Blue Sattai Maran: "யாரும்மா நீங்கலாம்?"... மாவீரன் Cringe கிளைமாக்ஸ்... விளாசிய ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம் கடந்த 14ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
மடோன் அஸ்வின் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.
அதேநேரம் மாவீரன் படத்தின் கிளைமாக்ஸ் சினிமாத்தனமாக இருப்பதாக பலரும் விமர்சித்து இருந்தனர்.
படம் வெளியாகி ஒரு வாரம் ஆன நிலையில், மாவீரன் கிளைமாக்ஸ் குறித்து மீம் போட்டு கலாய்த்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

மாவீரன் Cringe கிளைமாக்ஸ்: சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிப்பில் கடந்த 14ம் தேதி வெளியான மாவீரன் திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது. மடோன் அஸ்வின் இயக்கிய இந்தப் படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்திருந்தார். மிஷ்கின், சரிதா, யோகி பாபு ஆகியோர் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தனர்.
மாவீரன் படத்திற்கு வாய்ஸ் ஓவர் கொடுத்து மாஸ் காட்டியிருந்தார் விஜய் சேதுபதி. அசரீரியாக ஒலிக்கும் விஜய் சேதுபதியின் குரல் கேட்டு, சிவகார்த்திகேயன் ஆக்ஷனில் கலங்கடிக்கும் காட்சிகள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. அதேபோல், சிவகார்த்திகேயன், யோகி பாபு காம்போ காமெடியிலும் பின்னி பெடலெடுத்து இருந்தனர். இந்நிலையில் மாவீரன் திரைப்படம் இதுவரை 60 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
ஒரே வாரத்திற்குள் 50 கோடி வசூலை கடந்ததால், மாவீரன் படக்குழுவினர் ரொம்பவே மகிழ்ச்சியில் உள்ளனர். முக்கியமாக பிரின்ஸ் படத்தில் தடுமாறி நின்ற சிவகார்த்திகேயனுக்கு, மாவீரன் சூப்பர் கம்பேக் கொடுத்துள்ளது. இதனையடுத்து மாவீரன் படத்தின் வெற்றியை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். நேற்று சென்னையில் நடைபெற்ற மாவீரன் சக்சஸ் மீட்டில், சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், சரிதா, இயக்குநர் மடோன் அஸ்வின் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மாவீரன் வெற்றி கொண்டாட்டம் ஒருபக்கம் இருந்தாலும், இப்படத்தின் கிளைமாக்ஸ் சீன் இப்போது வரை ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது. மாவீரன் இறுதிக் காட்சியில் இடிந்து விழப் போகும் கட்டடத்தில் சிக்கிய சிறுமியை தனது உயிரை பணயம் வைத்து காப்பாற்றுவார் சிவகார்த்திகேயன். இது ரொம்பவே சினிமாத்தனமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், மாவீரன் இறுதிக் காட்சியை ப்ளூ சட்டை மாறனும் பங்கமாக ட்ரோல் செய்துள்ளார். அவரது டிவிட்டரில், "Cringeness Maxx: எம்.ஜி.ஆர், ரஜினி படங்கள் முதல் CSK படங்கள் வரை, எரியும் அல்லது இடியப் போகும் வீட்டினுள் குழந்தையை தவிக்க விட்டு வெளியே ஓடிவரும் அம்மாக்கள் Very Selfish. யாரும்மா நீங்க எல்லாம்?" என பதிவிட்டு ஒரு மீம் ஷேர் செய்துள்ளார்.
அதில், "அதான் பில்டிங் இடியபோகுதுன்னு தெரியும்ல, அப்புறம் ஏன்ம்மா குழந்தைய வீட்டுக்குள்ளயே விட்டுட்டு வந்த" என கேட்பதாகவும், அதற்கு "அப்பதான் சார் ஹீரோ போய் அந்த குழந்தைய காப்பாத்த முடியும்" என்பதாக உள்ளது. ப்ளூ சட்டை மாறனின் இந்த ட்வீட்டை ரசிகர்களும் ஷேர் செய்து வருகின்றனர். மேலும், அவர் சொல்வது சரிதான் என்றும், இதெல்லாம் ஓவர் ஹீரோயிசம் எனவும் கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











