Vijay: ரூல்ஸை மீறிய விஜய்.. கமாண்டரை இப்படியான விசயங்களில் பின்தொடராதீர்.. ப்ளூ சட்டை மாறன் ட்ரோல்!

சென்னை: நடிகர் விஜய்யின் கார் கிளம்பினாலே அபராதம் கட்டும் அளவுக்குத் தான் விசயங்கள் எல்லை மீறி சென்று கொண்டிருப்பதாக விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

அரசியலில் அதிரடியாக விஜய் நுழையப் போகிறார் என்கிற தகவல்களை தாண்டி அதற்கான வேலைகளை நடிகர் விஜய்யே பார்க்க ஆரம்பித்துள்ளார்.

234 தொகுதிகளை சேர்ந்த மக்கள் இயக்க நிர்வாகிகளை நேற்று சந்திக்க சென்ற போது சிக்னலை மதிக்காமல் நடிகர் விஜய்யின் கார் சென்றது கடும் விமர்சனத்துக்குள்ளாகி உள்ள நிலையில், ப்ளூ சட்டை மாறன் அதுதொடர்பாக ட்வீட் ஒன்றை பதிவிட்டு விஜய் ரசிகர்களை கடுப்பேற்றி உள்ளார்.

Blue Sattai Maran trolls Actor Vijay for disobeying Traffic rules

விஜய்யின் புது அவதாரம்: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறேன் எனச் சொல்லி பல படங்களை பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்து விட்டு கடைசியில் அரசியலுக்கு வரமாட்டேன் என சொல்லி தனது தொண்டர்களை ஏமாற்றி விட்டார்.

ஆனால், விஜய் மக்கள் இயக்கத்தை உருவாக்கி உள்ள நடிகர் விஜய் கண்டிப்பாக விரைவில் அரசியலுக்கு வருவார் என்றே விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளும் அவரது ரசிகர்களும் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், அதற்கான முன்னேற்பாடுகளை தொடங்கி உள்ளார் நடிகர் விஜய்.

மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் சந்திப்பு: சமீபத்தில் பொதுத் தேர்வில் வெற்றிப் பெற்ற மாணவ மாணவிகளை சந்தித்து நடிகர் விஜய் விருது வழங்கிய நிலையில், நேற்று பனையூரில் 234 தொகுதிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை நடிகர் விஜய் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

லியோ படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், அடுத்ததாக தளபதி 68 படத்துக்கான ஹேர்ஸ்டைல் கெட்டப்புடன் செம சார்மிங்காக விஜய் ப்ளூ டெனிம் ஷர்ட்டை அணிந்து கொண்டு காட்சியளித்த போட்டோக்களும் வீடியோக்களும் டிரெண்டாகின.

விதியை மீறிய விஜய்: சிகப்பு நிற டிராபிக் சிக்னல் போட்டிருக்க நடிகர் விஜய்யின் கார் அந்த சிக்னலை மதிக்காமல் சென்ற காட்சிகள் வெளியாகி பரபரப்பை கிளப்பின. மேலும், கிழக்கு கடற்கரை சாலை அக்கரை பகுதியில் நடிகர் விஜய்யின் கார் விதியை மீறி சென்ற நிலையில், 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாகவும் நடிகர் விஜய் ஆன்லைனில் அபராதத் தொகையை செலுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ப்ளூ சட்டை மாறன் ட்ரோல்: இந்நிலையில், செய்திச் சேனலில் வெளியான அந்த வீடியோவை ஷேர் செய்த ப்ளூ சட்டை மாறன், "மாணவ மணிகளே, நண்பா..நண்பிகளே.. கமாண்டரை இப்படியான விசயங்களில் பின்தொடராதீர். இதை உங்கள் பெற்றோர், ஆசிரியர்களிடமும் சொல்லவும்.

இவர் & பிற நடிகர்கள் இப்படி நிஜம் மற்றும் திரையில் சிகரட், சாராயம் உள்ளிட்ட போதைகளை பயன்படுத்துவதையும் உபயோகிக்காதீர்." என பதிவிட்டுள்ளார்.

Blue Sattai Maran trolls Actor Vijay for disobeying Traffic rules

விளாசும் ரசிகர்கள்: ப்ளூ சட்டை மாறனின் இந்த ட்வீட்டை பார்த்து கடுப்பான விஜய் ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனை வழக்கம் போல கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டி விளாசி வருகின்றனர்.

அதே சமயம் சரியான கருத்தை சொல்லியிருக்கீங்க, இந்த நடிகர்களை இனியும் மக்கள் நம்பி ஏமாறக் கூடாது போன்ற ஆதரவு கமெண்ட்டுகளும் ப்ளூ சட்டை மாறன் ட்வீட்டுக்கு கீழ் குவிந்து வருகின்றன.

நடிகர் விஜய் தளபதி 68 படத்துடன் சினிமாவை விட்டு விலகுவாரா? என்கிற கேள்விகள் ஒரு பக்கம் கிளம்ப மறுபக்கம் தளபதி 69 தெலுங்கு பட இயக்குநருடனும் தளபதி 70 படத்தை ஷங்கரும் இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X