Leo Success Meet - முதல கட்சி தொடங்கணும் பிகிலு.. விஜய்யை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்

சென்னை: Blue sattai maran (ப்ளூ சட்டை மாறன்) லியோ சக்சஸ் மீட்டில் விஜய் பேசியதை வைத்து ப்ளூ சட்டை மாறன் கலாய்த்து ட்வீட் செய்திருக்கிறார்.

Blue Sattai Maran Trolled Vijay Speech in Leo Success Meet

விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட், வாரிசு ஆகிய இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாக அடி வாங்கின. இதனால் லியோ விமர்சன ரீதியாக கொண்டாடப்பட வேண்டும் என்ற கட்டாயத்தில் விஜய்யும், அவரது ரசிகர்களும் இருந்தனர். ஆனால் அவர்கள் எதிர்பார்க்காத வகையில் விமர்சன ரீதியாக அடி வாங்கியிருக்கிறது. அதேசமயம் வசூலில் லியோ நல்ல ரெஸ்பான்ஸை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் வசூலை தொட்டுவிட்டதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சக்சஸ் மீட்: இந்நிலையில் லியோ படத்தின் சக்சஸ் மீட் நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. ஆடியோ லான்ச் ரத்து செய்யப்பட்டிருந்த சூழலில் சக்சஸ் மீட் நடத்தப்பட்டதால் விஜய் ரசிகர்கள் அவரது குட்டி ஸ்டோரியை எதிர்பார்த்து இருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக விஜய்யும் ஒரு குட்டி ஸ்டோரியை சொன்னார்.

குட்டி ஸ்டோரி: அவர் பேசுகையில், "ஒரு காட்டுல யானை, புலி, காக்கா, கழுகு, மான் என நிறைய மிருகங்கள் இருந்துச்சு. காட்டுக்கு ரெண்டு பேர் வேட்டைக்கு போனாங்க. ஒருத்தர் வில் அம்போட போய் முயல பிடிச்சிட்டு வந்தாரு. இன்னொருத்தர் ஈட்டியோட போயி யானைக்கு குறி வெச்சு ஒன்னும் இல்லாம வந்தாரு. இதுல யார் வெற்றியாளர்? நிச்சயமா யானைக்கு குறி வெச்சவர்தான் வெற்றியாளர். எப்பவும் பெரிய விஷயங்களுக்கே கனவு காணுங்க" என்றார்.

கப்பு முக்கியம் பிகிலு: இதற்கிடையே விஜய்யின் சமீபத்திய நடவடிக்கைகள் அனைத்தும் அவர் அரசியலுக்கு வருவதை உறுதிய் செய்யும்படி இருப்பதாக பலர் கூறுகின்றனர். ஆனால் அவர் எதுவும் கூறாமல் அமைதியாக இருக்கிறார். இந்த சூழலில் நேற்று நடந்த சக்சஸ் மீட்டில் தொகுப்பாளர்கள் விஜய்யிடம் 2026ஆம் ஆண்டு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த விஜய், அந்த வருடம் கால்பந்து போட்டி நடக்கவிருக்கிறது. கப்பு முக்கியம் பிகிலு என்றார்.

Blue Sattai Maran Trolled Vijay Speech in Leo Success Meet

அவரது இந்த பேச்சு விஜய்யின் அரசியல் எண்ட்ரியை உறுதி செய்துவிட்டதாக ஒருதரப்பினர் கூற ஆரம்பித்திருக்கின்றனர். இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில், "அதுக்கு மொதல்ல கட்சி ஆரம்பிக்கனும் பிகிலு. அப்பறம் தேர்தல்ல ஜெயிக்கனும் பிகிலு. இதெல்லாம் ரெண்டு வருசத்துல நடக்கவே நடக்காது பிகிலு" என குறிப்பிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X