பேட்டியை நீக்க சொல்லி கெஞ்சிய மாவீரன்?.. சிவகார்த்திகேயனை விடாமல் கலாய்க்கும் ப்ளூ சட்டை மாறன்

சென்னை: Sivakarthikeyan D.Imman Controversy (சிவகார்த்திகேயன் டி.இமான் சர்ச்சை) டி.இமான் வைத்த குற்றச்சாட்டை அடுத்து சிவகார்த்திகேயனை ப்ளூ சட்டை மாறன் கலாய்த்திருக்கிறார்.

டி.இமான் தமிழின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர். விஜய், அஜித், ரஜினிகாந்த் உள்ளிட்டோரின் படங்களுக்கு அவர் இசையமைத்திருக்கிறார். அவர் இணைந்த ஹீரோக்களில் அவருக்கு பயங்கரமாக செட் ஆனவர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் நடித்த மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா, நம்ம வீட்டுப்பிள்ளை ஆகிய படங்களுக்கு இமான் இசையமைத்த பாடல்கள் அனைத்துமே ஹிட்டடித்தவை.

Blue Sattai Maran Trolled Sivakarthikeyan in D.Immans Allegation

குற்றச்சாட்டு: சூழல் இப்படி இருக்க இரண்டு பேரும் கடந்த சில வருடங்களாகவே இணைந்து பணியாற்றவில்லை. அதற்கான காரணம் என்னவென்று தெரியாமல் இருந்த சூழலில் இமான் சமீபத்தில் ஒரு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில், "சிவகார்த்திகேயன் எனக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்துவிட்டார். அவர் செய்த துரோகத்தை வாழ்நாள் முழுவதும் மறக்கமாட்டேன். எனது பிள்ளைகளின் நலனுக்காக அது என்ன துரோகம் என்று சொல்லமாட்டேன்" என்றார்.

பிரிவுக்கு காரணம்?: இமானின் இந்த குற்றச்சாட்டை அடுத்து அவரும் அவரது முதல் மனைவி மோனிகாவும் பிரிந்ததற்கு சிவகார்த்திகேயனே காரணம் என பலரும் பேச ஆரம்பித்தனர். ஆனால் மோனிகாவோ இமான் எடுத்த விவாகரத்து முடிவுக்கு சிவகார்த்திகேயன் ஆதரவு தெரிவிக்கவில்லை. அதனைத்தான் அவர் துரோகம் என்கிறார். வெளியில் உள்ளவர்கள் தவறாக புரிந்துகொள்கிறார்கள் என்று விளக்கமளித்தார்.

கெஞ்சிய சிவகார்த்திகேயன்?: இந்த விவகாரம் குறித்து சிவகார்த்திகேயன் இதுவரை மௌனம் கலைக்கவில்லை. அதேசமயம் அந்தப் பேட்டி வெளியானதை அடுத்து இமானுக்கு சிவகார்த்திகேயன் ஃபோன் செய்து, அந்த யூட்யூப் சேனலை தொடர்புகொண்டு வீடியோவை டெலிட் செய்ய சொல்லும்படி கெஞ்சியதாக ஒரு தகவல் தீயாக பரவியது. ஆனால் சிவகார்த்திகேயன் மீது எந்த தவறும் இல்லை; அவர் இமானிடம் கெஞ்சவும் இல்லை என அவரது ரசிகர்களும் ஆதரவாளர்களும் தொடர்ந்து கூறிவருகின்றனர்.

ப்ளூ சட்டை மாறன் ட்வீட்: இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் தளத்தில், "பேட்டியை நீக்கச்சொல்லி இசைமான் மற்றும் வாவு டமிழா சேனலிடம் பலமுறை கெஞ்சிய மாவீரன். எந்த பருப்பும் வேகவில்லை. 1 மில்லியன் வியூக்களை தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. என்னடா இது குடும்பங்கள் கொண்டாடும் இளவரசனுக்கு வந்த சோதனை" என குறிப்பிட்டிருக்கிறார். அவரது இந்த ட்வீட் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X