ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்.. விஜய் ஆண்டனியையும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தையும் கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: தமிழ் சினிமாவில் தான் இதுபோன்ற காமெடியெல்லாம் நடப்பதாக ப்ளூ சட்டை மாறன் ஒரே மீமில் இரண்டு படங்களை கலாய்த்துள்ளார். கடந்த வாரம் வழக்கம் போல தமிழ் சினிமாவில் பல படங்கள் வெளியாகின. ஆனால், அதில் ஒரு படம் கூட சரியாக போகவில்லை.
சிம்புதேவன் இயக்கத்தில் யோகி பாபு நடித்த போட் திரைப்படம் மிகவும் குறைவான வசூலையே ஈட்டியது. மேலும், நண்பன் ஒருவன் வந்த பிறகு, பேச்சி, ஜமா என பல சிறு பட்ஜெட் படங்களும் வெளியாகின. படம் நல்லா இருப்பதாக பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்தாலும் கமர்ஷியல் வெற்றி பெரிதாக எந்த படத்திற்கும் கிடைக்கவில்லை.

கடந்த வாரம் வெளியானதிலேயே அதிக நட்சத்திர பட்டாளம் கொண்ட படமாக விஜய் மில்டன் இயக்கிய மழை பிடிக்காத மனிதன் படம் இருந்தது. மற்ற படங்களை விட சற்றே கூடுதல் வசூல் செய்தாலும், அந்த படத்தின் மீதான சர்ச்சை படத்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
மழை பிடிக்காத மனிதன்: விஜய் ஆண்டனியும் ஜிவி பிரகாஷும் மியூசிக்கில் போட்டிப் போடுவதை விட படம் நடிப்பதில் ரொம்பவே போட்டிப் போட்டு பல படங்களில் நடித்து வருகின்றனர். பெரும்பாலும் இவர்கள் இருவரும் நடிக்கும் படங்கள் தோல்வியை தழுவினாலும் தொடர்ந்து நடித்துக் கொண்டே இருப்பதாக ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்ட பலர் கலாய்த்து வருகின்றனர். கடந்த வாரம் விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ், மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடித்த மழை பிடிக்காத மனிதன் படம் வெளியானது. அந்த படத்தில் சலீம் படத்தின் காட்சியை இணைத்து விட்டதாகவும் அது தனக்கே தெரியாது என்றும் விஜய் மில்டன் வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.
நான் அவன் இல்லை: விஜய ஆண்டனிக்குத் தான் எடிட்டிங் தெரியும் என்றும் அவர் தான் சலீம் படத்தின் 1 நிமிடக் காட்சியை சொருகியிருப்பார் என ப்ளூ சட்டை மாறன் சந்தேகம் கிளப்பியிருந்தார். இந்நிலையில், தனக்கும் அதற்கும் சம்மந்தம் இல்லை என்பது போல விஜய் ஆண்டனி ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். மேலும், அந்த 1 நிமிடக் காட்சியை நீக்கிவிட்டதாகவும் கூறினார்.
ஒரே கல்லுல 2 மாங்காய்: "படத்தை ஒழுங்கா எடுக்க சொன்னா... Hard disk தொலஞ்சி போச்சி, எனக்குத்தெரியாம 1 நிமிஷ சீனை சேத்துட்டாங்கன்னு கம்பி கட்ற கதையை சொல்ல வேண்டியது." என மீம் போட்டு ப்ளூ சட்டை மாறன் விஜய் ஆண்டனியையும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தையும் கலாய்த்துள்ளார்.

மழை பிடிக்காத மனிதன் வசூல்: விஜய் ஆண்டனி நடித்த மழை பிடிக்காத மனிதன் திரைப்படம் திரையரங்குகளில் சுமார் 2 கோடி ரூபாய் அளவுக்கு கடந்த 4 நாட்களில் வசூல் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த வாரம் வெளியான படங்களிலேயே பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூலை ஈட்டிய படம் இதுதான் என்பது கூடுதல் தகவல். ஆனால், மகாராஜா, ராயன் படங்களுக்குப் பிறகு பெரிய வசூல் வேட்டை நடத்தும் படங்கள் தமிழில் கடந்த வாரம் வெளியாகவில்லை. இந்த வாரம் வெளியாகவுள்ள பிரசாந்தின் அந்தகன் எப்படி பாக்ஸ் ஆபிஸில் ஸ்கோர் செய்யும் என்பதை வெயிட் பண்ணித்தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











