அதே ட்வீட்டு.. அதே உருட்டு.. தர்பார் படத்துக்கே அனிருத் இதைத்தான் சொன்னாரா.. ப்ளூ சட்டை மாறன் கலாய்!
சென்னை: ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இந்த தடவை மிஸ் ஆகாது நெல்சன் என சொன்ன இசையமைப்பாளர் அனிருத் அந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் ஹுகும் பாடலுக்கு வேறலெவல் வைபில் இருந்தார்.
இந்நிலையில், ஜெயிலர் படத்தின் முதல் விமர்சனம் போல அனிருத் அந்த படத்தை பார்த்து விட்டதாகவும் படம் சூப்பர் என வெற்றிக்கோப்பை எமோஜிக்களை எல்லாம் பதிவிட்டு ரஜினிகாந்த் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

உடனடியாக அதை பார்த்துவிட்ட ப்ளூ சட்டை மாறன் முன்னதாக தர்பார் படத்துக்கும் இதைத்தானேப்பா சொன்ன அனிருத் என வம்பிழுத்து வெரைட்டி வெரைட்டியாக கலாய்த்து வருகிறார்.
ஆகஸ்ட் 10 ரிலீஸ்: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கடந்த சில ஆண்டுகளாகவே வெளியான பல படங்கள் விமர்சன ரீதியாக படுதோல்வியை சந்தித்து வந்தாலும், தொடர்ந்து பெரிய படங்களை தயாரித்து வருகிறது சன் பிக்சர்ஸ்.
ரஜினிகாந்தின் அண்ணாத்த, விஜய்யின் பீஸ்ட் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள ஜெயிலர் படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. சமீபத்தில் பிரம்மாண்டமாக அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவும் அதனை தொடர்ந்து ஜெயிலர் ஷோகேஸ் என அந்த படத்தின் டிரெய்லரும் வெளியானது.
அனிருத் போட்ட ட்வீட்: ஜெயிலர் படத்தின் இசையமைப்பாளரான அனிருத் ரஜினிகாந்துக்காக ஃபேன் பாய் சம்பவமாக காவாலா, ஹுகும், ஜுஜுபி என அதிரடி ஆல்பத்தையே கொடுத்துள்ள நிலையில், ஜெயிலர் படத்தை பார்த்து விட்டேன், படம் கண்டிப்பா பிளாக்பஸ்டர் ஹிட் தான் என ட்வீட் போட்டுள்ளார்.
அந்த ட்வீட்டை பார்த்த ப்ளூ சட்டை மாறன் தொடர்ந்து ராக்ஸ்டாரிடம் ரகளை செய்யும் நோக்கில் வம்பிழுத்து அவரை கலாய்த்து வருகிறார்.

தர்பார் படத்துக்கும் இதே விமர்சனம் தான்: இசையமைப்பாளர் அனிருத்தின் பழைய ட்வீட்களை கிண்டி எடுத்த ப்ளூ சட்டை மாறன் தர்பார் படத்துக்கும் அனிருத் இதே விமர்சனத்தை தான் கொடுத்துள்ளார் என பதிவிட்டு, அதே ட்வீட்டு, அதே உருட்டு என பங்கமாக கலாய்த்துள்ளார்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, சுனில் ஷெட்டி நடித்த தர்பார் படத்துக்கு தரமான பாடல்களையும் பிஜிஎம்மையும் அனிருத் இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











