Blue Sattai Maran Devil Review: மெகா சீரியலை ஸ்லோமோஷன்ல பார்க்க தெம்பு இருக்கா?.. டெவில் விமர்சனம்!
சென்னை: மிஷ்கின் இசையமைத்து அவர் தம்பி ஆதித்யா இயக்கியுள்ள உள்ள டெவில் படம் பிப்ரவரி 2ம் தேதி வெளியானது. இந்த படத்தில் விதார்த், பூர்ணா, திரிகுன் மற்றும் சுபஸ்ரீ என 4 பேர் லீடு ரோலில் நடித்துள்ளனர். இந்த 4 பேரை சுற்றியே ஒட்டுமொத்த படத்தையும் உருவாக்கி உள்ளனர். நேற்று வெளியான இந்த படத்திற்கு ப்ளூ சட்டை மாறன் கலவையான விமர்சனத்தை கொடுத்திருக்கிறார்.
மைனா படத்தின் மூலம் ஹீரோவான விதார்த் அதற்கு முன்பே பல படங்களில் துணை நடிகராக நடித்திருக்கிறார். மைனா படம் விதார்த்துக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தாலும், அதன் பின்னர் அவர் நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வந்தாலும் வசூல் ரீதியாக எந்தவொரு படமும் அவருக்கு பெரிதாக கை கொடுக்கவில்லை.

அஜித் தம்பியாக: வீரம் படத்தில் சிறுத்தை சிவா அஜித்தின் தம்பியாக விதார்த்தை நடிக்க வைத்திருப்பார். மைனா படத்திற்கு பிறகு விதார்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் என்றால் அந்த படத்தைத் தான் சொல்ல முடியும். கடந்த ஆண்டு வெளியான இறுகப்பற்று திரைப்படத்திலும் விதார்த்தின் நடிப்பு பிரம்மாதமாக இருந்திருக்கும். தொடர்ந்து நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் விதார்த் மிஷ்கின் தம்பி ஆதித்யா இயக்கி உள்ள டெவில் படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.
பூர்ணா: 2004ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான மஞ்சுபோல் ஒரு பெண்குட்டி படத்தில் நடிகையாக அறிமுகமான பூர்ணா பல மலையாள படங்களில் நடித்து வந்தார். அதன் பின்னர் தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் அறிமுகமானார். கொடைக்கானல், கந்தகோட்டை, துரோகி, ஆடு புலி என பல படங்களில் நடித்து வந்தார். ஆதித்யா இயக்கத்தில் வெளியான சவரக்கத்தி படத்தில் நடித்த பூர்ணா மீண்டும் அவர் இயக்கத்தில் தற்போது டெவில் படத்தில் நடித்துள்ளார்.
இதுதான் கதை: கணவர் விதார்த்துடன் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் பூர்ணா முதல் சீனில் சோகத்துடன் கார் ஓட்டி வரும் போது தெரியாமல் ஒருவர் மீது காரில் மோதி விடுகிறார். அவருக்கு அதனால் விபத்து ஏற்பட்ட நிலையில், அவரை மருத்துவமனையில் அனுமதித்து பார்த்துக் கொள்கிறார். நடிகர் திரிகுன் மற்றும் பூர்ணா இருவருக்கும் இடையே ஏற்படும் நட்பு காதலாக மாறுகிறது. வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்து வரும் பூர்ணாவிடம் அவரது கணவராக நடித்துள்ள விதார்த் மண்டிப் போட்டு அழுது நான் இதுவரை ஒரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பில் இருந்து மோசம் போய் விட்டேன் என்னை மன்னித்து விடு என கதறி அழ, கணவருடன் சந்தோஷமாக வாழ ஆரம்பிக்கிறார் பூர்ணா. ஆனால், திரிகுன் இவர்கள் வாழ்க்கையில் டெவிலாக வந்து என்ன செய்கிறார் என்பது தான் கதை.
ஸ்லோமோஷனில் மெகா சீரியல்: இந்த படத்தை பார்த்த ப்ளூ சட்டை மாறன் படத்தின் கதையே புரியவில்லை என்றும் அரை மணி நேரத்தில் சொல்ல வேண்டிய கதையை இழுவையாக இழுத்து ஸ்லோமோஷனில் மெகா சீரியலை ஓடவிட்டதை போட்டு எடுத்துள்ளனர். மேலும், இந்த படம் பேய் படமா? திகில் படமா? இந்து படமா? கிறிஸ்துவ படமா? என்றே தெரியாத அளவுக்கு பல குழப்பத்துடன் எடுத்து வைத்து உயிரை வாங்குகின்றனர் என வெளுத்து வாங்கி உள்ளார்.


Click it and Unblock the Notifications











