Blue Sattai Maran: ஆன்டி இண்டியன் 2 எப்போ வரும்? அஜித், விஜய், சூர்யா, ரஜினியை வம்பிழுத்து பதில்!
சென்னை: ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களை கலாய்த்து வரும் நிலையில், அவரது ரசிகர்களையும் சோஷியல் மீடியாவில் மரண பங்கம் செய்து வருகிறார்.
சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம் 75 கோடி வசூல் ஆனது என்கிற அறிவிப்பு வெளியான நிலையில், உன் வாய் உன் உருட்டு என்கிற அர்த்தத்தில் படுமோசமான ஆபாச வார்த்தையை பயன்படுத்தி ட்வீட் போட்டு ஏழரையை கூட்டி இருந்தார்.

ஏற்கனவே அந்த படத்தின் தயாரிப்பாளர் ப்ளூ சட்டை மாறன் உடன் சண்டை போட்ட நிலையில், தொடர்ந்து வச்சி செய்து வரும் ப்ளூ சட்டை மாறன் தற்போது தான் இயக்கிய ஆன்டி இண்டியன் 2 படம் எப்போ வரும் என கேட்கும் ரசிகர்களுக்கு இதோ என் பதிலடி என ஒரு பதிவை போட்டு ரணகளப்படுத்தி உள்ளார்.
ஆன்டி இண்டியன் இயக்குநர்: பிரபல யூடியூப் விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் புதுப்படங்களை கழுவி ஊற்றியே ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார். மற்ற விமர்சகர்கள் சினிமா விமர்சனங்களுக்கு படக்குழு எதிர்பார்க்கிறதோ இல்லையோ ப்ளூ சட்டை மாறன் என்ன பஞ்சாயத்தைக் கூட்டி உள்ளார் என்பதில் பலரும் மிகுந்த ஆர்வத்துடன் உற்று நோக்கி வருவது அவருக்கு மிகப்பெரிய மைலேஜாக மாறி உள்ளது.
சினிமா விமர்சனங்களை தாண்டி ஆன்டி இண்டியன் எனும் படத்தை இயக்கி உள்ளார் மாறன். அந்த படத்தை தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்ட நிலையில், வழக்கில் வென்று படத்தை வெளியிட்டார். ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு அந்த படம் ஓடவே இல்லை.
ட்விட்டர் சண்டை: விஜய், அஜித் ரசிகர்களை விட மோசமாக நெகட்டிவிட்டியுடன் ட்விட்டரில் தொடர்ந்து சினிமா பிரபலங்களுடனும் முன்னணி நடிகர்களுடனும் சண்டைப் போட்டு வருகிறார் ப்ளூ சட்டை மாறன்.
புதிய படங்கள் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் என அனைத்தையும் ட்ரோல் செய்வது மற்றும் அந்த படங்கள் எந்த ஹாலிவுட் மற்றும் கொரிய படங்களில் இருந்து காப்பியடித்து எடுக்கப்பட்டது உள்ளிட்ட விவரங்களையும் போட்டு வெளுத்து வாங்கி வருகிறார். சமீபத்தில், சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படம் அவரிடம் வசமாக சிக்கியது. மடோன் அஸ்வின் இயக்கிய மண்டேலா படமும் காப்பி படம் என சமீபத்தில் ட்வீட் போட்டு சர்ச்சையை கிளப்பி உள்ளார்.

ஆன்டி இந்தியன் 2 எப்போ வரும்: மற்ற நடிகர்களின் ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் இவரை கழுவி ஊற்ற ஆன்டி இண்டியன் 2 எப்போ வரும் என கேட்டு கலாய்த்து வந்த நிலையில் தற்போது அதற்கு பதிலடியாக இவர் பதிவிட்டுள்ள ட்வீட் அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளது.
ரஜினி, விஜய், அஜித், சூர்யாவை வம்பிழுத்து: மாஸ் ஹீரோஸ் சொம்புஸ்: டேய் ப்ளூ சட்டை ஆன்டி இண்டியன் எப்போ வரும்? ஹீ ஹீ ஹீ..
மீ: அஞ்சான், விவேகம், என்ஜிகே, நேர்கொண்ட பார்வை, புலி, பீஸ்ட், தர்பார், அண்ணாத்த, ஹீரோ, பிரின்ஸ் பார்ட் 2 வரும் போது வரும்.. போ போய் உருப்புடுற வழியப் பாரு என ரசிகர்கள் தலையில் தட்டி விரட்டி விடுவது போல வீடியோ ஒன்றையும் பதிவிட்டு அடுத்த அலப்பறையை கிளப்பி உள்ளார்.


Click it and Unblock the Notifications











