காளியோட ஆட்டம் காலியான கூட்டம்.. லால் சலாம் படத்தை வெச்சு செய்த ப்ளூ சட்டை மாறன்!

சென்னை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது படம் பார்த்த ரசிகர்கள் படத்திற்கு நல்ல பாசிட்டிவ் விமர்சனத்தை கொடுத்து வருகின்றனர். இப்படம் ஆரம்பத்தில் வரவேற்பு இல்லாமல் இருந்தது. ஆனால், படத்தில் ரஜினி மொய்தீன் பாய் கேரக்டரில் இருக்கும் போஸ்டர் வெளியானதும் படத்தின் மீதான ஹைப் அதிகரித்து. முழுக்க முழுக்க ரஜினி படமாக பார்க்கப்பட்ட இந்த படத்திற்கு எதிர்பார்த்த ரசிகர்கள் தியேட்டருக்கு வராததால், ப்ளூ சட்டை மாறன் படத்தை பங்கமாக கலாய்த்துள்ளார்.

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பல்வேறு படங்களில் நடித்து திரை உலகின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக இடம் பிடித்திருப்பவர் ரஜினிகாந்த். உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவர் தமிழக அரசியலில் ஈடுபட போவதாக கடந்த சில வருடங்களுக்கு முன் அறிவித்து பிறகு அந்த முடிவிலிருந்து பின் வாங்கினார். அதன் பிறகு தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள லால் சலாம் படத்தை பங்கமாக கலாய்த்துள்ளார்.

blue sattai maran trolled super star rajinikanth lal salaam movie

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்: நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஜெயிலர் படம் கொடுத்த வெற்றியின் உற்சாகத்தால் அடுத்தடுத்த மூன்று படங்களில் கமிட் ஆனார். பொதுவாக ஒரு படத்திற்கு நடுவே சில மாதங்கள் ஓய்வு எடுத்துவிட்டு அடுத்த படத்தை தொடங்குவது ரஜினியின் வழக்கம். ஆனால், ஜெயிலர் படத்திற்கு பின் ஐஸ்வர்யா இயக்கத்திலும், ஞானவேல் இயக்கத்திலும் மற்றும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் கமிட் ஆனார். ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன், படத்தில் முக்கியத்துவம் கொடுத்து நடித்துவரும் ரஜினிகாந்த் இதன் படப்பிடிப்பு கேரளா மாநிலத்தில் தொடங்கியது. இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்ட பணிகள் ஆந்திரா மாநிலம் கடப்பாவில் நடந்து வருகிறது. இந்த படத்தை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

அதிகரித்த எதிர்பார்ப்பு: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது தனது மகள் இயக்கத்தில் உருவான லால் சலாம் படத்தில் நடித்துள்ளார். கிரிக்கெட் விளையாட்டை வைத்து மையமாக வைத்து உருவாகி உள்ள இந்த படத்தில், விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், தம்பிராமையா, தான்யா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், ரஜினி இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்து இருப்பதால், அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து. இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி படத்தின் ஹைப்பை இரண்டு மடங்காக்கியது.

blue sattai maran trolled super star rajinikanth lal salaam movie

ப்ளூ சட்டை மாறன்: லால் சலாம் முழுக்க முழுக்க ரஜினி காந்த் படம் இல்லை என்றாலும், இந்த படத்தின் இசைவெளியீட்டு விழாவில், இந்த படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்து இருந்தால், நானே நடிக்க முன்வந்தேன் என்று கூறியிருந்தார். அது மட்டுமில்லாமல், இந்த மொய்தீன் பாய் கதாபாத்திரத்தை திரையில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால், பிரபல பத்திரிகை ஒன்று லால் சலாம் படத்திற்கு டிக்கெட் எதுவும் எதிர்பார்த்த அளவு புக் ஆகவில்லை என தெரிவித்திருக்கிறது. அதை அப்படியே போட்டோவாக வெளியிட்டு இருக்கும் ப்ளூ சட்டை மாறன் காளியோட ஆட்டம் காலியான கூட்டம் என காலியாக இருக்கும் இருக்கை போட்டோவை ஷேர் செய்து பங்கமாக கலாய்த்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X