அஜித் சம்பளம் 303 கோடியா?.. உருட்டுனாலும் ஒரு நியாயம் வேண்டாமா.. ப்ளூ சட்டை மாறன் பொளந்துட்டாரே!

சென்னை: நடிகர் அஜித் குமாருக்கு 303 கோடி சம்பளம் என சோஷியல் மீடியாவில் போலியாக வெளியாகி உள்ள செய்தி ஒன்றை ப்ளூ சட்டை மாறன் ஷேர் செய்து கலாய்த்து ட்வீட் போட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது. சினிமா பிரபலங்கள் யாருமே வெளிப்படையாக தங்கள் சம்பளம் பற்றிய அறிவிப்பை சொல்வதில்லை. பணம் கொடுக்கும் தயாரிப்பாளர்களும் இந்த நடிகருக்கு இவ்வளவு சம்பளம் கொடுக்கிறோம் என்பதை வெளிப்படையாக அறிவிப்பதில்லை.

ஆனால், சமூக வலைதளங்களில் டிராக்கர் எனும் பெயரில் வலம் வரும் சிலர், தங்களுக்கு கிடைத்த தகவல் என விஜய்க்கு 200 கோடி சம்பளம், ரஜினிகாந்துக்கு 165 கோடி சம்பளம், அஜித்துக்கு 150 கோடி சம்பளம் என அளந்து விட்டு வருகின்றனர். இந்நிலையில், தற்போது அதை விட அஜித்தின் சம்பளம் உயர்த்தப்பட்டு சமூக வலைதளங்களில் பரவி வரும் சம்பளத்தை பார்த்து ஷாக்கான ப்ளூ சட்டை மாறன் போட்டுள்ள ட்வீட் ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தி உள்ளது.

Blue Sattai Maran trolls Ajith Kumar fake salary details which circulated in social media

துணிவு வசூல்: கடந்த ஆண்டு விஜய்யின் வாரிசு படத்துடன் மோதிய நடிகர் அஜித்தின் துணிவு படத்தின் அதிகாரப்பூர்வ வசூலையே படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் தெரிவிக்கவில்லை. அதன் பின்னர் தமிழில் எந்தவொரு படத்தையும் தயாரிக்கவும் அவர் முன் வரவில்லை. பல ஆண்டுகளாக அஜய் தேவ்கனை வைத்து அவர் தயாரித்து வரும் மைதான் படமும் வெளியாகவில்லை. அஜித்தின் துணிவு திரைப்படம் 195 கோடி வசூல் செய்தது என்றும் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்தது என்றும் பாக்ஸ் ஆபிஸ் டிராக்கர்கள் மட்டுமே தகவல் தெரிவித்து இருந்தனர்.

வேகமெடுக்கும் விடாமுயற்சி: விஜய்யின் லியோ படத்துக்கு போட்டியாக விடாமுயற்சி படத்தை இறக்க நினைத்த அஜித் குமார் இன்னமும் அந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடையாமல் உள்ளதால் சற்றே அப்செட் ஆகி உள்ளார். லியோ வெளியாகி 600 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வமாக 545 கோடி ரூபாய் வசூலை ஈட்டியதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்து இருந்தது. இந்நிலையில், விடாமுயற்சி படத்தை வேகமாக முடித்த்து விட்டு இந்த ஆண்டே ஏகே 63 படத்தையும் ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என தீவிரம் காட்டி வருகிறார் அஜித் குமார் என்கின்றனர்.

Blue Sattai Maran trolls Ajith Kumar fake salary details which circulated in social media

303 கோடி சம்பளம்: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கப் போவதாகவும் புஷ்பா படத்தை தயாரித்த மைத்ரி மூவீஸ் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், அந்த படத்தில் நடிக்க நடிகர் அஜித்துக்கு 165 கோடி சம்பளம் என தகவல்கள் வெளியான நிலையில், தற்போது பொய்யான தகவலாக 303 கோடி ரூபாய் சம்பளம் என பிரபல பத்திரிகை பெயரில் ஃபேக்கான தகவல் ஒன்று தீயாக பரவி வருகிறது.

606 கோடி: அதை பார்த்து காண்டான ப்ளூ சட்டை மாறன் "606 கோடின்னு போட்டுக்க வேண்டியதுதான.." என வெளுத்து வாங்கியுள்ளார். அவரது ட்வீட்டுக்கு கீழ் விஜய் ரசிகர்கள் ஏகப்பட்ட கமெண்ட்டுகளை போட்டு கலாய்த்து வருகின்றனர். படத்தின் பட்ஜெட் 2500 கோடி ரூபாய் என்றும், இதுதான் 2024ன் உலகமகா உருட்டு என்றும், 909 கோடி போட்டுக்கோங்க என வித விதமாக கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X