அடுத்தவாட்டி 1000 கோடி வசூல்னு அடிச்சுவிடுங்க.. விஜய், ரஜினியை கலாய்க்கும் ப்ளூ சட்டை மாறன்
சென்னை: Blue Sattai Maran (ப்ளூ சட்டை மாறன்) ரஜினிகாந்த்தையும், விஜய்யையும் ப்ளூ சட்டை மாறன் கிண்டல் செய்திருக்கிறார்.
விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட், வாரிசு ஆகிய இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாக அடி வாங்கின. இதனால் லியோ விமர்சன ரீதியாக கொண்டாடப்பட வேண்டும் என்ற கட்டாயத்தில் விஜய்யும், அவரது ரசிகர்களும் இருந்தனர். ஆனால் அவர்கள் எதிர்பார்க்காத வகையில் விமர்சன ரீதியாக அடி வாங்கியிருக்கிறது. அதேசமயம் வசூலில் லியோ நல்ல ரெஸ்பான்ஸை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 545 கோடி ரூபாய் வரைக்கும் இதுவரை படம் வசூல் செய்திருக்கிறது.

சக்சஸ் மீட்: லியோ படத்தின் சக்சஸ் மீட் நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. ஆடியோ லான்ச் ரத்து செய்யப்பட்டிருந்த சூழலில் சக்சஸ் மீட் நடத்தப்பட்டதால் விஜய் ரசிகர்கள் அவரது குட்டி ஸ்டோரியை எதிர்பார்த்து இருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக விஜய்யும் ஒரு குட்டி ஸ்டோரியை சொன்னார்.
ஜெயிலர்: இதற்கிடையே சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்து நெல்சன் திலீப்குமார் இயக்கிய ஜெயிலர் படமும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக பல வருடங்கள் ஹிட்டுக்காக காத்துக்கொண்டிருந்த ரஜினிக்கு ஜெயிலர் படம் மெகா ஹிட்டை கொடுத்தது. மேலும் 700 கோடி ரூபாய்வரை உலகம் முழுவதும் அந்தப்படம் வசூல் செய்திருந்தது.
ப்ளூ சட்டை மாறன் ட்வீட்: தற்போது லியோ திரைப்படம் 545 கோட் ரூபாய்க்கும் மேல் வசூல் என்றதையும், ஜெயிலரின் வசூலையும் கிண்டல் செய்திருக்கிறார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பருந்து: PS - 1 கலக்சன் 500 கோடி. நம்ம கணக்கு 525+. சுறா: அப்படின்னா நம்ம கணக்கு 545+. பருந்து 170: இப்ப 565+ போட்டுக்கங்க. சுறா 68: 585+ போட்டுக்கங்க.
மக்கள் கருத்து: மக்கள்: ரெண்டு பேரும் ரவுண்டா தலைக்கி 1,000 போட்டுக்க வேண்டியதுதான? பருந்து + சுறா கோரஸ்: அப்படி செஞ்சா நீங்க நம்ப மாட்டீங்களே. மக்கள்: இப்ப சொன்ன 525+, 545+ வடைகளை மட்டும் நாங்க நம்பிட்டா இருக்கோம்? பருந்துக்குஞ்சுளும், அணில் குஞ்சுகளும்தான் நம்பிட்டு இருக்குங்க. பாவம். அடுத்த வாட்டி 1,000+ ன்னு ரெண்டு பேரும் அடிச்சி விடுங்க. அப்பத்தான் பான் இண்டியா லெவலுக்கு ஏமாத்த முடியும்" என குறிப்பிட்டிருக்கிறார். இதில் பருந்துக்குஞ்சுகள் என்று ரஜினி ரசிகர்களையும், அணில் குஞ்சுகள் என்று விஜய் ரசிகர்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











