Blue Sattai Maran: அதிகாலையிலேயே அஜித்தை வம்புக்கு இழுத்த ப்ளூ சட்டை மாறன்.. அந்த கருத்துக் கணிப்பு!
சென்னை: விளம்பரமே பிடிக்காது என அஜித் சொல்லிவிட்டு அடிக்கடி இப்படி சோஷியல் மீடியாவில் அவர் போட்டோ வரக் காரணம் என்ன என ப்ளூ சட்டை மாறன் நடத்திய கருத்துக் கணிப்பு ரிசல்ட்டை போட்டு அதிகாலையிலேயே அஜித்தை வம்புக்கு இழுத்துள்ளார்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் என அனைத்து முன்னணி நடிகர்களும் சினிமா விழாக்களிலும் ப்ரமோஷன்களிலும் பங்கேற்று வருகின்றனர்.
ஆனால், நடிகர் அஜித் தான் நடிக்கும் படங்களின் ப்ரமோஷனில் கூட கலந்து கொள்ள மாட்டேன் என்கிற முடிவில் நீண்ட காலமாக நிலையாக இருப்பது கடும் விமர்சனங்களை தொடர்ந்து கிளப்பி வருகிறது.

விடாமுயற்சிக்கு விடிவு காலம் எப்போ: லைகா தயாரிப்பில் பொன்னியின் செல்வன் படத்தையே இயக்குநர் மணிரத்னம் 2 பாகங்களையும் சேர்த்து 150 நாட்களில் எடுத்து முடித்து வசூல் வேட்டையும் நடத்தி விட்டார்.
ஆனால், மே மாதம் 1ம் தேதி அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான ஃபர்ஸ்ட் லுக்கிற்கு பிறகு இன்னமும் அந்த கிணத்தை யாரும் திறக்காமல் அப்படியே இருப்பது அஜித் ரசிகர்களின் பொறுமையையே ரொம்பவே சோதித்து வருகிறது. இயக்குநர் மகிழ் திருமேனி எல்லா வேலைகளையும் ரெடி செய்து வைத்த நிலையிலும் இன்னமும் படப்பிடிப்பு ஆரம்பிக்கவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகர்களுடன் வம்புச்சண்டை: மற்ற எந்தவொரு விமர்சகர்களும் ஹீரோக்களையோ இயக்குநர்களையோ பெரிதும் ட்ரோல் செய்யாத நிலையில், ப்ளூ சட்டை மாறன் மட்டும் தனது விமர்சனத்திலும் சரி தனிப்பட்ட சோஷியல் மீடியா பதிவுகளிலும் தொடர்ந்து நடிகர்களையும் சினிமா பிரபலங்களையும் ட்ரோல் செய்து வம்புச்சண்டையை இழுத்து வருகிறார்.
சமீபத்தில் மாவீரன் படத் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் குறித்து இவர் ட்ரோல் செய்ததது சரியா என கேட்க, மீம் போடக் கூட கருத்து சுதந்திரம் இல்லையா என பதிவிட்டுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
அஜித் பற்றிய கருத்துக் கணிப்பு: இந்நிலையில், அஜித் பக்கம் தனது வண்டியை திருப்பிய ப்ளூ சட்டை மாறன் சமீபத்தில் அஜித் குறித்து ஒரு கருத்துக் கணிப்பை நடத்தினார்.
அதில், "விளம்பரமே பிடிக்காது என பேட்டி, இசை வெளியீடு, விருது விழா... எதிலும் பங்கேற்காமல் இருக்கும் அஜித்தின் போட்டோக்கள் சோசியல் மீடியாவில் வந்துகொண்டே இருப்பது..." என கேட்டிருந்தார். இந்நிலையில், அதன் ரிசல்ட்டை தற்போது வெளியிட்டு அஜித் ரசிகர்களை அப்செட் ஆக்கி உள்ளார்.
திட்டமிட்ட விளம்பரம்: "Thala publicity - Poll Result: People are always smart. Hope you understand it Thala." என நடிகர் அஜித் செய்து வருவது திட்டமிட்ட விளம்பரம் என ப்ளூ சட்டை மாறன் கருத்துக் கணிப்பில் வந்த ரிசல்ட்டை வெளியிட்டுள்ளார்.
அவரது ட்வீட்டை காலங்காத்தால பார்த்த அஜித் ரசிகர்கள் கடுப்பாகி உனக்கு வேற வேலையே இல்லையா என திட்டித் தீர்க்க அனைத்து கமெண்ட்டுகளுக்கும் அசராமல் பதில் கமெண்ட்டும் போட்டு காலையிலேயே சோஷியல் மீடியாவை ரணகளமாக மாற்றி உள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

நல்ல வருமானம்: மாவீரன், ஜெயிலர், சலார், லியோ என அடுத்தடுத்து பெரிய பட்ஜெட் படங்கள் ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து ரிலீஸ் ஆக உள்ள நிலையில், ப்ளூ சட்டை மாறனுக்கு நல்ல வருமானம் தான்.
அந்த படங்களின் ரிலீஸ் மற்றும் அந்த படங்கள் குறித்த அப்டேட்கள் வரும் போதெல்லாம் தல ரவுண்டு கட்டி ட்ரோல் செய்து கல்லா கட்டுவார் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











