மார்வெலை காப்பாத்துங்க முதல்ல.. டெட்பூல் & வோல்வரின் படத்திற்கு ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்!
சென்னை: சூப்பர் ஹீரோ படம் என்றாலே உலகத்தை காப்பாற்ற வேண்டும் என்கிற எழுதப்படாத விதிதான் இந்த படத்தின் கதையாகவும் இருக்கிறது. இதுபோல இதுவரை ஒரு லட்சம் படங்கள் வந்துவிட்டன. ஒரு லட்சத்து ஒன்றாவது படமாக இந்த டெட்பூல் & வோல்வரின் படம் வெளியாகி இருப்பதாக ப்ளூ சட்டை மாறன் ஓப்பனிங்கிலேயே சிக்ஸர் விளாசி விட்டார்.
பல நூறு கோடி பட்ஜெட்டில் மார்வெல் தொடர்ந்து செத்துப்போன சூப்பர் ஹீரோக்களை எல்லாம் எழுப்பி உலகத்தை காப்பாற்ற போராடி வருகிறது. முதலில் அந்த சூப்பர் ஹீரோக்கள் உலகத்தை காப்பாற்றுவதை விட மார்வெலை காப்பாற்றினால் நல்லா இருக்கும் என ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தில் பங்கமாக கலாய்த்துள்ளார்.

படம் ஏ சான்றிதழ் படம் என்பதால், தமிழ் டப்பிங் உள்பட அனைத்திலும் ஆபாச வசனங்கள் தாண்டவம் ஆடுவதாகவும் ப்ளூ சட்டை மாறன் விமர்சித்துள்ளார்.
டெட்பூல் & வோல்வரின்: டெட்பூல் படங்கள் என்றாலே இயக்குநர் முதல் தயாரிப்பாளர் வரை அனைவரையும் சகட்டு மேனிக்கு ட்ரோல் செய்து ரசிகர்களை சிரிக்க வைத்து விடும். அதே வேளையை இந்த படத்திலும் ரியான் ரெனால்ட்ஸ் சிறப்பாக செய்துள்ளார். ஆரம்பத்தில் அவெஞ்சராக வேண்டும் என சென்று மொக்கை வாங்கி வரும் அவரை டிவிஏ ஆட்கள் பிடித்துக் கொண்டு சென்று அழிந்து வரும் உன் உலகத்தை காப்பாற்ற லோகனால் தான் முடியும் என சொல்ல, இறந்து போன வோல்வரின் முதல் பல வேரியண்ட்களை தேடிச் சென்று கடைசியாக ஒரு குடிகார வேரியண்ட்டை கண்டுபிடித்து தனது உலகத்தை காப்பாற்ற டெட்பூல் போராடுவது தான் இந்த படத்தின் கதை.
வோல்வரின் வொர்ஸ்ட்: வோல்வரின் இந்த படத்தில் மீண்டும் வந்தாலும், அவருக்கு பெரிதாக ஸ்கோப் இல்லை. கடைசி வரை படத்தில் டெட்பூல் தான் ஸ்கோர் செய்கிறார். அவர் தான் இந்த படத்துக்கே ஹீரோவாக தெரிகிறார் என ப்ளூ சட்டை மாறன் வோல்வரின் கதாபாத்திரத்தை டம்மி செய்து விட்டார் இயக்குநர் எனக் கூறியுள்ளார்.
மொக்கை வில்லி: டெட்பூல் மற்றும் வோல்வரினுக்கு வில்லன் யார் என்று பார்த்தால் ரொம்பவே வீக்கான வில்லியை அறிமுகம் செய்து வைத்து உசுரை வாங்குறாங்க என விமர்சித்துள்ளார். படத்தில் இடம்பெறும் ஆபாச வசனங்கள் எல்லை மீறி செல்வதாக தெரிந்தாலும், அந்த காட்சிகளுக்குத்தான் தியேட்டரில் ரசிகர்கள் சிரிக்கின்றனர். பிளேடு ஹீரோவை எல்லாம் காட்டுறாங்க, ஆனால், அவர் எல்லாம் டொக்காகி விட்டார் என சோலியை முடித்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.


Click it and Unblock the Notifications











