சிவகார்த்திகேயனை பற்றி பேசிக்கொண்டு இருக்கும் போது, யாரும் கைத்தட்டாததால், நன்றாக கைத்தட்டுங்கள் 3 மணிக்கு தூக்கமா? என்று கேட்டார். இதற்கு சிவகார்த்திகேயன் எதுவுமே சொல்லவில்லை.

கைத்தட்டுங்க ப்ளீஸ்: ஆனால், மிஸ்டர் லோகல் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ரோபோ சங்கர், செய்தியாளர்களுக்கு படம் போட்டு காட்டினால், ஏன் யாருமே பேசாம, கை தட்டாமல் அமைதியாக இருக்கீங்க, நீங்க கைத்தட்டி ரசிப்பதை பார்க்கும் போது எங்களுக்கு ஒரு நிம்மதி என்று பேசி இருந்தார்.
கண்டித்த சிவகார்த்திகேயன்: இதனையடுத்து பேசிய சிவகார்த்திகேயன் ரோபா ஷங்கர் அண்ணே.. வந்திருப்பது ரசிகர்கள் அல்ல பத்திரிகையாளர்கள், அவர்கள் ஒரு நாளைக்கு 3, 4 படங்கள் பார்க்கிறார்கள். அப்படி இருக்கும் போது அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள் என்று ரோபோ சங்கரை கண்டித்து இருந்தார் அந்த வீடியோவைத்தான் ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டு ரோபோ சங்கருக்கு ஒரு நியாயம்,மிஷ்கினுக்கு ஒரு நியாயமா என கேட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











