டேமேஜ் கன்ட்ரோல் செய்யத்தான் 10 லட்சம் ரூபாய்.. சிவகார்த்திகேயனை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன் ட்வீட்
சென்னை: Sivakarthiyan (சிவகார்த்திகேயன்) நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு ஏற்பட்ட டேமேஜை சரி செய்வதற்கே 10 லட்சம் ரூபாய் கொடுத்திருப்பதாக ப்ளூ சட்டை மாறன் தெரிவித்திருக்கிறார்.
சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் டாப் 10 ஹீரோக்களில் ஒருவர். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான மாவீரன் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. தற்போது அவர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 21ஆவது படத்தில் நடித்துவௌர்கிறார். அடுத்தாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்திலும் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.

இப்படி பிஸியாக இருக்கும் சிவகார்த்திகேயனுக்கு கோலிவுட்டில் க்ளீன் பாய் என்ற இமேஜ் இருந்தது. மது, புகை போன்ற எந்த பழக்கமும் இல்லாமல் எந்த சர்ச்சையிலும் சிக்காமல் இருந்தார். ஆனால் இசையமைப்பாளர் டி.இமான் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் சிவகார்த்திகேயனுக்கு இருந்த க்ளீன் பாய் இமேஜை டேமேஜ் செய்தார்.
துரோகம்: அவர் அளித்த பேட்டியில், “சிவகார்த்திகேயன் எனக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்துவிட்டார். அவருடன் இந்த ஜென்மத்தில் மீண்டும் இணைந்து பணியாற்றமாட்டேன். குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக அந்த துரோகத்தை வெளியே சொல்லமாட்டேன்” என்று குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து சிவகார்த்திகேயன் செய்த துரோகம் என்னவாக இருக்கும் என்று பலரும் தங்களது யூகங்களை சொல்ல ஆரம்பித்தனர். முக்கியமாக இமானின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்ததற்கு சிவாதான் காரணம் என்ற பேச்சும் பலமாக அடிபட்டது.
திட்டமிட்ட சதி: இமானின் இந்தக் குற்றச்சாட்டு மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியது. சிவகார்த்திகேயனோ இதுகுறித்து எந்த பதிலும் சொல்லாமல் மௌனம் காத்துவருகிறார். அதேசமயம் இது சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை தடுப்பதற்கான திட்டமிட்ட சதி என்றும் வேண்டுமென்றே இமான் இப்படி பேசுகிறார் என்றும் எஸ்கேவின் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
10 லட்சம் நிதியுதவி: சூழல் இப்படி இருக்கமிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியிருக்கிறார் சிவகார்த்திகேயன். அவரது இந்த செயலுக்கு பாரட்டு குவிந்துவருகிறது. இந்நிலையில் அதனை ட்ரோல் செய்திருக்கிறார் ப்ளூ சட்டை மாறன். அதாவது சிவா 10 லட்சம் ரூபாய் வழங்கியதை குறிப்பிட்டு, டேமேஜ் கன்ட்ரோல் மோட் என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இமான் விவகாரத்தில் சிவாவின் இமேஜ் டேமேஜ் ஆகிவிட்டது. அதனை சரி செய்துகொள்ளவே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுவருகிறார் என்று மறைமுகமாக கூறியிருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.


Click it and Unblock the Notifications











