Blue Sattai - காவிரி பிரச்னை..இதற்கு துணியாதவன்.. தலைவா டைம் டூ மியூட்..விஜய்,சூர்யாவை பங்கம் செய்த ப்ளூ சட்டை

சென்னை: Cauvery Issue (காவிரி பிரச்னை) காவிரி பிரச்னையை மையமாக வைத்து ப்ளூ சட்டை மாறன் விஜய்யையும், சூர்யாவையும் பங்கமாக கலாய்த்திருக்கிறார்.

காவிரி ஆற்றிலிருந்து தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டிய நீரை கொடுக்காமல் கர்நாடக அரசு இருந்தது. இப்படிப்பட்ட சூழலில் காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் கடந்த மாதம் 26ஆம் தேதி நடந்தது. அப்போது, குறுவை சாகுபடிக்காக அடுத்த 15 நாட்களுக்குள் தமிழ்நாட்டுக்கு காவிரியிலிருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கர்நாடக அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

Blue Sattai Maran Trolled Vijay And Suriya Due To Cauvery Issue

எதிர்ப்பு: ஒழுங்காற்றுக்குழு இப்படி பரிந்துரை செய்ததற்கு அந்த மாநிலத்தில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. மேலும் கடந்த 29ஆம் தேதி அந்த மாநிலம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடந்ததும் அதில் பல்வேறு கன்னட அமைப்பினர் கலந்துகொண்டதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி காவிரி பிரச்னை என்றாலே சீனுக்கு வந்துவிடும் வாட்டாள் நாகராஜ் ரஜினிகாந்த் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

வெளியேற்றப்பட்ட சித்தார்த்: அதேபோல் நடிகர் சித்தார்த் தனது சித்தா படத்தின் ப்ரோமோஷனில் கர்நாடகாவில் கலந்துகொண்டார். அப்போது அந்த நிகழ்ச்சியின் பாதியில் உள்ளே நுழைந்த கன்னட அமைப்பினர் தமிழ் பட நடிகர் இங்கு ப்ரோமோஷன் செய்யக்கூடாது என்று கூறி அவரை பாதியில் வெளியேற்றினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் கிளப்பியது.

மன்னிப்பு: இதனையடுத்து பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்த பழங்கால பிரச்னையை தீர்க்காமல் இருக்கும் அரசியல் கட்சியினர், எம்பிக்களை விட்டுவிட்டு சாமானியர்களையும், கலைஞர்களையும் இப்படி நடத்துவது அழகு அல்ல. கன்னடர்கள் சார்பாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் சித்தார்த்" என்று குறிப்பிட்டிருந்தார். அதேபோல் கன்னட நடிகர் சிவராஜ்குமாரும் இந்த விவகாரத்துக்கு மன்னிப்பு கேட்டிருந்தார்.

Blue Sattai Maran Trolled Vijay And Suriya Due To Cauvery Issue

நடிகர்கள் உண்ணாவிரதம்: இதற்கிடையே கன்னட நடிகர்கள் காவிரி பிரச்னைக்காக உண்ணாவிரதமும் இருந்தனர். அதனையடுத்து தமிழ் நடிகர்கள் எல்லாம் இந்த பிரச்னையில் எங்கே போய்விட்டார்கள். அவர்களை பொறுத்தவரை மக்களின் பணம் வேண்டும்;மக்களிடம் பிரபல்யம் ஆக வேண்டும்; ஆனால் பொது பிரச்னைக்கு குரல் கொடுக்க மாட்டார்களா என ஒருதரப்பினர் குரல் எழுப்பினர்.

ப்ளூ சட்டை மாறன்: இந்நிலையில் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில், காவிரி பிரச்னை - விஜய்.. தலைவா டைம் டூ மியூட் என்று குறிப்பிட்டு தலைவா பட போஸ்டரையும், காவிரி பிரச்னை - சூர்யா.. இதற்கு மட்டும் துணியாதவன் என்று குறிப்பிட்டு எதற்கும் துணிந்தவன் பட போஸ்டரையும் பகிர்ந்திருக்கிறார். அவரது இந்த ட்வீட் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டுவருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X