Vidaamuyarchi - தோ கிலோமீட்டர்.. விடாமுயற்சியை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்.. எப்போ விடிவுகாலம் வருமோ?

சென்னை: Vidaamuyarchi (விடாமுயற்சி) விடாமுயற்சி திரைப்படத்தின் ஷூட்டிங் அக்டோபர் மாதம் தொடங்கும் என்று தகவல் வெளியான சூழலில் ப்ளூ சட்டை மாறன் கலாய்த்திருக்கிறார்.

அஜித்குமார் நடிப்பில் கடைசியாக துணிவு படம் வெளியானது. ஹெச்.வினோத் இயக்கியிருந்த அந்தப் படம் வங்கி கொள்ளையையும்,வங்கி மக்களிடம் அடிக்கும் கொள்ளையையும் மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. இதனால் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. எப்போதும் ஒரு படத்தை நடித்து முடித்த பிறகே தனது அடுத்த படத்தில் கமிட்டாகும் அஜித் எல்லோரையும் ஆச்சரியப்படுத்தும்விதமாக துணிவு படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே தன் 62ஆவது படத்தில் கமிட்டானார்.

Blue Sattai Maran Trolled Vidaamuyarchi Movie

விடாமுயற்சி அப்டேட் எப்போது: அதன்படி முதலில் அந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அவர் வெளியேற மகிழ் திருமேனி உள்ளே வந்தார். தமிழ் சினிமாவில் நல்ல இயக்குநர்கள் பட்டியலில் அவரும் இருப்பதால் இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்திருக்கிறது. படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டிருப்பது அனைவரும் அறிந்ததே.

எப்போதான் ஷூட்டிங்: விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்பதுதான் தற்போது கோலிவுட்டில் இருக்கும் மில்லியன் டாலர் கேள்வி. ஆனால் பட பெயர் அறிவித்ததோடு சரி அடுத்தக்கட்டமாக படம் எந்த நிலைமையில் இருக்கிறது என்றே தெரியவில்லை. ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்றுகூட ரசிகர்களுக்கு தெரியவில்லை. இதனால் வலிமை படத்துக்கு எப்படி அப்டேட் கேட்டு காத்திருந்தார்களோ அதேபோல் இப்போதும் இருக்கிறார்கள் ஏகே ரசிகர்கள்.

சென்னையில் அஜித்: சூழல் இப்படி இருக்க அஜித்குமாரோ பைக் பயணத்தில் ஈடுபட்டார். சமீபத்தில் ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் தனது பைக் பயணத்தை முடித்து சென்னை திரும்பியிருக்கிறார். இதற்கிடையே இந்த மாத இறுதியில் அபுதாபியில் ஷூட்டிங் தொடங்கும் என்று தகவல் வெளியானது. ஆனால் அஜித் இப்போது சென்னை வந்திருப்பதால் சென்னையிலாவது ஷூட்டிங் தொடங்குமா என்று ஒருபக்கம் கேள்வி எழுந்திருந்தது.

கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்: இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் அக்டோபர் 4ஆம் தேதி தொடங்கும் என்றும் அதற்காக அஜித் விரைவில் அபுதாபி செல்லவிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இச்சூழலில் அதனை ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு தோ கிலோமீட்டர் என்று தீரனில் வரும் வசனத்தை வைத்து கலாய்த்திருக்கிறார்.

இதற்கிடையே கேப்டன் மில்லர் படத்தின் ஓவர் சீஸ் ரிலீஸ் உரிமையை லைகா கைப்பற்றியிருக்கும் அப்டேட் இன்று வெளியானது. அதனை பார்த்த ரசிகர்கள் விடாமுயற்சி அப்டேட் எப்போதான் வரும் என நொந்தபடி கேள்வி கேட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X