Blue Sattai Maran - ரஜினி டெக்னிக்.. விஜய் அரசியலுக்கு வருவது உறுதி.. பங்கமாய் கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்
சென்னை: Blue Sattai Maran Trolled Vijay (விஜய்யை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்) விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரை வைத்து ப்ளூ சட்டை மாறன் பங்கமாக கலாய்த்திருக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ படம் நாளை வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தின் மீதுதான் எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு உச்சக்கட்டமாக இருக்கிறது. ஏனெனில் இதுவரை லோகேஷ் இயக்கிய அத்தனை படங்களும் ஹிட். எனவே இந்தப் படமும் கண்டிப்பாக ஹிட்டடிக்கும் என்று நம்பிக்கையில் இருக்கின்றனர் ரசிகர்கள்.

டிக்கெட் புக்கிங்: லியோ படத்துக்கான டிக்கெட் புக்கிங் தமிழ்நாட்டில் தொடங்கியிருக்கிறது. டிக்கெட் புக்கிங் தொடங்கியதிலிருந்து ரசிகர்கள் ஆர்வமாக டிக்கெட்டை புக் செய்துவருகின்றனர். இதுவரை பெரும்பாலான தியேட்டர்களில் டிக்கெட் விற்று காலியாகிவிட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக முதல் நாளில் லியோ கண்டிப்பாக வசூலில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்பு காட்சி: இந்த சூழலில் லியோ படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தது. ஆனால் சிறப்பு காட்சியை அதிகாலை நான்கு மணிக்கு திரையிடக்கூடாது 9 மணிக்குதான் திரையிடப்பட வேண்டும் என்றும் ஒரு செக் வைத்தது அரசு. இதனை படக்குழு கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இதனையடுத்து அதிகாலை காட்சிக்கு அனுமதி அளிக்க வேண்டுமென நீதிமன்றம் சென்றது படத்தின் தயாரிப்பு நிறுவனம். ஆனால் நீதிமன்றம் அனுமதி அளிக்கவில்லை.
7 மணி காட்சியும் நோ: இதனையடுத்து 7 மணி காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழ்நாடு அரசிடம் மீண்டும் வந்தது படத்தயாரிப்பு நிறுவனம். ஆனால் அதற்கும் திட்டவட்டமாக மறுத்துவிட்டது தமிழ்நாடு அரசு. எனவே லியோ படத்தின் முதல் காட்சி 9 மணிக்கு திரையிடப்படவிருக்கிறது. நிலைமை இப்படி இருக்க திருச்சி சாந்தி சினிமாஸும், சென்னை ரோகிணி தியேட்டரும் லியோ படத்தை திரையிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
போஸ்டர்: இந்தப் பிரச்னைகள் ஒருபக்கம் இருக்க விஜய் ரசிகர்களோ நாளை படம் ரிலீஸாவதையொட்டி போஸ்டர்களை பல விதமாக அடித்துவருகின்றனர். அந்தவகையில் கோவை ரசிகர்கள் அடித்த போஸ்டரில், வேட்டைக்கும் ரெடி கோட்டைக்கும் ரெடி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தப் போஸ்டரை ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, "ரஜினியின் சேம் டெக்னிக். விஜய் அடுத்த பத்து வருடங்களுக்கு அரசியல் கட்சி ஆரம்பிக்கமாட்டார். அரசியலுக்கு வருவது உறுதி. தேதி பல வருடம் கழித்து அறிவிக்கப்படும்" என குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











