Blue Sattai Maran: விடாமுயற்சி அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்கள்.. பங்கமா கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: நடிகர் அஜித் குமாரின் வாலி, பில்லா திரைப்படங்கள் எல்லாம் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு குறைவான டிக்கெட் விலை என்பதால் ரசிகர்கள் வார இறுதி நாட்களில் கூட்டமாக சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், அந்த ஆதரவு கூட புதிய படங்களுக்கு ரசிகர்கள் கொடுக்காமல் அந்த படங்களை பொறுமையாக வீட்டில் ஓடிடியில் பார்த்துக் கொள்ளலாம் என முடிவு செய்துள்ளனர். மலையாள படங்கள் கூட சமீப காலமாக சென்னையில் சக்கைப் போடு போட்டு வருகிறது.

வாலி படத்தை பார்க்க வந்த அஜித் ரசிகர்கள் சமீபத்தில், விடாமுயற்சி படம் என்ன ஆச்சு? லைகா தூங்குகிறதா என கேள்வி எழுப்பி இருந்தனர். இந்நிலையில், அதை பார்த்த ப்ளூ சட்டை மாறன் தனது பாணியில் கலாய்த்துள்ளார்.
சிம்ரன் சந்தோஷம்: அஜித்தின் வாலி படம் ரீ ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், அந்த படத்தில் இடம்பெற்ற எபிக் காட்சி ஒன்றை ரசிகர்கள் ஷேர் செய்து வரும் நிலையில், அதை பார்த்த நடிகை சிம்ரன் அந்த காட்சி உருவான விதத்தை நினைத்து பூரித்துப் போய் போட்டுள்ள ட்வீட் அஜித் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது. அஜித் டபுள் ஆக்ஷனில் நடித்து மிரட்டிய வாலி படத்தில் சிங்கிள் ஆளாக சிம்ரன் நடிப்பு அரக்கியாகவே மாறி மாஸ் காட்டியிருப்பார்.
300 நாள் ஆச்சு: லைகாவை காணவில்லை.. விடாமுயற்சி டைட்டில் விட்டு 300 நாளாச்சு படத்தோட அப்டேட் என்னாச்சு என அஜித் ரசிகர்கள் பதாகைகளை ஏந்தியே கேள்வி எழுப்பி தங்கள் அலப்பறையை கிளம்ப ஆரம்பித்துள்ளனர். லைகா சீக்கிரமே அஜித் ரசிகர்களுக்காக படத்தை முடித்து ரிலீஸ் செய்ய வேண்டும் என்கிற கோரிக்கைகளும் எழுந்துள்ளது.
ப்ளூ சட்டை மாறன் கலாய்: அந்த பதாகையை பார்த்த ப்ளூ சட்டை மாறன் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில், "இவனுங்க வேற.. அடிக்கடி தமாசு பண்ணிக்கிட்டு.." என அஜித் ரசிகர்களுக்கு இப்போதைக்கு அப்டேட்டே கிடைக்காது என்கிற தொனியில் பங்கமாக கலாய்த்துள்ளார். விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பே இந்நேரம் முடிந்து மே 1ம் தேதி அஜித் பிறந்தநாளுக்கு வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், படப்பிடிப்பு இன்னமும் தொடங்காமல் இருப்பது மேலும், காலதாமதமாக படம் வெளிவரும் என்பதை தெரிவிக்கிறது.



Click it and Unblock the Notifications











