Blue Sattai Maran Japan - JPN.. ஜாதிப் பற்று நடிகர்..கார்த்தியை வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்..?

சென்னை: Blue Sattai Maran (ப்ளூ சட்டை மாறன்) ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டிருக்கும் ட்வீட் நடிகர் கார்த்தியை வம்பிழுப்பது போல் இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

உலகமே இப்போது ஸ்மார்ட் ஃபோனுக்குள் அடங்கியிருக்கிறது. அதன் காரணமாக பலர் யூட்யூப் சேனல்களை ஆரம்பித்து பல விஷயங்களை செய்துவருகின்றனர். அதில் ஒன்றுதான் திரைப்படங்களுக்கு விமர்சனம் எழுதுவது. 90களில் தொலைக்காட்சியில் வந்த சினிமா விமர்சனங்களைவிடவும் தற்போது யூட்யூப் சேனல் மூலம் வரும் விமர்சனங்களுக்கு மவுசு அதிகரித்திருக்கிறது.அதன் காரணமாக பலரும் திரை விமர்சகர்களாக மாறியிருக்கின்றனர்.

Blue Sattai Maran trolling actor Karthi Due Japan Movie

ப்ளூ சட்டை மாறன்: அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் ப்ளூ சட்டை மாறன். மற்ற யூட்யூப் திரை விமர்சகர்களைவிடவும் இவர் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக்கொள்வது அதிகம். அதற்கு காரணம் தனக்கு பிடிக்கவில்லை என்றால் யாருடைய படமாக இருந்தாலும் கிண்டல் செய்து அந்த படத்தை ஒருவழியாக்கிவிடுவார். அதனால் ஆரம்பத்தில் அவருக்கு ரசிகர்கள் இருந்தனர். இருப்பினும் ஒருகட்டத்துக்கு மேல் அவர் மேல் விமர்சனமும் வைக்கப்பட்டது.

எல்லை மீறல்: அதற்கு காரணம் அவர் தனி நபர் தாக்குதலை தொடர்ந்து நடத்திவருவதுதான் என்ற விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. வலிமை படத்துக்கு கொடுத்த விமர்சனத்தில் அஜித்தை உருவ கேலி செய்திருந்த அவர், விக்ரம் படத்தின் விமர்சனத்தில் ஜாஃபரையும் உருவ கேலி செய்திருந்தார். அதற்கு கடுமையான கண்டனங்கள் முன்வைக்கப்பட்டன.

தொடர் ட்ரோல்: மேலும் இவ்வாறு அவர் விமர்சிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். ஒரு திரைப்படம் எடுப்பது அவ்வளவு கடினம் என்பதை அவர் ஆன்ட்டி இந்தியன் படத்தின் மூலம் உணர்ந்திருப்பார் என்றும் பலர் கூறினர். இருப்பினும் ப்ளூ சட்டை மாறன் ட்ரோல் செய்வதை நிறுத்தவில்லை.குறிப்பாக சமீப காலங்களில் ரஜினிகாந்த், விஜய் என முன்னணி நடிகர்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வறுத்தெடுத்துவருகின்றனர்.

Blue Sattai Maran trolling actor Karthi Due Japan Movie

ஜப்பான்: இந்நிலையில் இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் JPN என்பதன் விரிவாக்கம் ஜப்பான் என்ற நாடு. இதனை நீங்கள் ஒலிம்பிக், ஆசிய விளையாட்டுக்கள் போன்றவற்றில் பார்த்திருக்கலாம் என குறிப்பிட்டு தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள் JPN ஜாதி பற்று நடிகர் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ராஜுமுருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் படமான ஜப்பான் படத்தில் கார்த்தியின் கேரக்டர் பெயரும் ஜப்பான் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ப்ளூ சட்டை மாறனின் இந்த ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் JPN என்று கூறுவதன் மூலம் அவர் கார்த்தியைத்தான் மறைமுகமாக ஜாதி பற்று நடிகர் என்று கூறுகிறார் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். இந்த ட்வீட் தற்போது ட்ரெண்டாகியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X