விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த ஜெயலலிதா.. அந்த சம்பவம் ஞாபகம் வருது.. சாட்டை சுழற்றிய ப்ளூ சட்டை மாறன்

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கும் விஜய்; நேற்று இரண்டாவது மாநில மாநாட்டினை பிரமாண்டமாக மதுரையில் நடத்தினார். லட்சக்கணக்கானோர் கலந்துகொண்ட இந்த மாநாட்டில் வழக்கம்போல் திமுகவையும், பாஜகவையும் தாக்கி பேசினார். இதற்கிடையே மதுரை முழுக்க போஸ்டர்கள் அவ்வளவு ஒட்டப்பட்டிருந்தன. இந்நிலையில் அதனை குறிப்பிட்டு ப்ளூ சட்டை மாறன் போட்டிருக்கும் ட்வீட் பலரது கவனத்தை ஈர்த்திருக்கிறது.

விஜய் நடித்த தலைவா படத்தை அவரும், அவரது ரசிகர்களும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிடமாட்டார்கள். படத்தின் பெயருக்கு கீழே டைம் டூ லீட் என்ற வாசகம் இருந்தது அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எரிச்சலை உண்டு செய்தது. இதன் காரணமாக அந்தப் படத்தின் ரிலீஸுக்கு முட்டுக்கட்டை போட்டார். முட்டுக்கட்டை போட்ட கையோடு அவர் கொடநாடு மலைக்கு ஏறிவிட; ஜெயாவின் தேர்தல் வெற்றிக்கு தாங்கள் ஒரு அணில்களாக இருந்தோம் என்று சொன்ன எஸ்.ஏ.சியும், விஜய்யும்கூட ஏறினார்கள்.

இரண்டு பேரையும் சந்திக்க மறுப்பு: ஆனால் மலையேறி வந்த வெற்றிக்கு உதவிய அவர்களை சந்திக்க ஜெ மறுப்பு தெரிவித்துவிட்டார். ஏமாற்றத்தோடு கீழே இறங்கி வந்து ஜெயலலிதாவை புகழ்ந்து பேசி ஒரு வீடியோவை வெளியிட்டார். அதற்கு பிறகு படமும் வெளியானது. அந்த சம்பவத்திலிருந்தே விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்ற கோரிக்கைகளும், குரல்களும் அவரது ரசிகர்களிடமிருந்து பலமாக எழுந்தது.

Blue Sattai Maran Trolls a poster showing Jayalalithaa congratulating Vijay at the TVK Maanaadu
Photo Credit:

தமிழக வெற்றிக் கழகம்: சூழல் இப்படி இருக்க தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கினார். தங்கள் கொள்கை எதிரி பாஜக; அரசியல் எதிரி திமுக என்ற ஸ்டாண்டை எடுத்திருக்கிறார் விஜய். ஏறும் மேடைகளில், பேசும் பேச்சுக்களில் திமுகவையும், பாஜகவையும் பந்தாடுகிறார். அதேசமயம் அதிமுக மீது இன்னும் அவரது விமர்சன பார்வை விழவில்லை என்ற கருத்துக்களும் பலப்பட்டிருக்கின்றன. தங்களை தொடர்ந்து தாக்கும் விஜய்க்கு திமுகவினரும் சரிசமமாக பதிலடியை கொடுத்துவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தவெக மாநாடு: கட்சியின் முதல் மாநில மாநாடை விக்கிரவாண்டியைல் நடத்திய அவர்; இரண்டாவது மாநாட்டை மதுரையில் நடத்தினார். நேற்று நடந்த இந்த மாநாட்டில் வழக்கம்போல் திமுகவையும் பாஜகவையும் விமர்சித்து பேசினார். இதில் கலந்துகொள்வதற்காக மாநிலம் முழுவதுமிலிருந்து லட்சக்கணக்கானோர் மதுரையில் சங்கமித்தார்கள். நேற்று முன்தினம்கூட நூறு அடி கொடி கம்பம் சரிந்து விழுந்து ஒரு கார் சேதாரமானது.

களைகட்டிய போஸ்டர்கள்: இதற்கிடையே மதுரை மாநாட்டை முன்னிட்டு அங்கு எக்கச்சக்கமான போஸ்டர்கள், பேனர்களை தவெகவினர் வைத்திருந்தனர். ஒவ்வொன்றூம் ஒவ்வொரு விதமாக இருந்தது. அதிலும் விஜய்யை ஜெயலலிதா வாழ்த்துவது போன்ற போஸ்டர் ஒன்று ஊடக வெளிச்சதை பெற்றது. அந்த போஸ்டரில், 'நீங்க நல்லாருக்கணும் நாடு முன்னேற' பாடல் வரிகளும், ஜெயா, விஜய்யின் புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தன.

ப்ளூ சட்டை மாறன் ட்வீட்: இந்நிலையில் அந்தப் போஸ்டரின் புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், 'Time to lead சம்பவம் ஞாபகத்துக்கு வருது' என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த ட்வீட்டை பார்த்த ரசிகர்களோ, அட அதை ஏன் இப்ப நியாபகப்படுத்துறீங்க மாறன் என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X