Blue Sattai Maran: இனிமேல் நீ ராக்ஸ்டார் இல்லை.. ராபரி ஸ்டார்.. அனிருத்தை அசிங்கப்படுத்திட்டாரே!

சென்னை: இந்தியாவின் மோஸ்ட் வான்டட் இசையமைப்பாளராக மாறியுள்ள அனிருத்துக்கு சமீபத்தில் ஜெயிலர் படத்துக்கு இசையமைத்ததற்காக கார் எல்லாம் பரிசு கொடுத்தனர். இந்நிலையில், லியோ படத்தில் அவர் ஒரு ஆங்கில பாடலை காப்பி அடித்ததாக சர்ச்சை கிளம்பி உள்ள நிலையில், அவருக்கு ராபரி ஸ்டார் பட்டத்தை ப்ளூ சட்டை மாறன் கொடுத்து அசிங்கப்படுத்தி உள்ளார்.

Blue Sattai Maran trolls Anirudh with Robbery Star comment

கோலமாவு கோகிலா படத்தில் அனிருத் இசையமைத்த எனக்கு கல்யாண வயசு தான் பாடல் Feeling Me எனும் பாடலின் காப்பி என சர்ச்சையில் சிக்கிய நிலையில், யூடியூபில் இருந்து தூக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது லியோ படத்தின் 'ஆர்டினரி பெர்சன்' பாடல் பீக்கி பிளைண்டர் வெப்சீரிஸில் இடம்பெற்ற பாடலின் காப்பி என சர்ச்சை வெடித்துள்ளது.

குழம்பிப் போன ஒரிஜினல் இசையமைப்பாளர்: ஐ எம் அவுட்சைடர் பாடலுக்கு இசையமைத்த otnicka விடம் நெட்டிசன்கள் உங்க பாடலை அனிருத் சுட்டு லியோவில் போட்டுள்ளார் என புகார் அளிக்க அவர் இதுகுறித்து விசாரித்து விளக்கம் கொடுக்கிறேன் என்றும் தான் யாருக்கும் காப்பி ரைட்ஸ் கொடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

லோகிக்கு துரோகம்: லோகேஷ் கனகராஜ் அனிருத்தை அப்படியே நம்பி பாடல்களை போட்டுக் கொடுக்க சொல்லிடுவார் என்றும் எந்த தலையீடும் செய்ய மாட்டார் என அனிருத்தே கூறியுள்ளார். அந்த அளவுக்கு நம்பும் லோகிக்கு இப்படியொரு துரோகம் செய்யலாமா என லோகி ரசிகர்கள் கேட்க அவர் படம் முழுக்கவே காப்பி மற்றும் சுட்ட சீன்களை வைத்துத் தான் எடுத்துள்ளார் எனக் கூறி அனிருத் ரசிகர்கள் ஆஃப் செய்து வருகின்றனர்.

Blue Sattai Maran trolls Anirudh with Robbery Star comment

ராபரி ஸ்டார்: ராக்ஸ்டார் ஆக இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் இசை கச்சேரிகளை நடத்தி வரும் அனிருத் இந்தியாவிலேயே அதிகம் சம்பாதிக்கும் இசையமைப்பாளராக ராக்ஸ்டார் எனும் பட்டத்துடன் கலக்கி வரும் நிலையில், அவரை ப்ளூ சட்டை மாறன் ராபரி ஸ்டார் என வெளுத்து வாங்கி உள்ளார்.

Blue Sattai Maran trolls Anirudh with Robbery Star comment

ப்ளூ சட்டை மாறன் விளாசல்: "வெளிநாட்டு மியூசிக்கை திருடி தொடர்ந்து அசிங்கப்பட வேண்டியது. ஆனா பேரு மட்டும் Rock Star.
Robbery Star னு மாத்திக்கலாம். இதெல்லாம் ஒரு பொழப்பு. கொஞ்சநாள் முன்னாடி ஒருத்தன் சொன்னான்... இவன் இளையாராஜாவும், ரஹ்மானும் கலந்த கலவையாம். ப்ளடி." என திட்டி உள்ளார். அனிருத் ஸ்பானிஷ் பாடல்களை திருடி இசையமைத்து வருவதாக லியோ படத்தை பார்த்து விட்டு வெளியே வந்த ரசிகர்கள் சிலரும் விமர்சித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X